மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

2252_bhaskara_sethupati

ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. தென் மாவட்டங்களில் மதமாற்றம் எப்படி நடந்தது என்பதற்கு இந்த வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. இனி பிரிட்டோ பாதிரியார் பற்றி படியுங்கள்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது. Continue reading
Posted in மறவர் | Tagged | Leave a comment

13ம் நூற்றாண்டு கொங்குசோழர் கல்வெட்டு:பழநி கோவில் தூணில் கண்டுபிடிப்பு

பழநி:கடந்த 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குசோழ கல்வெட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில் முன் மண்டப தென்புறத் தூணின் வட பகுதியில், வழக்கில் உள்ள தமிழ்மொழியின் முன்னோடி வடிவத்தில் 20 வரிகளைக் கொண்ட கல்வெட்டு இருந்தது. கொங்குசோழ அரசன் வீரராஜேந்திரனின் 19ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கீழமங்கலம் கல்வெட்டு

இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ஓசனூத்திலிருந்து பசுவந்தனை செல்லும் சாலையிலுள்ள கீழமங்கலத்தின் வடபுறத்தில், தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றங்கரையில் உள்ள கல்வெட்டுத் தூண்.

காலம்: கி.பி. 1162 முதல் கி.பி. 1177 வரை திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதிகளை ஆண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியராகலாம்.

செய்தி: முதுகுடி நாட்டு மங்கலமான உத்தமபாண்டியநல்லூரில் முதுகுடி நாட்டீச்சுவரமுடைய நாயனார் பூசைக்குரிய தர்ப்பைப்புல் பறித்துக் கொள்வதற்காக இவ்வூரின் நிலங்களுக்கு உரியவர்கள் வசம் அல்லது ஊர் நிர்வாக சபையார் வசம் காசு (அச்சு) வழங்கப்பட்டது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளது.


Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

ராஜராஜ சோழனின் பாட்டி வீடு திருக்கோவிலூர் :கல்வெட்டு ஆதாரம் கண்டுபிடிப்பு

ராஜராஜ சோழனின் பாட்டி ஊரான, திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில், ராஜராஜன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள், அவரது தாயின் வீரம் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இக்கல்வெட்டு இடம்பெற உள்ளது. ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவன் ராஜராஜ சோழன். இவனது புகழை தஞ்சை பெரிய கோவில் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

மூன்றாம் இராசேந்திர சோழன் கல்வெட்டு

இக்கல்வெட்டுக் கிரந்தஎழுத்தில் உள்ளது. எனவே இதன்பொருள்மட்டும் இங்கே கொடுக்கப்படுகின்றது.
“எல்லா உலகத்திற்கும் ஒப்பற்ற வீரனும், வாட் போரில் வன்மை மிக்கவனும், வீர ராக்ஷஸன் எனப் போற்றப்படுபவனும், லங்காராம என்னும் பெயருடையானும், மநுகுலத்தை உயர்த்தியவனும், அஞ்சத்தக்கப் போர்க்களத்தில் பகைவர்க்குச் சூறாவளியும், சோழர் குடிக்கு நேரும் தாழ்வினைத் தவிர்க்கும் தனி வீரனும், மூன்று ஆண்டுகள்… தரித்த முடிகளை யுடையவனும், அரசர்க்கரசும், வானுலக மகளிர் கூட்டுறவால் செருக்கிய பாண்டியன் சேரன் என்னு மிவர்கள் வெண்சாமரை வீசிப் போற்றப்பெற்ற பெருமையுடையானு்ம, பாண்டியமண்டலத்தைக் கவர்ந்த கன்னட வேந்தனை வென்றவனும், போரில் சேனைகளை யிழந்த வீரசோமேசுவரன் என்பவனால் சரணடைந்து பற்றிக்கொள்ளப்பட்ட பாதங்களை யுடையவனும், வீரர்க்கு அணிகலனாக விளங்குபவனும், ராஜபரமேசுவரன், ராஜபரம மாகேசுவரன், ராஜ நாராயணன் என்னும் பெயர்களையுடையவனும், எல்லாச் சமயங்களையும் ஒப்ப நிலைபெறச் செய்பவனும்,

யானை காலாள் முதலிய படைகளைப் புரப்பவனும், அரசியல், இசை, ஏனைக்கல்வி ஆகியவற்றில் தேர்ச்சிமிக்க தலைவனும், பகைவேந்தர் உளத்திற்குச் சல்யமென்னும் படையை ஒத்துக் கலக்கஞ் செய்பவனுமாகிய திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு…”

ஆதாரம்: தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம்- பகுதி:2, பக்கம்: 219- 220

….

Posted in சோழன் | Tagged | 1 Comment

சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது

கரூர்  அருகே, சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:உத்தம சோழன் ஆட்சி, 975 யுவ ஆண்டு, 31ம் தேதி எழுதப்பட்ட வட்டெழுந்து கல்வெட்டு, கரூர் அருகே சணப்பிரட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

உடையார்குடிக் கல்வெட்டு

தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரிவர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய (ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் வெளியிட்ட வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் தம் “சோழர் வரலாறு” (The Cholas) எனும் நூலில் மேற்குறித்த உடையார்குடி சாசனத்தின் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய செய்திகளை விவரித்துள்ளார். அப்பகுதியில் சுந்தரச் சோழனின் தலைமகனும் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலனின் கொலை நிகழ்வின் பின்புலத்தில் மதுராந்தக உத்தம சோழனின் துரோகம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தே மதுராந்தக உத்தமச் சோழன் மீது ஏற்றப்பெற்ற களங்கமாக அமைந்தது.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

திருவண்ணாமலை கல்வெட்டு

பதிவுசெய்யப்பெற்ற மொத்தக் கல்வெட்டுக்கள் 119. இவைகளில் பெரும்பாலன சோழர்காலத்தன. திருவிளக்கேற்றல், திருமஞ்சனம், திருநந்தனவனம், திருவமுது, திருவெழுச்சி, அடியார்க்கு அமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம், பொன், கால்நடை முதலியனவற்றை அளித்தமையை அறிவிக்கின்றன. பாண்டியர், பல்லவர், ஹொய்சளமன்னரான வீரவல்லாளதேவர், விஜயநகரத்து ராயர், தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர், வேளாளர் முதலியவர்கள் கல்வெட்டுக்களும் காணக்கிடக்கின்றன.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கல்வெட்டு : கங்கைகொண்ட சோழேச்சரம்

பிற்காலச் சோழர்களில் விசயாலயன் காலம் முதல், முதலாம் இராஜராஜன் காலம் முடிய (கி.பி. 846 – 1014) பத்துத் தலைமுறகைளாகத் தஞ்சாவூர் சோழமன்னர்களின் தலைநகரமாய்த் திகழ்ந்திருந்தது.

இத்தஞ்சாவூர் பாண்டி நாட்டின் எல்லகைகு அருகில் இருந்தமையால், தலைநகரம் பாண்டியர்களால் அடிக்கடித் தாக்கப்படும் என்ற காரணம் பற்றியும், அக்காலம் மாதம் மும்மாரிபெய்து கொள்ளிடப்பேராறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினமையால் முதலாம் இராஜேந்திர சோழன், (முதல் இராஜராஜ மன்னனின் மகன்) தன் குல தெய்வமாகிய தில்லை நடராசப் பெருமானதை தன் பரிவாரங்களோடு சென்று அடிக்கடி வழிபடுவதற்கு அக்கொள்ளிடப் பேராறு தடையாய் இருந்தமை பற்றியும், அக்காலம் கொள்ளிடப் பேராற்றுக்கு இக்காலம் போல் அக்க்கட்டு இல்லாமையாலும் சோழநாட்டின் நடுப் பகுதியில் தலைநகரை அமகைக வேண்டும் என்ற காரணம் பற்றியும், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டான். இங்கே தலைநகரை நிர்மாணம் பண்ணுவதற்கு வேண்டிய சுண்ணாம்பு, செங்கல் முதலியவகைள் தயாரித்த இடங்கள் எல்லாம் இக்காலம் அவ்வப் பெயர்களுடன் சுண்ணாம்புக்குழி முதலான சிற்றூர்களாகத் திகழ்கின்றன.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

பாண்டியன் சபையில் கண்ணகி

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள்.

அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment