நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி!

இந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.
உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.1893ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்.
பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர். பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ் தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.எஸ் என்பது அப்போது மிகப்பெரிய பதவி.
அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம், அரசியல், உலக நாடுகளின் வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில் நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வென்றார்.
Posted in நேதாஜி | Tagged | Leave a comment

பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் வைகோ உரை: (18.10.2008)



வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்

என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று விழா.

மாமன்னர் பூலித்தேவருக்கு புகழ் அஞ்சலி தொடுக்க ஏற்ற இடம் வாசுதேவநல்லூர் என்று சிவகங்கையில் விழா நடந்தவேளையில் நான் நம் பெரு மதிப்புக்குரிய சேதுராமன் அவர்களிடத்தில் தெரிவித்தேன். சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்கள் பெருவிழா நடத்தினார்கள். அன்றும் கருமேகங்கள் குவிந்துகிடந்தன. பெருமழையும் பெய்யத் தொடங்கியது.

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

விடுதலைப் போரை முதலில் துவக்கிய புலித்தேவன் செப்பேடு கண்டுபிடிப்பு

சென்னை : ஜூலை 12, 2008.

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் செப்பேடு, திருச்செங்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் புலித்தேவன்.

வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755ம் ஆண்டு புலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த முதல் போர். புலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்துள்ளார்.

Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | 1 Comment

மற(றை)க்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திர விடுதலைப் போர்களில் பங்கு பெற்ற தென்னாட்டு மன்னர்களில்பலரும் பிரபலம் அடைந்தாலும், முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன் ஆன”மாவீரன் பூலித் தேவன்” பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் அறிந்திருக்கவாய்ப்பில்லை.

இனி இந்தத் தலைப்பில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட சிலமுக்கியமான ஆனால் மறக்கடிக்கப் பட்ட/ மறந்து போன தலைவர்கள் பற்றி நேரம்இருக்கும்போது எழுதலாம் என்ற எண்ணம்.

Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | 1 Comment

விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவன் செப்பேடு

இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன். வரி பெறுவதற்கு வந்த அலெக்சாந்தர் கெரான் என்பவனோடு 1755இல் பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமத்துக்கு எதிரான முதல் பேராகும்.

பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்செப்பேடு 27 செ.மீ. நீளமும் 15 செ.மீ. அகலமும் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில் ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

புதுக்கோட்டை வரலாறு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு  உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம்  ( இந்தியக்   காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக “கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை” என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.

தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | 2 Comments

தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை

நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம்.

என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும் என்று. இதை விவாதத்தின் பொழுது சொன்னால் உடனேயே நாளைக்கு அறிவியல் இன்றைக்கு உள்ளது என்று சொல்வதை நாளை இல்லை என்று சொல்லும் என்பார்கள்.

Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | 3 Comments

தொண்டைமான் செப்பேடுகள்

எழுத்தாளர் / தொகுப்பாளர் : இராசு.செ

பதிப்பு :முதற் பதிப்பு (2004)

விலை :70 .00  In Rs

பிரிவு :தொல்லியல் ஆய்வு

பக்கங்கள் :232

பதிப்பகம் :தமிழ்ப் பல்கலைக்கழகம்

முகவரி :திருச்சி சாலை

தஞ்சாவூர்   613005

தமிழ்நாடு

இந்தியா

புதுக்கோட்டை, அறந்தாங்கி தொண்டைமான்கள் செப்பேடுகள் 48 ( 24 + 24 )அடங்கியுள்ளது. மாணிக்கவாசகர் அருள் பெற்ற திருப்பெருந்துறை பற்றிய 10 செப்பேடுகள் உள்ளன. மாணிக்கவாசகரை எழுந்தருளச்செய்து, பின்னே திருவாசகம் ஓதிச் சென்றதை ஒரு செப்பேடு கூறுகிறது. முதல் முறையாக அறந்தாங்குத் தொண்டைமான் அரச மரபு விளக்கம் பெறுகிறது.

….

Posted in தொண்டைமான் | Tagged | Leave a comment

பெருநற்கிள்ளி


சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கோச்செங்கண்ணன்


கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும்.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment