ஒரு வீரப் பரம்பரையினரின் கதை !

வீராயியின் வீரம் !

வீராயி என்பவள் பாண்டிய நாட்டுப் பெண். அதனால், அவள் பாண்டிய வீராயி என்னும் பெயர் பெற்றாள். அவள் பாண்டிய நாட்டு வீரர் குடியில் பிறந்தவள். அவளுடைய தந்தை ஒரு பெரிய வீரன். அம்மாவீரனுக்கு, வீராயி என்னும் அம்மகளும், வீரப்பன் என்னும் மகனும் இருந்தனர். அவன் தன் மகளையும், மகனையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்; இருவரையும் நன்கு படிப்பித்தான்.
வீரப்பன், பாண்டியர் படையில் வீரனாகச் சேர்ந்தான். வீராயி படிப்பு முடிந்த பின்னர், வீரண்ணன் என்பவனை மணம் புரிந்து கொண்டாள். வீரண்ணனும், ஒரு சிறந்த வீரன்.
அந்நாளில் ஒரு சமயம் சேர மன்னன், பாண்டிய நாட்டைத் தாக்கினான். அப்போது ஒரு பெரும்போர் நடைபெற்றது. அப்போரில், வீராயியின் தந்தை போரிட்டான்; பகை வீரர்களில் பலரைக் கொன்று, தன் வீரத்தை விளக்கமாகக் காட்டினான்.

Continue reading

Posted in தேவர்கள் | Tagged | 1 Comment

வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே – முதுகுளத்தூ​ர் பயங்கரம்

எதிர்வினை

மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை
மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்” என்று தெளிவுபடுத்துகிறார். “இன்று நடப்பது அரசியல்ரீதியான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கையொப்பம் இட்டு அறிக்கை கொடுப்பதே பொருத்தம்; நாளைக்குப் பொதுப் பேச்சுவார்த்தை என்று கூட்டி அதில் யார் யார் அக்கறையும் ஆர்வமும் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாரும் கையொப்பம் இடுவோம்; அறிக்கை கொடுப்போம்” என்பதே தேவரின் நிலைப்பாடாக இருந்தது. அன்று நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் ஆவணமும் வழக்குமன்றத்தில் தேவர் அளித்த வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. உண்மைகளும் நடந்த நிகழ்ச்சிகளும் இவ்வாறு இருக்க, நூல் மதிப்புரையில் ஆசிரியர், “மறவர்கள் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டார்” என்று எப்படி எழுதினார் எனத் தெரியவில்லை. நூலாசிரியருக்குச் சார்பு நிலை இருக்கலாம்; சார்புநிலை இருப்பதால் தானே ஒரு நூலை எழுதுகிறார். ஆனால், மதிப்பீடு செய்கிறவருக்கு ஏன் சார்புநிலை? அல்லது ஏன் கவனமின்மை?

Continue reading

Posted in கலவரம் | 3 Comments

ஜாதியை ஒழிக்க நினைப்பவன் முட்டாள்.

சில தெளிவுகள்….
சாதி அமைப்பால் வளமையோடு இருந்தவர்களுக்கு அது வேண்டும். அதனால் பலன் இருந்தால் இனிமேலும் கண்டிப்பாக வேண்டும்.
சாதி அமைப்பால் தாழ்த்தப்பட்டு, வளம் குன்றி கூனி குறுகி இருந்தவர்களுக்கு அது வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
இது தான் வெளிப்படையான இன்றைய அனைவரின் நிலைப்பாடு.
இப்பொழுது புரிந்திருக்கும் யாருக்கு சாதி வேண்டும் வேண்டாம் என்று. இதில் காங்கேயன் யார், பிரின்சு யார் என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது.

சாதி பற்றி அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?
அதைப் பகடி செய்தும், அதன் குறைகளை மட்டும் குன்றின் மேலிட்டு வெட்டவெளிச்சமாக்கும் நடவடிக்களை ஏன் என்றால் அதற்க்கு சில பல காரணங்கள் இருக்கின்றன.

Continue reading

Posted in தேவர் | 4 Comments

பரமக்குடி கலவரம் – சாவு பற்றி…

அடிப்படை ஞானம் இல்லாமல் புலம்புவதற்கு என்றுமே முடிவில்லை தான். நமது நாட்டின் விடுதலைக்கு முன் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் இருந்த போது ஆண்டான் அடிமை முறை இருந்ததை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இன்று ஜனநாயக அடிப்படையில் எல்லா மக்களுக்குமான் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி முறை இருக்கும் நாட்டில் இன்று யாரும் யாரையும் அடிமையாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்த முடியாது. காலத்திற்கேற்ற மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்தவை, நிகழ்கின்றவை. ஆனால் இன்று என்ன நடக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தையும், இலக்கியத்தையும், மக்களின் பண்பாட்டு வீரியங்களையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது போன்ற விசவிதை தூவப்படுகிறது. அது நீச நீர் ஊற்றி வளர்க்கவும் படுகிறது. எதற்கெடுத்தாலும் ஒரு அடிமை புராணம், கோபம், எல்லாவற்றிக்கும் சாதி, எதற்கும் சாதி, எதிலும் சாதி என்ற மொன்னையான ஒற்றைப்பார்வை. அன்கில்யனின் பிரித்தாளும் கொள்கையும், மண் சாராத நாத்திகமும் இவர்களுக்கு செய்த இந்த மூளைச்சலவையை சரி செய்வது மிகக்கடினம்.

Continue reading

Posted in கலவரம் | Tagged | 6 Comments

இமானுவேல் சேகரனை கொன்றது யார்?

காந்திஜி அந்நிய துணி எதிர்ப்பை மக்களிடம் கொண்டுசென்ற அதே கால கட்டத்தில் அரிஜன மக்களை ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கும் உயர் சாதியினர் செயலை கண்டித்து, “அரிஜனங்கள் ஆலய பிரவேசம் செய்ய வேண்டும், அதற்கு தேச பக்தர்கள் வழிவிடவேண்டும்” என்று முழங்கினார். அதனால் இந்தியா முழுவதும் தேச பக்தர்கள் அரிஜன மக்களை ஆலயத்திற்கும் கொண்டு செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதையர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரிஜன மக்களை அழைத்துச் செல்ல எண்ணினார். இதனை அறிந்த சனாதனிகள் எதிர்க்க திட்டமிட்டனர். இந்த எதிப்பை சமாளிப்பதற்காக, வைத்தியநாத ஐயர், மதுரை எட்வர்டு ஹாலில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தேவரை இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டினார். பசும்பொன் தேவரும் அதற்கு உறுதியளித்தார்.

Continue reading

Posted in வரலாறு | Tagged | 12 Comments

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்

பாலபாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் பல பச்சை பிள்ளைகளுக்கு உண்மையாக நடந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கே அது…

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்:

1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய வியாபாரி நாடர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு, தேவிகுளம், முல்லைப் பெரியாறு, தேக்கடி, குமுளி, மூன்று போன்ற நாடார் இன மக்கள் வசிக்காத மூப்பனார், நாயக்கர், தேவமார், அரிசன், இஸ்லாமியர் வாழும் பகுதிகளை இணைப்பதில் அக்கறை கட்டவில்லை. இன்று வரை இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் காமராஜ் நாடார் மீது பெரும் மனக்குறையுடன் தான் கேரளா மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 20 Comments

மூன்று யுகம் கண்ட அம்மன்.

நெல்லை: பிற்கால பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஐவர் ராஜாக்கள் என்ற பெயரில் பல இடங்களில் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு குலசேகர பாண்டியன் ஆட்சி புரிந்துள்ளான். இவனது படை பலம் குன்றிய போதும் ஆன்மிகம் நாட்டம் மட்டும் குறையவில்லை.
வள்ளியூரில் நீராவி என்னும் மண்டபம் கட்டி அதனுள் வாழ்ந்து வந்த அந்தப் பாண்டிய மன்னன், தினமும் வணங்கி வந்த தெய்வம்தான் மூன்று யுகம் கண்ட அம்மன். இந்தக் கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவையனைத்தும் பாண்டியர்களின் வாழ்க்கை முறையை பற்றி விளக்குகின்றன.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | 1 Comment

பாண்டிய மன்னனின் தென்காசி..

இமயமலையில் உருவாகி, கரைபுரண்டு ஓடும் கங்கை நதியின் கரையில் அமைந்த புனிதநகரம் தான் காசி. இந்த காசி நகரம் தென்னிந்தியர்களை பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே சென்று, வரும் தூரத்தில் அமைந்திருந்தது. ஏழை மக்களும் இந்த ஆன்மிக பயன் அடைய, இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சிற்றரின் கரையில் அமைந்திருக்கும் நகரம் தான் தென்காசி. பண்டைய காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது.
“பரக்கிரம பாண்டியன்” என்ற பாண்டிய மன்னன் வடக்கே காசி சென்று திரும்பினான். அவனுடைய கனவில் சிவபெருமான் தோன்றினார். இதன் விளைவாக இங்கு 1440 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கட்ட தொடங்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு கட்டி முடி’கப்பட்டது, வானளாவிய கோபுரமும் எழுப்பப்பட்டது . இக்கோவிக்கு வந்து சிவனை தரிசனம் செய்தால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் விளைவாகவே இவ்வூரின் பெயர் தென்காசி ஆனது.
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

எதையும் சுமப்பேன் அவருக்காக!

மதுரையை வணங்காமுடி பாண்டிய மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். மனைவி விஷயத்தில் அவன் கொடுத்து வைத்தவன். கணவனின் குறிப்பறிந்து மட்டுமல்ல, குறிப்பு அறியாமலும் சேவை செய்யும் குணமுள்ளவள். இப்படி ஒரு பத்தினி அமைந்தால் மன்னனுக்கென்ன கவலை. அவன் இன்ப வாழ்வு நடத்திக் கொண்டிருந்தான்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

மலையாள முதல் இலக்கண நூல் லீலா திலகம் போற்றும் பாண்டிய மன்னன்

– கி. நாச்சிமுத்து

மலையாளத்தில் எழுந்த இலக்கண நூலாகிய லீலா திலகம் கி.பி. 1385 – 1400 – இல் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியர் இளங்குளம் அவர்கள் கணிப்பு. அவர் கருத்துப்படி இந்நூலை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. இந்நூலில் வேணாட்டுச் சேர உதய மார்த்தாண்ட வர்மன் (1383 – 1444), திருப்பாப்பூர் மூத்த திருவடி இரவிவர்மன் (1444 – 1458), விக்ரமபாண்டியன் (1400 – 1422) என்ற மூன்று மன்னர்கள் பற்றிய புகழ்ப் பாடல்கள் லீலாதிலகம் அலங்காரம் பற்றிய சிற்பத்தில் மேற்கோளாகக் காணப்படுகின்றன. இவர்கள் மூவரும் வேணாட்டு அரச குடும்பத்துடன் தொடர்புபட்டு நின்றவர்கள், இவர்கள் நூலாசிரியரை ஆதரித்த புரவலர்கள் ஆகலாம். இவர்களில் விக்கிரம பாண்டியன் இளம்பருவத்தில் முசுலீம் படையினரால் தோவாளைப் பிரதேசத்தில் கலகங்கள் நேர்ந்தபோது சண்டையிட்டவன்; இவன் மகளை வேணாட்டு இரவிவர்மன் மணந்து கொண்டான் என்று இளங்குளம் குறிப்பிடுகிறார். இதற்கு அவர் லீலாதிலக மேற்கோள் செய்யுட்களையே (203, 205, 206) சான்று காட்டுகிறார். கி.பி. 1400 – 1422 ஆண்டுகளில் அரசனாயிருந்த விக்கிரம பாண்டியன் 1365-இல் தோவாளைப் பிரதேசத்திலிருந்து வேணாட்டு மன்னர்களுடன் சேர்ந்து கொண்டு முசுலீம் படையினரை விரட்டியதையே லீலாதிலகத்திலுள்ள 205, 206 செய்யுட்கள் கூறுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அந்தச் செய்யுட்களின் பொருள் வருமாறு:

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment