பசும்பொன் தேவர் ஒரு சமுதாய சிற்பி

பசும்பொன் தேவர் 1908 அக்டோபர் 30 அன்று “பசும்பொன்” என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார். 1963 அக்டோபர் 30 அதிகாலையில் மதுரை திருநகரில் காலமானார். மொத்தம் 20,075 நாட்கள் இந்த மண்ணில் வாழ்ந்த பசும்பொன் தேவர், இதில் 4000 நாட்களை சிறையிலேயே கழித்தார்.
இவர் இளமைக்காலத்தில் படித்துக்கொண்டிருந்த போது முதன் முதலாக சாயல்குடியை சேர்ந்த சேதுராமன் செட்டியார் அவர்கள், சாயல்குடியில் விவேகானந்தர் வாசக சாலையை நிறுவி, அதை தேவர் திருமகனார் அவர்களைக் கொண்டு திறந்து வைக்க செய்தார்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

வள்ளலாரின் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட பசும்பொன் .

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளற் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் தோய்ந்திருந்தார்கள்.

தைப் பூசந் தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின் சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம் அலை கடலெனத் திரண்டு வந்தது.

வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து கொள்ளாத சிலர், பெருமானின் மறைவில், பலவிதமான சந்தேகங்களை எழுப்பி, பொது மக்களை மிகவும் குழப்பி வந்தனர்.
Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

சமுதாயம், ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர்: ஸ்டாலின்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க பவளவிழா மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை திறந்து வைக்கிறார்
தஞ்சாவூர், ஜூன் 6,2010:  சமுதாயம், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர் என்றார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் முன்னேற்றச் சங்கம் சார்பில், அதன் 75 ஆம் ஆண்டு விழா, தமிழக முதல்வருக்கு நன்றி பாராட்டு விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை திறந்து வைத்து அவர் மேலும் பேசியது:
Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

பொக்கிஷம் (பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு)

ஆசிரியர்: க.பூபதிராஜா
வெளியீடு: பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 235 Views
விலை:  ரூ.600

பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம், 14, ஆண்டாள் நகர், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 720+64+16.)
Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 4 Comments

பசும்பொன் தேவர்: நடிகர் கருணாஸ் பேச்சு

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் பணியாற்றிய முத்துராமலிங்கத்தேவர் வழியை பின்பற்றி நாமும் வாழவேண்டும் என சிவகிரியில் நடந்த தேவர் ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பேசினார்.

சிவகிரி பஸ்நிலையம் முன்பு தேவர் மகாசபை சார்பில் தேவர்ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 11 Comments

முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலை….

12/07/2010

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரன் முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலையை தலைமைச்செயலகத்தில்  இன்று
தலைமைச்செயலகத்தில் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:வீரம் செறிந்த நமது தமிழ் மண்ணில், இந்திய சுதந்திரத்திற்காக வித்தூன்றிய, இலட்சக் கணக்கான தியாகச்சுடர்களில் மறவர் குலத்தின் இறுதி மன்னராக விளங்கியமுத்து விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர்!இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கு சகோதரி மகனாக 30.3.1760இல் இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்தவர் அவர்.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவரும்- பாதிரியாரும்

ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு.

“பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . . .கூடாது. . . .!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை மாணவன் பேச்சை இடைமமறித்தான் . . .!

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுக்க பசும்பொன் தேவர்:வைரமுத்து பேச்சு

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-
’’இந்த மாநாட்டுக்கு குழந்தைகளோடு வந்திருக்கும் தமிழ் பெற்றோரை பாராட்டுகிறேன். தமிழை அறியாவிட்டால், இந்த குழந்தைகள் நாளை உங்கள் குழந்தைகள் அல்ல. எனவே உங்கள் குழந்தைகளுக்கு முழு உணர்வோடு தமிழை கற்றுக்கொடுங்கள்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.

அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு statementன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!

மலர் மன்னன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர், பசுபொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட. ஆனால் காலப் போக்கில் அவரது அந்தஸ்து மறைக்கப்பட்டு, ஒரு ஜாதித் தலைவராக அவரது ஜாதியினர் குரு பூசை என்று அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதும், ஒரு சம்பிரதாயம் போல அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவதுமான நிலைமை இன்று உருவாகிவிட்டிருக்கிறது.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment