பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது
களவழி நாற்பது சோழன் மன்னர் பற்றிய போர்க்களம் பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது. போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினால் ‘களவழி’ என்றும், பாடல் தொகை அளவினால் ‘களவழி நாற்பது’ என்றும், இந் நூல் வழங்கலாயிற்று. இந் நூற் பாடல்களில் நாலடி அளவியல் வெண்பாக்களும் (22), பஃறொடை வெண்பாக்களும்(19) காணப்படுகின்றன. ஐந்து செய்யுட்களைத் தவிர ஏனையவெல்லாம் ‘அட்ட களத்து’ என்று முடிகின்றன. மூன்று செய்யுட்கள் (15, 21, 29), ‘பொருத களத்து’ என்றும், ஒரு செய்யுள் (40), ‘கணைமாரி பெய்த களத்து’ என்றும், மற்றொரு செய்யுள் (35), ‘அரசுஉவா வீழ்ந்த களத்து’ என்றும் முடிவு பெற்றுள்ளன. யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப் போரும் குறிக்கப்படினும், யானைப் போரைப் பற்றிய செய்யுட்களே மிகுதியாய் உள்ளன. களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.
Continue reading
