பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -1

அத்தியாயம் -2: ஆழ்வார்க்கடியான் நம்பி

ரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது.

உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே?

கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும்? காவேரியின் இரு கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான சோழப் பரம்பரையினர் எடுப்பித்துள்ள அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள் எவ்வளவு அழகாயிருக்கும்?

 

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்… சோழர்களின் வீரம் சொல்லும் பெரும் கதை!

                                                               பாகம் -1 புதுவெள்ளம்


அத்தியாயம் -1: ஆடித்திருநாள்

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீர நாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

இராசராட்டிரப் பாண்டியர்

இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் என்ற அரசர்கள்  மூவேந்தர்களையும் “களப்பிரர்” அடக்கி ஆண்ட போது  பாண்டியர் வம்சத்திலிருந்து  இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டியர் மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான “சூல வம்சம்”  குறிப்பிடுகிறது.

இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய பாண்டு என்னும் பாண்டிய மன்னன் அதற்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட  மித்தசேனன் என்னும் மன்னனை தோற்கடித்து அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு இராசராட்டிர ஆட்சியை தொடங்கி வைத்தான்.  தாதுசேனன் என்ற  இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன் ஆறு இராசராட்டிர பாண்டியர் மன்னர் ஆட்சியிலும்  இராசராட்டிரம் மீது படையெடுத்தான்.

அனைத்து படையெடுப்பிலும் பாண்டிய மன்னர்களுக்கே வெற்றி கிட்டினாலும் திரிதரன் மற்றும்  தாட்டியன் போன்ற இராசராட்டிரப் பாண்டியர்கள் இவனால் கொல்லப்பட்டனர். முடிவாக ஆறாம் இராசராட்டிரப் பாண்டிய மன்னனான  பிட்டியன் ஆட்சியில் அவனைக்கொன்று இலங்கையைக் கைப்பற்றினான். அதிலிருந்து இராசராடிரப் பாண்டியர் ஆட்சி முடிவு பெற்றது.

Posted in பாண்டியன் | Tagged , , , | Leave a comment

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன் கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் “ஆரியப்படை” கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி “சேரர்” “சோழர்” பலரையும் வென்றவனும் ஆவான்.

சேரன் “செங்குட்டுவன்” காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே “வடநாடு “ஆரிய அரசர்கள் அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பாண்டிய மன்னனின் உயிரைக் காத்த மகேசன்

பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபாகு என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இவன் இரவில் தலைநகரை காவல்காக்கும் பொறுப்பையும் ஏற்று இருந்தான். குறிப்பாக, வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கூடுதலாக காவல்காத்து வந்தான்.

ஒருநாள் வழக்கம்போல் வீரபாகு பாண்டியன் காவல் பணியில் இருந்த போது, வெளியூர் சென்ற அந்தணர் ஒருவர் நள்ளிரவில் வீடு திரும்பினார். அவரை திருடன் என்று கருதிய பாண்டிய மன்னன் அவரை கொன்று விட்டான்.

இதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு மன்னன் ஆளானான். மேலும், அவனது நாட்டிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையை பயன்படுத்தி சோழமன்னன் விக்ரமன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். இதனால் பெரும் கவலை அடைந்த பாண்டிய மன்னன் வீரபாகு, இறைவனை வேண்டினான்.

 

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , , | Leave a comment

கள்ளர் இனம்தன்னை பற்றி: சிலபகுதிகள்:

 

‘… கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி-

முகமதியர் ஆட்சி,
விஜய நகர ஆட்சி,
பாமினி சுல்தான் ஆட்சி,
முகலாயர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி,
நாயக்கர் ஆட்சி,
தக்காண சுல்தான் ஆட்சி கடைசியாக
ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி ஆட்சிகள் ஏற்பட்டதினால்,

இவர்கள் தங்கள் தொழிலாகிய நிர்வாகம், போர்படை தொழில் முதலிய தொழில் நிலைகளை இழக்கும்படிநேறிட்டது. மற்ற வகைத் தொழில் முறையை அறியாததால், வாழ்கையில் பல எதிர்மாறான நிலையை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வளமான நீர் வசதியுள்ள பகுதிகளில் வாழ்ந்தோர் விவசாயத்தை ேற்கொண்டனர். மற்ற வறட்சியான பகுதிகளில் வாழ்ந்தோர் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்டனர்.

Continue reading

Posted in தேவர் | Tagged , , | 1 Comment

அன்றொருநாள்: அக்டோபர் 12:II

II. தந்தையின்பணி: நான் அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்பேன். ஆங்கிலேயனின் போலீஸ் துறை தான் இந்த Criminal Tribes Act 1871 ஐ நடத்தியவர்கள்; முன்பின் சொல்லாமால் அட்டெண்டென்ஸ் எடுத்து, கைது செய்பவர்கள். கொடுமைக்காரர்கள் எனப்பட்டவர்கள். அதே ஆங்கிலேய நிர்வாஹம் கள்ளர் புனர்வாழ்வு (Kallar Reclamation) என்ற அருமையான திட்டம் ஒன்றை அதே போலீஸ் துறை மூலம், ஆனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் வழிமுறையில் சிறப்பாக நடத்தி வந்தது. அப்பா ஒரு ஜூனியர் கூட்டுறவுத்துறை அதிகாரி.

வீட்டு முகப்பு அறை தான் ஆஃபீஸ். ஆனால், அப்பா தினந்தோறும் முகாம் போய் விடுவார். இரவு பத்து மணிக்கு தான் ஆஃபீஸ். ஒரு தெலுங்கு மாமா கணக்கு எழுத வருவார். அம்மா தான் புதிய இரும்பு கலப்பை, விதை தானியம், மருந்துகள் எல்லாம் கொடுப்பார். மாலை ரேடியோவில் விவசாய அறிவுரை கேட்கக்கூட்டம்.  போலீஸ் கெடுபிடியை தாண்டி, வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கள்ளர் பிரான்கள் கடனை அடைக்க நடு நிசியில் வருவார்கள். அவர்களுக்கு அப்பாவின் ரூல் தடியிடம் பயம். அவருக்கு இருந்த அதிகார பலம், வரவு செலவுக்கு அனுமதிக்கப்பட்டது எல்லாம், இன்று அந்தத் துறைத்தலைவருக்கே கிடையாது.

Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தலித் மக்கள் மீதான தேவரின் பரிவு

ஒருமுறை தேவர் அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தார். அந்த நண்பர் அந்த பகுதியிலே பெரும் செல்வந்தர்.விருந்துக்கு முன்பு தேவரும் அந்த நண்பரும் அவர்களின் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அதில் ஒரு சிலபெண்கள் கிணற்றுக்கு அருகில் வராமல் தங்கள் குடங்களுடன் கொஞ்சம் தள்ளி தனியே நின்று கொண்டிருக்க அந்த செல்வந்தரின் மகனான சிறுவன்தான் இறைத்து அந்த பெண்களுக்கு நடந்து போய் ஊற்றிகொண்டிருந்தார். எதனால் இப்படி அந்த பெண்களையே எடுத்துகொள்ள சொல்லலாமே என்று தேவர் தன் நண்பரிடம் கேட்க அதற்கு அவர் இவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைசேர்ந்த பெண்கள் எனவே அவர்கள் இந்தகிணற்றில் தண்ணீர் பிடித்தால் தீட்டாகிவிடும், மற்ற யாரும் தண்ணீர் பிடிக்கமாட்டார்கள், அதனால் தான் இந்த ஏற்பாடு என்றார்.

Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம்

தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம்

13.02.1949 அன்று மதுரை சௌராஷ்டிரா பெண்கள் பள்ளியில் மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருக்குறள் அஷ்டாவதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய தலைமை பேருரை –

 

….மனித வர்க்கத்தினர் பல்வேறு பிரிவினராய் பல வித்தியாசங்களுடன் வாழ்ந்து வரும் இற்றைய நிலையில் தெய்வத்தன்மை பெற்ற குறள் பற்றியும் விதவிதமான வியாக்யானங்கள் கூறுபவர் உண்டு. புலமையில் மூன்று விதங்கள் உண்டு. அவை கவிப்புலமை, கலைப் புலமை, தவப் புலமை என்பர். இம்மூன்று புலமையிலும் தேர்ந்து தெளிந்த நிலைபெற்ற புலவரே இக்குறளைச் செய்தவர். இத்தெளிவுபெற்ற அறிவோர்க்கு எப்பொருளும் சமநோக்குடனே தென்படும்.

பொருள் ஒன்றோயாயினும் அப்பொருளை காண்போர் பலருக்கும் பலவிதமான அர்த்தங்களைக் கூறக் கூடியதாய் அமைந்திருக்கிறது. உதாரணமாக மழைநீர் பொழிந்ததும் அந்நீரை கழிக்கும் தூம்புகள் பல யானை, சிங்கம், முதலை போன்ற வடிவங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவ்வாறு வெளிப்படும் நீரை ஒரு சிறுவன் கண்டு சிங்கவாய் நீர், முதலை வாய் நீர் என்று கூறுகிறான்.

ஆனால் வயது முதிர்ந்த ஒருவனோ மேகத்திலிருந்து பெய்த மழை சிங்கம், முதலை போன்ற தூம்புகள் மூலம் வெளிவருகிறது என்பதைக் காண்கிறான். அதேபோல சாதாரண மனிதன் சில பெரியோர் வாக்கை கவியின் பெருமை என்று காண்கிறான். தெய்வீகம் உணர்ந்த ஒருவன் தெய்வம் தன் வாக்கை இம்மனிதன் ரூபமாக உலகுக்குத் தருகிறது என்பதை காண்கிறான். அவ்வாக்கே இத் திருவள்ளுவர் வாக்கு.

Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

சாதி அடையாளம் தேவையா?

வழக்கமாக என்னை இணையத்தில் தொடர்புகொள்ளும் சொந்தங்கள், நாம் நம்மை சாதியால் அடையாளப்படுத்திக் கொள்வது சரியா அண்ணா, இது மற்றவர்களை புண்படுத்தாதா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், ஒரு தலித் தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு கிறிஸ்தவர் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது யாரையும் புண்படுத்தாதா என்று கேட்கிறேன். அதன் பின் ஆம் என்று ஒப்புக்கொள்கின்றனர். இதனைக் கொஞ்சம் ஆராய்வோம்.

முத்துராமலிங்கத் தேவருக்குப் பின் ஒரு வலிமையான தலைவர் இல்லாத காரணத்தால் நம் சமுதாய மக்கள் திராவிடக் கட்சிகளில் சேர ஆரம்பித்தனர். அவர்கள் திராவிடர்களின் பேச்சைக் கேட்டனர். அவர்கள் சொல்வதே உண்மை என்று நம்ப ஆரம்பித்தனர்.

ராமசாமி நாயக்கரின் கொள்கையின்படி சாதியை ஒழிக்க வேண்டும், அதுவே தமிழரின் விடுதலைக்கு பயன்படும் என்று சொன்னார். இவருக்கு எப்போது இந்த ஞானோதயம் பிறந்தது? காசியில் பிராமணர்கள் சாப்பாடு தராத காரணத்தால் எச்சில் இலைகளை பொறுக்கிச் சாப்பிட நேர்ந்தபோது இந்த ஞானோதயம் பிறந்தது. அதன் பின் அவர் பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கினார்.

 

Continue reading

Posted in தேவர் | Leave a comment