உள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம்.
“அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபா
ண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை.
“காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரண்மனையில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்து குழந்தையின் பெற்றோர்கள் மன்னருடன் விவரம் சொல்லி குழந்தையை தரும்படியாக வேண்டினர். மறுத்துவிட்டான் மன்னன். பிள்ளை பாசம் பெற்றவர்களுக்கு அல்ல, வளர்த்தவனுக்கு. பயனில்லாததால் திரும்பிவிட்டனர் பெற்றோர்கள்”
குழந்தை யார்?
ஒரு நாள் மங்களத்தேவர் அவர்களின் மனைவி விறகு வெட்டுவதற்காக காட்டிற்குப் புறப்பட்டார். போகும் போது தமது கைக்குழந்தையையும் எடுத்துச் சென்றார். ஒரு மரத்தடியில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டாள். போனவள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இருட்டிவிட்டது. தூங்கி எழுந்த குழந்தை தாயைக் காணாது தவழ்ந்து சென்று அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது.