மாறவர்மன் சீவல்லபன் பாண்டியன் -கி.பி. 1132-1162

pandian012

மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.கி.பி. 1132 ஆம் ஆண்டு முடிசூடிய இவனது மெய்க்கீர்த்திகள் “பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப” எனத் தொடங்கும்.திருவாதாங்கூர் சேரன் வீரரவிவர்மன் இவனிடன் திறை பெற்றான்.மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சடையவர்மன் பராந்தக பாண்டியன் -கி.பி.1150-1162

pandian012

சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த இவனது மெய்க்கீர்த்தி “திருவளர் செயம் வளரத் தென்னவர் தம்குலம் வளர” என இருக்கும்.சேர மன்னனொருவனை வென்று அவனிடம் திறை வசூலித்து,காந்தளூர்ச் சாலையில் களம் அறுத்து.விழிஞத்தைக் கைப்பற்றி தென் கலிங்க நாட்டில் தெலுங்கு வீமனை வென்று திருவனந்தபுரத்தில் திருமாலிற்கு மணிவிளக்குகளும் அளித்த பெருமையினை உடையவனுமாவான்.கூபகத்தரசன் மகளை மணம் செய்து கொண்ட இவன் அளப்பன,நிறுப்பன ஆகிய கருவிகளுக்கு அரச முத்திரை இட வைத்தான்.அதுவே கயல் முத்திரையாகும்.பாண்டியர்களின் குலதெய்வமான கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நடத்தி அடியார்களுக்கு உணவிட்ட பெருமையையும் உடையவன் சடையவர்மன் பராந்தக பாண்டியன்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பராக்கிரம பாண்டியன் -கி.பி.1150-1160

pandian012

பராக்கிரம பாண்டியன் கி.பி. 1150 முதல் 1160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த இவன் திருபுவனச் சக்கரவர்த்தி எனப்பட்டம் பெற்றிருந்தான். மாறவர்மன் என்னும் அடைமொழியினையும் பெற்றிருந்தான்.’திருமகள் புணர’ என இவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.முதலாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டினை 40 ஆம் ஆண்டு ஆட்சி செய்த வேளை பராக்கிரம பாண்டியன் 23 ஆம் ஆண்டு ஆட்சியினை மேற்கொண்டிருந்தான்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சடையவர்மன் சீவல்லபன் பாண்டியன் -கி.பி. 1145-1150

pandian012

சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் ‘திருமடந்தையும் சயமடந்தையும்’ எனத்துவங்குவது குறிப்பிடத்தக்கது. இவனைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள கல்வெட்டுக்கள் பல நெய்வேலி,மதுரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வீரகேசரி பாண்டியன் -கி.பி. 1065-1070

pandian012

வீரகேசரி கி.பி. 1065 முதல் 1070 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி புரிந்த மன்னனாவான். சீவல்லப பாண்டியனின் மகனான இவன் சோழ மன்னனான வீரராசேந்திரனுடன் 1065 ஆம் ஆண்டளவில் போர் செய்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரகேசரியின் இறப்பிற்குப் பின்னர் வீரராசேந்திரன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் இவன் மகனான அதிராசேந்திரனும் ஆட்சி செய்து வருகையில் கி.பி. 1070 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த காரணத்தினால் பாண்டிய நாட்டில் ஆட்சிகள் சீராக அமைக்கப்படவில்லை. கி.பி. 1081 வரை பாண்டிய மன்னர் சிலர் ஆண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சீவல்லப பாண்டியன் -கி.பி. 945-955

pandian012

சீவல்லப பாண்டியன் கி.பி. 945 முதல் 955 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இரண்டாம் இராசேந்திர சோழன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த சமயம் சோழ மன்னனிற்குத் திறை செலுத்தி வந்த காரணத்தினால் விடுதலை பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது.கி.பி. 1054 ஆம் ஆண்டளவில் சீவல்லப பாண்டியனின் பட்டத்தரசியால் சோழ நாட்டுத் திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கப்பட்டது.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

அமர புயங்கன் பாண்டியன்-கி.பி. 930-945

pandian012

அமர புயங்கன் கி.பி. 930 முதல் 945 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்திருந்தான் அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராசராசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் சோழ நாட்டினையும் பாண்டிய நாட்டுடன் இணைத்து ராசராச மண்டலம் எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தான். அமர புயங்கன் ஆட்சிக் காலத்தில் இவனது தலைமையின் கீழ் பல குறுநில மன்னர்கள் ஆட்சி பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வீரபாண்டியன்-கி.பி. 946-966

pandian012

வீரபாண்டியன் கி.பி. 946 முதல் 966 வரை ஆட்சி புரிந்தவனாவான்.மூன்றாம் இராசசிம்மனின் மகனான இவன் கி.பி. 946 ஆம் ஆண்டில் தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். சோழாந்தகன்,பாண்டி மார்த்தாண்டன் போன்ற சிறப்புப்பெயர்களை இவன் பெற்றிருந்தான் என திருப்புடைமருதூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி,இராமநாதபுரம்,திருவாங்கூர் போன்ற இடங்களில் வீரபாண்டியனைப் பற்றியக் கல்வெட்டுகளைக் காணலாம். வீரபாண்டியனின் 9 மற்றும் 10 ஆம் ஆண்டு ஆட்சிக் காலங்களில் குறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திருமங்கலம் வட்டம்,கீழ்மாத்தூர்க் கோயில் போன்ற பகுதிகளில் காணலாம்.

சோழரிடமிருந்து முதலில் பாண்டிய நாட்டினை மீட்டு பின் முதல் கண்டராதித்தன் இராட்டிரகூட மன்னன் மூன்றாங் கிருட்டிணதேவனிடம் போர் புரிந்து தோல்வியுற்றதனால் பாண்டிய நாட்டினை இழந்தான் எனக் கருதப்படுகின்றது. சோழ மன்னர்களிற்குக் கப்பம் கட்டாமல் தன்னுரிமை ஆட்சியினை நடத்திய வீரபாண்டியனின் தகவல்களைக் கூறும் கல்வெட்டுக்கள் மதுரை,நெல்லை,இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

சேவூர்ப் போரில் வீரபாண்டியன் தோற்றான் என சுந்தரசோழனின் கல்வெட்டொன்றில் “மதுரை கொண்டகோ இராச கேசரிவர்மன்” எனவும் ‘பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.சோழ மன்னனுக்குத் துணையாக கொடுப்பாலூர் மன்னன் பூதவிக்கிரம கேசரி வீரபாண்டியனுடன் போர் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.’சோழன் தலைக்கொண்டான் கோவீரபாண்டியன்’ என தன்னைக் குறித்துக் கொண்ட வீரபாண்டியன் கொங்கு நாட்டினை தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான்.இவன் பெயரால் வீரபாண்டி என்ற ஊர் ஒன்று உள்ளதுகொல்லிமலையில் பாண்டியாறு என்னும் ஆறு இவன் பெயரில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.வீரபாண்டியனின் 20 ஆண்டு ஆட்சிக் காலக் கல்வெட்டுக்களே இன்றளவும் உள்ளன. இப்பாண்டிய மன்னனின் ஆட்சியின் பின்னர் சோழப்பேரரசினால் பாண்டிய நாடு ஆட்சிசெய்யப்பட்டது.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

மூன்றாம் இராசசிம்மன் பாண்டியன்-கி.பி. 900-945

pandian012

மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தகப் பாண்டியனின் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன்,இராச சிகாமணி,சீகாந்தன்,மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம்,தேவதானம்,பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.

 

மூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள் :

1-மந்தர கௌரவ மங்கலம் என அழைக்கப்பெற்ற நற்செய்கைப்புத்தூர் என்னும் ஊரை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும் மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது சின்னமனூர்ச் செப்பேடு.

2-முதற் பராந்தகச் சோழன் கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன் போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் திருவாங்கூர் நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

3-பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் இரண்டாம் பிருதிவிபதியின் கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராந்தகப் பாண்டியன் -கி.பி. 880-900

pandian012

பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். அண்ணனின் இறப்பிற்குப் பின்னர் முடிசூட்டிக் கொண்டான். சேர மன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலியில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே மூன்றாம் இராசசிம்மன் ஆவான்.

பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள் :

கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு பிரமதேயம், பள்ளிச் சந்தகளும் அளித்து உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்கிரன் கோட்டை என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான்

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment