முக்குலத்து இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன?

தேவர் புகழ்
தற்போது முகநூலில் இளைஞர்கள் தங்கள் ஆர்வமிகுதியால், பசும்பொன் திருமகனின் தலையை மட்டும் தங்கள் அபிமான நடிகர்களின் படங்களில்  ஒட்டி வெளியிடுகின்றனர். அவரின் கையில் அரிவாளை கொடுக்கின்றனர். உண்மையில் தேவரின் புகழை பரப்ப வேண்டும் என்றால் இளைஞர்கள் அனைவரும் தேவரின் வாழ்க்கை வரலாறை படிக்க வேண்டும். அவரது பேச்சுக்களை வாசித்து அறிய வேண்டும். அதன் பின்னர் அவரது கருத்துக்களை பின்பற்ற வேண்டும், பரப்ப வேண்டும். அதுவே அவரது புகழை பரப்புவதற்கான சரியான முறையாகும்.
சுயசாதிப் பெருமையை தவிர்த்தல்
தேவர்கள் வீரம் நிறைந்தவர்கள். பண்டைக் காலத்தில் படை வீரர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் இருந்தவர்கள். நமக்கு ஒரு பெருமை மிக்க வரலாறு உள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அதேவேளையில், இந்த பெருமைகளை நாம் இன்னும் எத்தனைகாலம் சொல்லி அதை வைத்தே நாம் நம் தினசரி வாழ்க்கையை ஓட்டுவது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதாவது நாம் நமது பெருமையை விட்டுக் கொடுக்காமல் அதேவேளையில் பொது சமுதாயத்தில் நமது நியாயத்தை பேசி நமது உரிமைகளை எப்படி நிலைநாட்டுவது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

Continue reading

Posted in தேவர் | 5 Comments

சுந்தரபாண்டியன் திரைப்படமும்! – தேவர் இனமும்!

(தேவர் சமுதாயத்தை சார்ந்த திரைக்காவியம்)
படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி – மதுரை மாவட்ட பகுதியை உள்ளடக்கிய ஊர்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம் இது.
 டைட்டில் முடிந்த அடுத்த காட்சியே, சுந்தரபாண்டிய தேவர் யென்ற சீயான் (பாட்டனார்) போட்டோவை காண்பிக்கிறார்கள். அதை வணங்கிய படியே சசிகுமாரின் அப்பா. தத்தாவின் பெயரான சுந்தரபாண்டியன் தான் சசிகுமாருக்கும்.
 அடுத்து ரஜினி பாணியை பின்பற்றும் விஜய் – சிம்பு மாதிரி ஒப்பனிங் சாங். சசிகுமார் படம் முழுவதும்  ரஜினி மாதிரியே இமிடேட் செய்து நடித்துள்ளார். ரஜினியின் ரசிகராகவே இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

Continue reading

Posted in தேவர் | Tagged | 4 Comments

தேவர்தள வாசகர் கடிதம்!

தேவர்தளத்திற்கு வணக்கம்,
உங்களது தேவர் தளம் மிக தரமாக செப்பனிட்டமைக்கு நன்றி! அதில் சில வரலாற்று  விசயங்களை பதிந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குற்றப்பரம்பரை மற்றும் நேதாஜி பற்றி படிக்கும்போது தேவரின்&சுபாஷ் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் நான் முக்குலத்தோர் இல்லை. பல நாட்கள் ஏங்கியதுண்டு அக்குலத்தில் பிறக்காததற்கு. காரணம் நான் தேவர் வீட்டு மக்களுடன் நெருங்கி பழகி இருக்கேன். ரொம்ப ரொம்ப அன்பையும் சப்போர்டையும் எந்நேரத்திலும் தரும் வல்லமையும்,விவேகத்தையும்  கொண்டவர்கள்.(மன்னார்குடி தேவர், உள்ளிக்கோட்டை தேவர்). சில அரசியல் வியாபாரிகள் தங்களது மேல் சில பிரத்தியேக குணங்களை திணித்து காட்டுவதும். அதை பத்திரிகைகள் (தினமலர்) வசைபாடுவதும் வழக்கமாக கொண்டுள்ளது எனக்கே மிகவும் வருத்தமா இருக்கும். குறிப்பா சினிமா துறையில் காவிரி மாவட்ட தேவர்களின் பின்புல உழைப்பு என்றும் பாராட்டத்தக்கவை! (பாடல் ஆசிரியர்,நடிப்பு). நான் என்றுமே உங்கள் சமூகத்துடன் மோதல் ஏற்படும்போது காரணங்களை ஆராய்வேன் அப்போது அம்மோதல்களின் ஆழம் அரசியல் லாபத்துக்காகவே என்று தெளிவுபடும். ரெண்டு தரப்பினுயும் பொறுமையாக அலசி ஆராய்ந்து செயல்படாத மக்குகள் இருக்கிறார்கள் என்று என்னும்போதுதான் கொஞ்சம் வருத்தம். 

 

Continue reading
Posted in தேவர் | Leave a comment

பொய்யான PCR வழக்குகளால் சூறையாடப்படும் பெண்கள்!

மாணவிகளின் கல்வியை அழித்து ஒழிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் பாலியல் அராஜகங்கள்:
 – பிரபாகரன் (அச்சமில்லை இதழ்)
பெண்கல்வியை வலியுறுத்தி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பெண்கல்வியைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. பெண்கல்வியில் அக்கறை கொள்ளாத தேசத்தலைவர்கள் இல்லை. 
‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்’ தன் புதல்விக்கு சொல்வது போல பெண்குழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவுமுக்கியம் என்பதைப் போதிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
இப்படி எல்லோராலும் வலியுறுத்தி சொல்லப்படும் பெண்களின் கல்வி முன்னேற்றத்தை அழித்து ஒழிக்கும் எமனாகிக் கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகளால் வளர்த்துவிடப்பட்ட ஒரு அநாகரீகக் கும்பல். 
பெண்கல்வி முன்னேற்றத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் எப்படி தடையாக இருக்கிறார்கள்? பள்ளிக்கு செல்லும் பணக்கார மாணவிகளைத் தேடித் தேர்ந்தெடுத்து தலித் மாணவர்கள் பின்தொடர வேண்டும். அந்த மாணவிகள் திட்டினாலும்; காரித்துப்பினாலும்; செருப்பால் அடித்தாலும்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவளைத தொடர்ந்து காதல் மொழி பேசி தொல்லை கொடுத்தால் அவள் மனம்மாறி அவன் வலையில் விழலாம். விழும்வரை தொடர வேண்டும். 
அப்படி சிக்குபவர்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டால் அதன்பிறகு அந்த மாணவனுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம். பண உதவியும் செய்கிறோம் எனச் சொல்லி விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அக்கட்சியின் அறிவு ஜீவிகளும்; அக்கட்சியின் நிர்வாகிகளாகவே செயல்படும் காவல்துறை தலித் அதிகாரிகளும் பயிற்சி மையங்களே நடத்துகிறார்கள். Continue reading
Posted in தேவர் | Leave a comment

முன்னாள் ச.ம.உ வெள்ளைசாமி தேவர் – வெட்டிக்கொலை!


முன்னாள் ச.ம.உ வெள்ளைசாமி தேவர் – வெட்டிக்கொலை!

கமுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெள்ளைசாமி தேவரை ஆகஸ்ட் 31ஆம் தேதி (இன்று) பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொன்ற சமூக விரோதி கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம். மீண்டும் தலைதூக்கும் தலித் சாதிவெறி கும்பலை உடனடியாக கைது செய்து, மீண்டுமொரு “கீழத்தூவல் கலவரம்” ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தேவரினத்தவர்கள் சார்பாக ‘தேவர் தளம்’ வேண்டுகோள் விடுக்கிறது. கமுதி பகுதியை சார்ந்த தேவரினத்தவர்கள் ‘கீழராமநதி’ யென்ற திரு.வெள்ளைசாமி தேவரின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்ட வேண்டுகிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், திரு.வெள்ளைசாமி தேவரின் ஆன்மா இறைவனடி ஆத்மார்த்தமாய் சேரவும் வேண்டுகிறோம்.


– தேவர்தளம் குழுவினர்.


Posted in தேவர் | Leave a comment

தேவரை சிறையில் தள்ளிய காங்கிரசின் சூழ்ச்சி!

டந்த  2011ஆம் வருடம் செப்டெம்பர் 20 அன்று பெரியார் திராவிட கழகத்தின், மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது, காமராஜருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு போடப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். எந்தவித நேரடியான அடிப்படை  ஆதாரமே இல்லாமல் பல மாதகாலங்கள் சிறையில் அடைத்து, பசும்பொன் தேவர் அவர்களை துன்புறுத்திய அந்த வழக்கின் உண்மைத்தன்மையை மீண்டுமொருமுறை தலித் / பெரியாரிய / தமிழ் இயக்கங்களில் தலைவர்கள் மத்தியிலேயே வெளிப்படுத்தி அந்த மேடையில் மற்ற யாருமே அதை மறுப்பு கூறாமல் மௌனம் காக்கவைத்த அந்த நிகழ்வை ஏற்படுத்திய பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி அவர்களுக்கு அனைத்து தேவரின மக்களின் சார்பாக நன்றியை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), உள்ளிட்ட பலர் குழுமியிருந்த அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:
“ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”
இதுதான் அவர் பேசியதின் சாராம்சம்.
இந்த கருத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ‘வினவு’ என்கிற இணையத்தின் கட்டப்பஞ்சாயத்து கும்பல், தனது தலித் பாசத்தையும், தலித் அல்லாதோர் மீதான தனது வெறுப்பையும் பதிவேற்றி தங்களது முகமூடியை அடிக்கடி கிழித்து கொள்கின்றனர். உண்மையிலேயே இந்த ‘வினவு’ இணையத்தளமானது, இந்திய – தமிழக மக்களை சீர்குலைக்கும் நோக்கிலேயே செயல்படுகிறது. மக்களாட்சியை விரும்பாத இந்த வினவு கும்பல், இதுமாதிரியான சில்லறைத்தனமான அரசியலையே ‘ஊடகம்’ என்ற பெயரில் கையில் எடுத்து பிழைப்பு நடதுக்கின்றனர். ஏது எப்படியோ பெ.தி.க. வழக்கறிஞர் துரைசாமி போன்றோர் இன்னமும் இங்கே மேடைகளில் தன்னிலை மறந்து உண்மையை உரக்க சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவரினம் யென்றும் தங்களது ஆதரவை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும்.
தேவர்தளத்திற்காக,
இரா.ச.இமலாதித்தன்
Posted in வினவு | Tagged , , | 1 Comment

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு
உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும்  நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
Continue reading
Posted in வரலாறு | Tagged , | 7 Comments

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!

இணையத்தில் தலைத்தூக்கும்  தலித் முகமூடி சாதிவெறி!
இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், உள்ளத்து வன்மங்களும் தான் இதன்மூலம் வெளிப்படுகிறது. எப்போதும் இல்லாது, இனி வரும் காலங்களில் அவர்களது சூழ்ச்சியை உடைத்தெறிய தேவரின மக்கள் அனைவரும் தனது ஒற்றுமையை வலுபடுத்த வேண்டும்.
இருக்க இடம் கொடுத்து, உழைக்க நிலம் கொடுத்து, பல நூற்றாண்டுகளாக தேவரினைத்தை சார்ந்த முன்னோர், ‘பள்ளர்’ இனத்தின் மக்கள் மீது வைத்துள்ள பாசமும், பரிவும் அன்று போல என்றும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்,  சாதியின் அடிப்படையிலான ஒதிக்கீட்டால் அரசு வேலை,  நல்ல வருமானம், பணம் கிடைத்த உடன், அவர்களுக்கு புகழ் யென்ற போதையும், மனனர் பரம்பரை யென்ற வரலாறும் தேவைப்படுகிறது. புகழுக்காக பொய்யாக திரித்து எழுதி தினம் தினம் ஒரு புதுப்புது வரலாறை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள்.
Continue reading
Posted in இணையம் | Tagged | 1 Comment

மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு

கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

முதற்போர்

இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.

Continue reading

Posted in வாண்டாயத் தேவன் | Tagged , | 1 Comment

சோழரின் கீழ் தென்னகம்

இந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் குருக்கள், அர.சம்பகலக்ஷ்மி போன்ற வரலாற்றுக் கோட்பாட்டாளர்களுக்கும், கே.வி.ரமேஷ், எம்.டி. சம்பத், கட்டி, இராகவ வாரியார், நடன.காசிநாதன் போன்ற கல்வெட்டு ஆய்வாளர்களுக்கும், வெ.வேதா சலம், சொ.சாந்தலிங்கம், ச.ராசகோபால், சு.ராச வேலு, வீ.செல்வகுமார், கா.இராஜன் போன்ற skilled researchers களுடனும், ர.பூங்குன்றன், பர்டன் ஸ்டெயின், நொபொரு கரஷிமா, ரொமிலா தாப்பர் போன்ற கருத்துநிலையினைக் கட்டமைக்கும் அறிஞர்களுடனும் இணைந்து பணியாற்றுகிறார்.
Posted in சோழன் | Tagged , | Leave a comment