Author Archives: குவைத் பாண்டியன்

தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு அவிநாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

அவிநாசி : “”தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு இருந்துள்ள செய்தி பற்றி, அவிநாசியில் புதிதாக கண்டுபிடிக்கபட்ட கல்வெட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன,” என கல்வெட்டு ஆராய்ச்சியா ளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.அவிநாசி, வ.உ.சி., குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியான இவர், கொங்கு மண்டல கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து … Continue reading →

Posted in கல்வெட்டு | Tagged , , | Leave a comment

குளித்தலை அருகே ராஜராஜசோழன் கால கோவில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் … Continue reading →

Posted in சோழன் | Tagged , , , | Leave a comment

யார் இந்த சோழர்கள் ?

  சோழர் காலம் : தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ … Continue reading →

Posted in சோழன் | Tagged , , , | Leave a comment

குடுமியான்மலை -1

குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் … Continue reading →

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment

பச்சையப்ப அகமுடைய முதலியார் கல்வெட்டு

காஞ்சீபுரம் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாள் என்பவருக்கும் பெரியபாளையத்தில் 1754 ஆம் ஆண்டு பச்சையப்பர் பிறந்தார். பிறக்கு முன்னரே தந்தையாரை இழந்தார். ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் ஐந்து வயது பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை … Continue reading →

Posted in கல்வெட்டு | Tagged , , | Leave a comment

சோழர் படை

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் … Continue reading →

Posted in சோழன் | Tagged , | Leave a comment

தஞ்சை அருகே கோயிலில் முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அடஞ்சூரில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆர்வலர்கள் மன்னை ராஜகோபால சாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயில் கர்ப்பக்கிரக கதவின் இடது மற்றும் வலது புற … Continue reading →

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

மாங்குளம் கல்வெட்டு

மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் … Continue reading →

Posted in கல்வெட்டு, பாண்டியன் | Tagged , | Leave a comment

புகழூர்க் கல்வெட்டு

கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த … Continue reading →

Posted in கல்வெட்டு, சேரர் | Tagged , | Leave a comment

இராமு தேவர்

இராமு தேவர் என்பவர் நேதாஜி பிரித்தானிய அரசை எதிர்க்க உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் என்ற படைப்பிரிவின் ஒற்றர். பள்ளிப் பருவம் : இவர் இராமநாதபுரம் மாவட்டம் தும்படைக்கா கோட்டையில் இராமலிங்க தேவர் என்பவருக்கு பிறந்தார்.தனது ஏழாம் வயதில் தந்தை மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு வேலைக்கு சென்றதால் இவரும் அவரோடு இருக்க நேர்ந்தது. அங்கு ஆரம்ப … Continue reading →

Posted in இராமு தேவர் | Tagged , | Leave a comment