சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்-கி.பி. 1564-1604

pandian012

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான ‘நைஷதம்’ என்னும் நூலினை ‘நைடதம்’ என மொழி பெயர்த்த இவனிற்கு இராமகிருஷ்ணர் என்ற வடமொழி அந்தணர் உதவிகள் பல செய்தார். கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

நெல்வேலி மாறன் பாண்டியன் -கி.பி. 1552-1564

pandian012

நெல்வேலி மாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகனான இவன் வீரபாண்டியன்,குலசேகர பாண்டியன்,பொன்னின் பாண்டியன்,தர்மப் பெருமாள்,அழகன் பெருமாள் போன்ற பெயர்களினையும் உடயவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் தென்காசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராக்கிரம குலசேகரன் -கி.பி. 1543-1552

pandian012

பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543 முதல் 1552 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சடையவர்மன் சீவல்லப பாண்டியன் -கி.பி. 1534-1543

pandian012

சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகனானான இம்மன்னன் பாண்டியராச்சிய தாபனாசாரியன், இறந்த காலமெடுத்தான் போன்ற பட்டங்களினை உடையவனும் ஆவான். திருவாங்கூர் நாட்டில் உதயமார்த்தாண்டவர்மன் என்ற சேர மன்னன் ஆட்சி செய்து வந்தான் அவன் தென்பாண்டிய நாட்டினை கைப்பற்றினான் இச்சேர மன்னனைப் பற்றிய கல்வெட்டுக்கள் பிரமதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு போன்ற ஊர்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்பாண்டி நாட்டினை சேர மன்னனிடம் தோற்ற சடையவர்மன் சீவல்லப பாண்டியன் விஜயநகரப் பேரரசனான அச்சுததேவராயரிடம் முறையிட்டான் அவனும் பாண்டிய நாட்டினை மீட்டுக் கொடுத்தான். உதயமார்த்தாண்டவர்மன் விஜயநகரப் பேரரசிடம் கப்பம் கட்டாதிருந்த காரணத்தினாலும் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கேட்டுக் கொண்டதற்கிணையவும் அச்சுததேவராயர் இவனுடன் போர் செய்து வெற்றி கொண்டார். தென்பாண்டிய நாட்டினை மீட்டுக்கொடுத்த காரணத்தினால் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் தனது மகளை அச்சுததேவராயனுக்கு மணம் முடித்து வைத்தான் என்பது வரலாறு.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

குலசேகர தேவன் -கி.பி. 1479-1499

pandian012

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவான். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன்,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவன் காலத்திலேயே குலசேகர தேவன் என்ற பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் -கி.பி. 1473-1506

pandian012

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவான். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன்,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவன் காலத்திலேயே குலசேகர தேவன் என்ற பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் -கி.பி. 1429-1473

pandian012

இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியான இம்மன்னன் தனது சகோதரனின் ஆட்சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் -கி.பி. 1422-1463

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி.” பூமிசைவனிதை,நாவினில் பொலிய” எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான்.

ஆற்றிய போர்கள் :

திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன்.

ஆற்றிய அறப்பணிகள் :

  • விந்தனூர் மற்றும் ஜந்து ஊர்களிற்கு அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.
  • திருக்குற்றாலம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிற்கு மண்டபங்கள் அமைத்தான்.
  • நெல்லை சிவன் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான் என மெய்க்கீர்த்திகளில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • தென்காசி குன்றமன்ன கோயிலைக் கட்டியெழுப்ப உத்தரவிட்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அங்கு பல சிற்பங்களினையும் அமைக்க உத்தரவிட்டான். இவ்வாலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், விழா எடுக்கவும் தேவதானம், இறையிலியாக பல ஊர்களை உதவினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டு முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
  • தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
  • தென்காசிக் கோயிலில் இவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் எழுதிய பாடல்கள் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலிலேயே பிற்காலத்தில் வந்த பாண்டிய மன்னர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.
  • செங்கோல் ஆட்சியை நடத்திய சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தென்காசி பாண்டியர்களில் முதல் மன்னனான சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றறிந்தவுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதற்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார் சடைவர்மன் பராக்கிரம பாண்டியன்.

    தென்காசி பாண்டியர்களின் குல குருவான விந்தையர் சித்தரின் சமாதி. குருவை வணங்கி நிற்கும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

pandian012

சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276 முதல் 1293 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தான். சேலம், கடப்பை, தென்னார்க்காடு போன்ற பகுதிகளினையும் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் -கி.பி. 1268-1281

pandian012

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இராக்கள் நாயகன் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றிருந்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது இளவலான இம்மன்னன் அவனின் ஆட்சிக்குத் துணையாட்சி புரிந்தான் என திருவெண்ணெய் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. ‘திருமகள் செயமகள்’,’திருமலர் மாது’ என இவனது மெய்க்கீர்த்திகள் தொடங்கும். தை மாதம் அஸ்ட நாளில் பிறந்த இம்மன்னனது கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, தென்னார்க்காடு போன்ற பகுதிகளில் காணலாம். சிவன், திருமால் கோயில்களிற்கு நாள் வழிபாடுகள் நடைபெற இறையிலி நிலங்களினை அளித்து தென்னார்க்காடு, திருநறுங் கொண்டையில் அமண்பள்ளி ஒன்றும் அமைத்தான். இப்பள்ளி நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி என்ற பெயரினைப் பெற்றிருந்தது. தனது பிறந்த நாளில் தைத் திங்கள் திருநாளினை நடத்த இறையிலி நிலம் அளித்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment