Category Archives: முத்துராமலிங்க தேவர்

பசும்பொன் தேவரின் பொன்மொழிகள்

☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும். ☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும். ☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஆன்மீக ஞானி, தேசியத் தலைவர், பொதுவுடைமைத் தலைவர், வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது. பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள் ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலை, … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில்

1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார் ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவரின் நாடாளுமன்ற முழக்கம்

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி. அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல். இமானுவேல் கொலை. கீழத்தூவல் படுகொலை. 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது. தொடர் சிறை வாழ்க்கை. 1959 ஜனவரி 7ல் விடுதலை. அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம். அதனால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

திரையில் தேவர் திருமகன் வரலாறு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தமிழகத்தின் மாபெரும் அரசியல்-சமூக சக்தி. மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் முக்குலத்து சமுதாய மக்களின் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர். பல அரசியல் கட்சிகள் இன்றும் இவர் பெயரைச் சொல்லித் தான் அரசியிலில் தப்பி பிழைத்துக் கொண்டிருக்கின்றன. தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் தங்கள் கடவுளாகவே போற்றும் தலைவர். சுதந்திரப் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

நீதி மன்றத்தில் தேவர்

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,’கம்பீரமான நீதிபதி’ என்று பெயரெடுத்தவர். தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர். ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 1 Comment

தேவர் திருமகன் – வைகோ உரை -1

தேவர் புகழ் வாழ்க :எனவே, பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்!வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில், தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில், ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என உரைக்க ஒரு புலவனால் இயலும்; திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளையும் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

தேவர் திருமகன் – வைகோ உரை -2

எங்கள் வீட்டில் தேவர் : என் தந்தையார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அப்பொழுது தென்மாவட்டச் சுற்றுப்பயணத்தில் வந்த பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள், என் கிராமத்துக்கு உள்ளே வருகிறபோது, இன்றைக்கு எப்படி வாலிபச் சிங்கங்கள் தேவர் திருமகன் புகழ் பாடுவதற்கு அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி கர்ஜிக்கிறார்களோ, அதேபோல இளஞ்சிங்கங்கள், வாலிபர்கள், ‘தென்னாட்டுச் சிங்கம் வாழ்க, … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -3

சென்னையில் தேவர் : அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -4

நேதாஜி : 1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment