சமூக நினைவுகளும் வரலாறும்

                                                                             சமூக நினைவுகளும் வரலாறும்

ஆ.சிவசுப்பிரமணியன்

சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில்  பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில்  ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக  வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு  குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ   அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத்  தொடர்கின்றன. இந்நினைவானது அடித்தள மக்களின் வரலாற்று வரைவிற்குப் பெரிதும்   துணைநிற்கும் தன்மையது.
அடித்தள மக்கள் தம்வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய அவலங்களுள் பாலியல்  வன்முறையும் ஒன்றாகும். இன்றுவரை பல்வேறு வடிவங்களில் இது தொடர்கிறது.  இராமநாதபுரம் மன்னர்களின் ஆட்சியில் அடித்தள மக்களின் மீது ஏவப்பட்ட  பாலியல் வன்முறை குறித்த சமூக நினைவுகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | 1 Comment

பாண்டியன் திராவிடனா?

மஹாபாரதத்தில் சஞ்சயன் விவரித்த பாரதவர்ஷத்தின் தென் பகுதி நாடுகளில், திராவிடம், கேரளம், சோள தேசம் என்னும் பெயர்களைக் காண்கிறோம்.
இவற்றுள் கேரளமும், சோள தேசமும் தொடர்ந்து அதே பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் திராவிட தேசம் என்னும் பெயரில் ஒரு நிலப்பகுதி சங்க நூல்களிலும், பிற்காலத் தமிழ் மன்னர்கள் குறித்த விவரங்களிலும் காணப்படவில்லை.
அதே போல பாண்டிய தேசம் என்னும் பெயரும் சஞ்சயன் கொடுத்துள்ள வர்ணனையில் இல்லை.
அதனால் பாண்டிய தேசம் என்பதை அந்த நாளில் திராவிட தேசம் அழைத்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அதையும் ஆராய்வோம்.
பாண்டிய தேசம் என்ற பெயரில் ஒரு நிலப்பரப்பை மஹாபாரதம் சொல்லவில்லையே தவிர, பாண்டிய மன்னனைப் பற்றியும், பாண்டியனது படைகளைப் பற்றியும் விவரங்கள் உள்ளன.
மஹாபாரதத்தில், மொத்தம் 13 இடங்களில் திராவிடர் என்ற சொல்லும், 6 இடங்களில் பாண்டியர் என்ற சொல்லும் வருகிறது.
Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்

தமிழ்நாட்டிலுள்ள சாதிகளில் ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர் சாதியும் ஒன்று. இது முக்குலத்தோர் என அழைக்கப்படும் “கள்ளர்” “மறவர்” “அகமுடையர்” சாதிகளில் மறவர் சாதியின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

Continue reading

Posted in மறவர் | Tagged | 8 Comments

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும்
சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

பொன் மாளிகைத் துஞ்சிய தேவரான சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழி என்று இரு மகன்களும் குந்தவை என்று ஒரு மகளும் இருந்திருக்கின்றனர். சுந்தர சோழன் இறப்புக்கு முன்பாகவே ஆதித்த கரிகாலன் சில சூழ்ச்சிக்காரர்களால் இரண்டகமாகச் சாகடிக்கப் பெற்றிருக்கிறான்

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

`சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடை மைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடைய சாதியம், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபட்டுள்ளது. சாதியைப் போலவே இந்தியாவின் மதமான இந்துமதம் தோன்றியக் காலத்தையும் வரையறுத்துக் கூறுவது கடினம். மதத் தலைவர்களின் காலத்தை வைத்தே மதங்களைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது. ஆனாலும் இந்து மதத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லாததால் நிறுவனத்தலைவர் இதற்கு இல்லை. சாதிகளின் தொகுப்பாகவே இந்துச் சமூகம் உள்ளது என்பதே ஆய்வாளர் களின் முடிவாகக் காணப்படுகிறது. மேலும் இந்தியச் சமூகத்தில் மதம், கடவுள் இரண்டுமே சாதியத்தை நிலைநாட்டப் பயன் படுத்தப்படுகின்றன.

Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

ஜல்லிக்கட்டு

ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக்
குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும்
வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

Continue reading

Posted in மறவர் | Tagged | Leave a comment

பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் தமிழ்ப்புலமை

தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் — ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள்.) ஆனால் அவரது தேசீயத்தையும், தெய்வீகத்தையும் அறிந்தவர்களில்கூட எத்தனை பேருக்கு அவரது தமிழ்ப்புலமையும், தமிழாராய்ச்சித் திறமையும் தெரியுமோ தெரியாது. மதுரகவி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கையில், மதுரகவி வழிவந்தவரும், அனேகமாகத் தேவர் திருமகனாரால் பெரிதும் பண்படுத்தப் பட்டவருமான திரு கோவிந்தராஜன் எழுதிய குறிப்பு ஒன்றைப் படித்தேன். நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ளாத தேவரின் அந்த முகத்தை அனைவரும் அறிய இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தொடர்வது திரு கோவிந்தராஜன் எழுதியது.
Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | 1 Comment

உடையாண்டியம்மா சங்கரக்குட்டி தேவர்

ஆ.சிவசுப்பிரமணியன்
கோவில்பட்டியிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வெம்பக்கோட்டை என்னும் கிராமம். இங்கு தேவர் சாதியினரால் வழிபடப்படும் உடையாண்டியம்மா, சங்கரக்குட்டித்தேவர் கோவில், ஊரின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது.
Posted in வரலாறு | Tagged | 1 Comment

ஒரு ஜாயன்வாலாபாக்!(குற்றப் பரம்பரைச் சட்டம்)

செல்வி

ஊர் பிரமுகர்களுடன் சா. கந்தசாமி, ரோகிணி கந்தசாமி

1911-ஆம் ஆண்டில் சென்னை, மாகாணத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அதன்படி பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி… எனச் சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர்.

1920-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி பிரமலை கள்ளர்களிடம் கைரேகை எடுப்பதற்காக போலீஸ் முற்பட்டது. அதனை அவர்கள் தீவிரமாக எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். போலீஸôர் துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி உட்பட பதினாறு பேர்களைக் கொன்றனர்.

தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலுக்கு வந்த நூற்றாண்டில் அதனை எதிர்த்து உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்திற்குச் சென்று எழுத்தாளர் சா.கந்தசாமி, அவர் துணைவியார் ரோகிணி, பேராசிரியர் சுபாசு ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து பெருங்காம நல்லூரில் நடந்த சம்பவம் குறித்து இங்கே சா.கந்தசாமியுடன் நிகழ்த்திய நேர்காணல்:

Continue reading

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Tagged , | 1 Comment

பசும்பொன் தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மரியாதை!

சென்னை :

 சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ, மதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவரின் சிலைக்கு கீழே அவரது உருவ படம் வைக்கப்பட்டிருந்தது.

தேவரின் படத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 1 Comment