Category Archives: பாண்டியன்

லெமூரியா கண்டம் – பாண்டிய நாடு ஒரு ஆய்வுப்பயணம்

இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடங்குகின்றது. அதாவது கிமு 1000 வது முன்னால் இருந்து என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியா என்ற துணைக்கண்டம் பெரும் பகுதியாக இருந்தது. இந்தியா என்று இன்று சொல்லப்படும் நிலப்பரப்புக்குக் கீழே தான் லெமூரியா என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இன்றைய இந்திய துணைக்கண்டம் போலவே லெமுரியாவும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

பாண்டிய, சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் (தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும், தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை) 1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி. 1.1.1 (01) கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சிலப்பதிகாரத்தில் சோழ, பாண்டியர் நிலை:

இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது. வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே. நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் … Continue reading

Posted in சோழன், பாண்டியன், மூவேந்தர் | Tagged , | Leave a comment

பாண்டிய மன்னர்களின் பட்டியல்

பாண்டிய மன்னர்களின் பட்டியல் முற்காலப் பாண்டியர்கள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் குடுமி கடைச்சங்க காலப் பாண்டியர்கள் முடத்திருமாறன் கி.பி. 50-60 மதிவாணன் கி.பி. 60-85 பெரும்பெயர் வழுதி கி.பி. 90-120

Posted in பாண்டியன் | Tagged | 2 Comments

பாண்டியனுக்கு பின்னால் தேவர் என்று போட முடியுமா..?

பாண்டியன் என்ற பெயருக்கு பின்னால் தேவர் என்று போடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பல நாட்கள் நிலவி வந்தாலும், திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஒரு பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் உள்ள  கல்வெட்டின் ஆதாரத்தின்படி “பாண்டியன் தேவர்” என்று அப்போதிலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.அந்த கல்வெட்டில் “ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு யாண்டு” என்ற மெய் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். பொற்கை பெற்ற வரலாறு : மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பாண்டியர்கள் வரலாறு – முழு தொகுப்பு

பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். பாண்டிய நாடு : இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment