வெள்ளையத்தேவன் வரலாறு.

கலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்கூட வீரபாண்டியகட்டபொம்மன் “”வரி கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரியின் கோட்டைக்கே வந்து கர்ஜித்துவிட்டுப் போகும் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான்.
ஆனால், எதிர்த்தவர்களின் தலைகள் வெட்டுப்பட்டன.
துப்பாக்கி தூக்கி வந்த வீரர்கள் பலர் கட்டபொம்மனின் வாளுக்கு இரையானார்கள். தடைகளைத்தாண்டி கோட்டைக்கு வெளியே வந்தான் கட்டபொம்மன். லெப்டினட் கிளார்க் என்ற வெள்ளைக்காரன் கட்டபொம்மனின் மார்புக்கு நேராக துப்பாக்கியைப் பிடித்தபடி தடுத்தான்.

Continue reading

Posted in வெள்ளையத்தேவன் | Tagged , | 3 Comments

அதிசய மனித சூரியன்..

அவதாரமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அதிசய மனித சூரியன்..

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ..T R மகாலிங்கம் பற்றி திரை உலகில் மட்டுமல்ல இந்திய முழுவதும் அவரை அறியாதவர்கள் இருந்ததில்லை…
அவரின் பெருமை அப்பொழுதைய பிரதமர் நேருவின் பெருமையை மிஞ்சியது,,,தமிழகத்திற்கு நேரு வரும் பொழுது கூடிய கூட்டத்தை விட இவருக்கு கூடிய கூட்டம் பன்மடங்கு அதிகம்…நேருவே இதை கண்டு அசந்து போனதாக தகவல் உண்டு..

.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | Leave a comment

சோழர்களின் பொருளாதாரப் போர்கள் :

ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக விஸ்ரூபமெடுக்கக்கூடும்.

Continue reading

Posted in சோழன் | Tagged | 1 Comment

ராஜராஜ சோழன் சமாதி!

சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன்.

Continue reading

Posted in சோழன் | Tagged | 2 Comments

தமிழக அரசிற்கு வேண்டுகோள்- தமிழ்நாடு தேவரிஸ்ட்

தமிழக அரசிற்கு வேண்டுகோள்:

உலகில் தேவர் திருமகனாரைப் பற்றி அறிந்த  பல்வேறு மதத்தினரும், இனத்தினரும் அவர் பெருமையை உலகெங்கும் பரப்பி பெருமை சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழக மக்களால் போற்றிப்பாடக் கூடியவரும் , முக்குலத்து மக்களால் தெய்வமாக வணங்கக் கூடியவருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை களங்கப் படுத்தும் விதமாக இணையதளங்களில் சில விசமிகள் தொடர்ந்து பொய் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்திய அரசாலும் , தமிழக அரசாலும் போற்றக் கூடிய தமிழக அரசே விழா எடுத்து கொண்டாடும் உன்னதமான தலைவரை இப்படி அவமதிப்பது தேசத்தையே அவமதிப்பதாக கருத்தில் கொண்டு இணையதளங்களின் வெளியிட்டுள்ள கட்டுரைகளை நீக்கவும், வெளியிட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், இனியும் அவ்வாறு தேச அவமான செயல் ஏற்படாமல் இருக்க சமூக விரோத இணையதள சர்வர் வழங்குனர்களையும் இனம்கண்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் அனைத்துலக தேவரினத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Posted in கலவரம் | Tagged | Leave a comment

கச்சத் தீவு மறவர்களுக்கு உரிமையானது – அடுக்கடுக்கான ஆதாரங்கள்

‘கச்சத்தீவு’ – தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு – தொல்லியல் துறை ஆய்வாளரும் பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதி:
சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட் டிருந்தன.

Continue reading

Posted in மறவர் | Tagged | 2 Comments

கள்ளர் குல பேரரசி செம்பியன் மாதேவியார்

செம்பியன் மாதேவி

பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவியாரும் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன், முதல் மகனான ராஜாதித்தன் போரில் உயிர் துறந்தபின் கண்டராதித்த சோழன் கி.பி. 953ல் அரியணை ஏறினார். இவரின் மனைவியே மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவியார்.இவர்களுக்குப் பிறந்த மகனே மதுராந்தக உத்தமசோழன். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்தான். மகனை வளர்க்கும் பொருப்பு செம்பியன் மாதேவியாரைச் சேர்ந்தது. கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

Continue reading

Posted in கள்ளர் | Tagged | 2 Comments

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!

கே.என்.வடிவேல்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.

ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.

Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged | 1 Comment

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? – சில முக்கிய தரவுகள்

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு


இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.
விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
Posted in சேதுபதிகள் | Tagged | 1 Comment