Author Archives: குவைத் பாண்டியன்

முக்குலத்தோர்களின் முன்னோர்களான நாகர்கள் நாடாண்ட வரலாறு

(1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் எழுதிய வி.கனகசபைப்பிள்ளையின் அறியாமை) முன்னுரை. .கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்..  தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க … Continue reading →

Posted in தேவர்கள் | Tagged , | Leave a comment

“பெரியதேவர்” இராசராச சோழன்

மனோகரா திரைப்படத்தில் கடைசி காட்சியில் இளவரசன் மனோகரன்(சிவாஜி கணேசன்) கைகள் இரண்டும் இரண்டு இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அத்தாணி மண்டபத்தில் இணைத்து பூட்டப்பட்டிருக்கும். அவ்போது மனோகரனின் தாய்(அந்நாட்டின் அரசி கண்ணம்மா) வீரவசனம் பேசி முக்குலத்தோரைபெருமை படுத்துவார். அவ்வசனம் வருமாறு: “மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எழு!! உன் உடலில் ஓடுவது வீர மறவர் குல ரெத்தம் என்பது … Continue reading →

Posted in சோழன் | Tagged , , | 1 Comment

மறவர் படை

ஆதிகாலம் முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள் உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்புமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் … Continue reading →

Posted in மறவர் | Tagged , | 1 Comment

பாரிவேந்தனும் மலையமான் மன்னவனும்

பார்கவ குலமென்பது முக்குலத்தில் ஓர் குலமான கள்ளர்குல பிரிவின் தொன்மையான சோழ நாட்டு அரசவம்சத்தவர்களில் ஓர் குழுவினரின் பட்டமாகும்.,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,சேதிராயர்கள் முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள். சேதிநாடுஎன்றநடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர்,மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக சுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும் குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள்என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன.

Posted in பாரிவேந்தன் | Tagged , , | Leave a comment

மனுநீதிச் சோழன் -1

மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். வரலாற்றில் இவ்வாறான மன்னன் ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த கதையாகும். இக்கதை … Continue reading →

Posted in சோழன் | Tagged , | Leave a comment

சிதிலமடைந்த மனுநீதிச்சோழன் சிலை சீரமைக்கப்படுமா?

புற்கள், செடி கொடிகள் மண்டிக் கிடக்கும் கல் தேர் மண்டபம். திருவாரூர் தியாகராஜ சுவாமிகோயிலில் உள்ள கல் தேரில் சிதிலமடைந்துள்ள மனுநீதிச்சோழன் சிலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற திருவீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தேர் உள்ளது. இந்தத் தேர் மனுநீதிச்சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய … Continue reading →

Posted in சோழன் | Tagged , | Leave a comment

மனுநீதிச்சோழன்

மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் கம்பீரமாக இருப்பது மனு நீதி சோழ சிலையாகும். இந்த சிலை பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு: மனு நீதிச்சோழன் அல்லது மனுநீதி கண்டசோழன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன்   ஆவான். வரலாற்றில் இவ்வாறு ஒரு மன்னன்  இருந்ததற்கான சான்று … Continue reading →

Posted in சோழன் | Tagged , | Leave a comment

உடுமலை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு!

  உடுமலை அமராவதி அணை அருகே கல்லாபுரம் பகுதியில் கிடைத்த சுமார் 800 ஆண்டு பழமையான கல்வெட்டு மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்லாபுரத்தில் உள்ள வீதியொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் கல்வெட்டு குறித்து இந்த ஊரைச் சேர்ந்த ஜான்சன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரத்துக்குத்  தகவல் கொடுத்தார். சுந்தரத்தின் மூலம் கிடைத்த கல்வெட்டு தகவல்கள்: … Continue reading →

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அடஞ்சூர் அனந்தீஸ்வரர் கோவில், கர்ப்பக்கிரக கதவு அருகில், கருங்கல்லில், முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் செதுக்கிய அரிய கல்வெட்டை, தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தஞ்சையிலிருந்து, 35 கி.மீ. தூரத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள, அனந்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜேந்திர சோழனின், மூத்த மகனான ராசாதிராசனின் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Continue reading →

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , | Leave a comment

சோழமன்னர்கள் வரலாறு கூறும் கல்வெட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம் தெய்வ வழிபாட்டிலும், கோவில்கள் மீதும் சோழமன்னர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை பறைசாற்றுகிறது. தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இங்குள்ள குடவறை கோவில்கள், சமணர் படுக்கைகள், மூவர் கோவில்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள … Continue reading →

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment