மகாவித்துவான் இரா.இராகவையங்கார்

“மகாவித்துவான்” இரா.இராகவையங்கார்
வளவ. துரையன்
தமிழ்த்தாத்தா உ.வே.சா., தனது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே “மகாவித்துவான்” எனப் போற்றிப் புகழ்வார். அத்தகைய உ.வே.சா.வே, மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்றதோடு, அவ்விழாவில் இரா.இராகவையங்காருக்கு “மகாவித்துவான்” எனப் பட்டமும் அளித்துச் சிறப்பித்துள்ளார்.

Posted in அகமுடையார் | Tagged | Leave a comment

அகமுடையார் குல மங்கலங்கிழார்

                                                     வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்

Mangalangkizar
தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் “வடவெல்லைத் தமிழ் முனிவர்” என்றும் “தமிழ்ப் பெரியார்” என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க தொண்டின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் மங்கலங்கிழார். 


Continue reading

Posted in அகமுடையார் | Tagged | Leave a comment

அகமுடையர் வரலாறு

அகமுடையார் வரலாறு
Aandiyappathevar.jpg Valivalamdesikar.jpg ]]Manikanayakar.jpg Pachaiyappamudaliar.jpg Naadimuthupillai.jpg Narayanasamiagampadiyar.jpg  MarudhuStamp.jpg

தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
Posted in அகமுடையார், வரலாறு | Tagged | 9 Comments

வீரபாகுதேவர்

சூரன்போர் – சூரசங்காரம் :

சூர-பத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று; சர்வ வல்லமைகளையும் பெற்றவனாக தானே திகழ வேண்டுமென சிவபெருமானை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டு; சிவனின் அருளினால் சகல வல்லமைகளையும் பெற்றதுடன், 108 யுகம் உயிர்வாழவும், 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு எந்த சக்தியாலும் தனக்கு மரணம் ஏற்படாது” என்ற வரத்தையும் பெற்றான். அதனால் ஆணவம் மேலிட இறுமாப்படைந்த சூரபத்மன் தேவர்களை எல்லாம் தேடி எதுவித அச்சமும் இன்றி சித்திரவதை செய்யலானான்.

Continue reading

Posted in வீரபாகுதேவர் | Tagged | 1 Comment

சொக்கம்பட்டி ஜமீன்

மந்திரியின் தந்திரம் :

 எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி.கீதா சாம்பசிவம்
பழைய காலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டி யென்பது ஒன்று. வடகரையாதிக்கமென்றும் அந்த ஜமீன் வழங்கப் படும். அங்கே இருந்த ஜமீன்தார்களுள் சின்னணைஞ்சாத் தேவர் என்பவர் புலவர் பாடும் புகழுடையவராக வாழ்ந்து வந்தார். அவரால் திருக்குற்றாலம், பாபநாச, திருமலை முதலிய தலங்களில் பலவகையான நிவந்தங்கள் அமைக்கப்பெற்றன. அவர் தண்டமிழ் வாணர்பால் அன்பு பூண்டு ஆதரித்துப் பெரும்புகழ் பெற்றார். மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர், செங்கோட்டைக் கவிராச பட்னாரம், கிருஷ்ணாபுரம் கவிராயர் முதலியோர் அவருடைய ஆதரவு பெற்றவர்கள். அக்காலத்தில் அவருடைய ஆட்சி சிறப்படைந்திருந்தது.
Posted in சொக்கம்பட்டி ஜமீன் | Tagged | 1 Comment

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு

முன்னுரை:

14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ஆளுநராக இருந்த ஜலாலூதீன் ஆசான் ஷா 1335ல் தன்னை சுல்தானியத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மதுரை சுல்தனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Continue reading

Posted in தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு, வரலாறு | Tagged | 7 Comments

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

ராமநாதபுரம் : ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் மன்னர் விஜயரகுநாத சேதுபதி.தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் 13ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.
Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

அழிந்து வரும் மன்னர் காலத்து அரண்மனைகள்

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் பல இன்று அழிந்து வருவதால் இதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்திலும்,மதுரை நாயக்கர் ஆட்சியிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்தது. 1502 ல் போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பின் கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முத்துகுளித்தல் மற்றும் கடல் வாணிபத்தை தங்களது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தனர்.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

நெஞ்சம் மறப்பதில்லை: பாரம்பரியம் காக்கும் ஜமீன்

உயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழைமையை பறைசாற்றத் துடிக்கும் பெரிய அறைகள் என கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது ராமநாதபுரம் ஜமீன் அரண்மனை. தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள்.
Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

வீரமங்கை ராணி வேலு நாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

இளமை

1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

Continue reading

Posted in வேலு நாச்சியார் | 1 Comment