மூவேந்தர் கூட்டணி—–மௌரியர் படையெடுப்பு

கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.

மூவேந்தர் கூட்டணி

அவனின் அத்திகும்பா கல்வெட்டில்” இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் “திரமிள சங்காத்தம்”(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.
Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , | Leave a comment

இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்


இராஜராஜனின் ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு கூறுகிறது:

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்

இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம்.

Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு உக்கல் கோயிலின் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு

உக்கல் திசைகாட்டி

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டத்தில் உக்கல் என்னும் ஊர் உள்ளது.இந்த ஊரை அடைவதற்கு வந்தவாசி-காஞ்சி நெடுஞ்சாலையில் கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்(கூழமந்தல் என்பது பண்டைக்காலத்தில் சோழமண்டலம் என்னும் பெயர் உடைய ஊராகும்.இதனை ஆங்கிலத்தில் chozhamandalam என்று எழுதினர்.இதனை ஒலிக்கத் தெரியாத ஆங்கிலேயர் கூழமந்தல் என்றனர். தமிழறியாத அவர்கள் வாயில் கூழமந்தல் என்று வர அன்றுமுதல் இவ்வூர் கூழமந்தலானது. இவ்வூரில் அழகிய சிவன்கோயில் உள்ளது. சோழர்காலத்துக் கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ள இந்தக் கோயில் கலையுணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது).
Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு

இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது.

கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள்

கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்றான். பின் மலேயாத் தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்,இலங்கா சோகம்,மாபப்பாளம், இலிம்பிங்கம், வளைப்பந்தூறு, தக்கோலம்,மதமாலிங்கம் என்னும் ஊர்களை வென்றான்.பிறகும் சுமித்ராவிலுள்ள இலாமுரிதேசத்தைக் கைக்கொண்டான்; நக்கவாரத் தீவுகளை வென்றான்.மலேயாத் தீபகற்பத்தின் மேலைக் கரையிலுள்ள கடாரத்தை வென்றான்.
Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கங்கைகொண்டசோழபுரம் – மாளிகை அகழ்வாராய்ச்சி ……

மாளிகைமேடு திசைகாட்டிப் பலகை

கங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்
படித்திருக்கலாம்.
Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

வீரா ரெட்டித்தெரு காளியம்மன் கோயில்(கங்கைகொண்ட சோழபுரம்)

கூரைக் கொட்டகையில்தான் இந்த அரிய சிற்பங்கள் உள்ளன

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து நான்கு கல் தொலைவில் தெற்கே வீரா ரெட்டித்தெரு என்னும் ஊர்(பகுதி) உள்ளது.(வீரராகவ ரெட்டித்தெரு என்பது முழுவடிவம்) அங்கே புகழ்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது.கங்கைகொண்ட சோழபுரத்தின் தென் எல்லைக் காளியாக அது கருதப்படுகிறது.அங்குள்ள புகழ்பெற்ற கல் சிற்பங்கள் இங்கே காட்சிக்கு வைக்கிறேன்.பண்டைக்காலத்தில்(சோழர்கள் காலத்தில்) வட பகுதியிலிருந்து இச்சிற்பங்கள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என மக்கள் நம்புகின்றனர்.

Posted in சோழன் | Tagged | Leave a comment

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை…

அழகர் கோயில் யானை முகப்பு

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை…

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை – சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் “துறவுமேல் அழகர்” உள்ளார்.துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள கருவறையில் அடக்கம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உள்ளதே தவிர அழகருக்கு உருவம் இல்லை.

அழகர் பற்றி வாய்மொழியாகப் பல கதைகள் உள்ளன.முறைப்படி தொகுக்கப்படவில்லை. நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்தலாம்.அழகர் கடும் சினம் உடையவர் என்றும் இவர் கோயில் அடர்ந்த காசாங் காட்டுக்கு நடுவே இருந்தது எனவும் மூத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.அச்சமூட்டும் காட்டுக்கு நடுவே அழகர் கோயில் இருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் யானும் என் தந்தையார்,அம்மா,தங்கை உள்ளிட்ட குடும்பத்தினரும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குச் சென்றுள்ளோம்.
Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8).அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார்.உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம்மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டின் அரசனாக “மாந்தை” என்னும் ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன்.இவனுக்கு இரு மனைவியர் இருந்துள்ளனர். பட்டத்து அரசியாக விளங்கியவள் வேளாவிக் கோமான் பதுமன்தேவி.இவர்களுக்குக் களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் என்ற மகனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற மகனும் இருந்தனர்.

பிறிதொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் (பெயர் அறியமுடியவில்லை)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மகனாகக் கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழு குட்டுவன் என்னும் மகனும் இருந்தான்.
Continue reading

Posted in சேரர் | Tagged | Leave a comment

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?

வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன.தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா,கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும்.இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.
Continue reading

Posted in சேரர் | Tagged | Leave a comment

பாவாணர் யார்?

தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர் பாவாணர். தனித்தமிழ்   வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் . இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும்.
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.

Continue reading

Posted in பாவாணர் | Tagged | 2 Comments