பொன்னமராவதி மறவன் ராச ராச மாறாயன்
இரண்டாம் ராஜ ராஜ சோழன் கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் இராச இராச தேவர்க்கு யாண்டு
…………
பொன்னமராவதி மறவன் உசித இராசஇராசனான அரச கம்பீர மாறாயன்
பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டு தொகுதியிலிருந்து.
இடம்:அரியலூர் அர்த்தமண்டபம் ஜகதிப்படை கீழ்பகுதிகாலம்::இராசகேசரிவர்மன் ராஜாதித்த சோழன் கிபி(956)செய்தி:வன்னாடு(வளநாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான அக்கோபுகழரையர்ஏழு கழஞ்சு பொன் கொடுத்துள்ளார்.
செய்தி”ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிபன்மருக்கு யாண்டு………பரமேஸ்வரனும் புசங்க ..கன் மறவனும் மாதேவபட்டனும்.
பனையூர் குளமங்களத்தில் இருக்கும்மறவரில் பரியேறு சேவகன்.பனையூர் குளமங்கள மறவரில்வீரதிருவாண்டான்இடம்:கோவில் தெற்குகாலம்: சுந்தரபாண்டியன் 13 ஆம் நூற்றாண்டுசெய்தி:பெருவாயில் நாடாழ்வான் அயிலராயனின் மறமுதலிகள்கொடுத்த கல்வெட்டு…கல்வெட்டு:திரிபுவன சக்கரவர்த்திகள் சோனாடு……….……….இவ்வூர் மறமுதலிகள் வெட்டி குடுத்தோம்
இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்
காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)
செய்தி:வன்னாடு(வளநாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் வரி அளவை நிர்மானம்
இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்
காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)
செய்தி:வன்னாடு(வாணர் நாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் மனைவி தன் குலதெய்வமான பகவதிக்கு நந்தா விளக்கு வைத்தல்.
முடிச் சோழ வாணகோவரை யனாகிய தொங்கல மறவன்:
கல்வெட்டின் பாடம்:1 ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜராஜ2 கேசரி பன்மற்கி யாண்டு 7 ஆவ3 து வாணகோப்பாடிப் பெண்4 ணைத் தென்கரை இராஜகண்ட பு5 ரத்தில் காந நங்கைய்க்கு ஸ்ரீமன்மு6 ம்முடிச் சோழ வாணகோவரை7 யனாகிய தொங்கல மறவன் வை8 ய்த்த திருநொந்தா விளக்கு ஒன்று9 ஒன்றிநால் ஆடு … இது பந்மா10 ஹேச்வர ரக்ஷை
றிப்பு: சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.
விளக்கம்: செய்திக்கட்டுரையில், அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறவில்லை. ஆனால், இரண்டாம் வரியில், அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறும் பகுதியில், ஏழாம் ஆண்டைக் குறிக்கும் …எண் குறியீடு “எ” என்பது தெளிவாகப் புலப்படுகிறது. எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 992 எனலாம். கொற்றவையைக் குறிக்கும் … “காந நங்கை” என்னும் சொல் கல்வெட்டுகளில் மிகுந்த புழக்கத்தில் இல்லை எனத்தெரிகிறது. “காடு கிழாள்” என்னும் சொல்லுக்கு ஒப்பான ஒரு சொல்லாக இதைக் கருதலாம். ”நங்கை” என்னும் சொல் இக்கல்வெட்டில் சொல்லின் இறுதியில் கூடுதலாக “ய்” என்னும் மெய் சேர்ந்து “நங்கைய்” என எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து முறையைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் காணலாம். அவற்றில் (பிராமிக் கல்வெட்டுகளில்), “ப(ள்)ளிய்” என்றும், “கணிய்” என்றும் ”அந்தைய்” என்றும் பல இடங்களில் வருவதைக் காணலாம். 5-ஆவது வரியின் இறுதியிலும், 6-ஆவது வரியின் தொடக்கத்திலும் சேர்ந்து “மும்முடிச்சோழன்” என்னும் சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இப்பெயருக்கு முன்னொட்டாக “ஸ்ரீமன்” என்னும் வடசொல் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது வியப்புக்குரியது. ஏனெனில், 10-நூற்றாண்டில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளில் “ஸ்ரீமன்” என்னும் சொல் பயின்று வரக்காணோம். இச்சொல், விஜயநகரர், நாயக்கர் காலத்துப் பயன்பாடு. கொடையாகக் கொடுக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை 96 என்று செய்திக்கட்டுரை கூறுகிறது.
இடம்:சிவகங்கை மாவட்டம்,வண்ணரிருப்பு சிவன் கோவில்காலம்: சுந்தரபாண்டியன் 13 ஆம் நூற்றாண்டுசெய்தி:மறமாணிக்க ஈஸ்வரமுடைய நாயனாருக்கு நாண்கு ஊரார்கள்சேர்ந்து வழிபாட்டு செலவிற்கு நிவந்தம் அளித்தது.கல்வெட்டு:…சோனாடு வழங்கிய சுந்தரபாண்டி தேவர்க்கு யாண்டு..……ஸ்ரீ புண்டரிகநல்லூர் மறமானிக்க ஈசவரமுடைய நாயனார்க்கு
காலம் :15 ஆம் நூற்றாண்டு
இடம்:பனையூர் -காணாடு
செய்தி :
பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்
கல்வெட்டு:
இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம்
திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.
காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு
செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:
1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்
மாதன் மக்கள்:
கல்வெட்டு என்: 33:2
“இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்”
“மாதன் மக்கள் என்பது மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள் பாற்கல் செய்து கொத்துள்ளனர்.
சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
“”இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்”
பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
“”இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்”
பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:கல்வெட்டு என்: 33:34″இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்”
பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.
சாமந்தார்:கல்வெட்டு என்: 33:27″”இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்”
சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.
வாள்வீசிகாட்டினான்:கல்வெட்டு என்: 33:32″”இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்”
குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..
சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:
கல்வெட்டு என்: 33:34″இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்”
குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.
இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.
நன்றி:திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்அப்போது அய்யனார் சிலையடியில்”இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”
என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாககருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினதந்தி
நன்றி:தமிழ்நாடு தொல்லியல் துறைபுதுக்கோட்டை மாவட்டம்
பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டு தொகுதியிலிருந்து.
இடம்:அரியலூர் அர்த்தமண்டபம் ஜகதிப்படை கீழ்பகுதிகாலம்::இராசகேசரிவர்மன் ராஜாதித்த சோழன் கிபி(956)
மறமன்னராகிய சேதுகாவலன் மீனாட்சி தேவன் கோத்திரத்து பழனியப்பன் அம்பலம்
இரும்பாழி மறவன் அரசன் தேவரான அநபாய நாடாழ்வான்” இராஜ இராஜ கலிங்கு செய்வித்தான் என குலோத்துங்கன் கல்வெட்டில் வருகிறான்.
“மறவன் பன்மனான தென்னன் நிலமை அழகிய நாடாழ்வான்” எனும் மறவன் மறக்குல விநாயக பிள்ளை சிலையை சாற்றியதை சுந்தரபாண்டியன் கல்வெட்டு கூறுகின்றது.
அரசு:
ஆண்டு:15-ஆம் நூற்றாண்டு
செய்தி :
இந்த முகவனையும் திருநிலைகாலும் கொவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைகுடி ஆண்டார் முற்பாடு கொடாதார் தன்மம்..……
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்………………
நன்றி:தமிழ்நாடு தொல்லியல் துறை(ஆவணம்)