Marava Country is the only country in India having the name of caste. And it is the only tamil speaking country ruled by only tamils described in Portugese,dutch,French and British.
This is the only Country with the Caste name.
In India in colonial period and southern part before british is separated as Carnatic,Golgonda,Malabar,Tanjore,Mysore,Madura and Marava.
In the southern part Carnatic and Golgonda and mysore belong to Muslims takeover.
Only Hindu Provinces are Malabar,Madura and Marava.
Out of three Malabar ruled Malayalam speaker,Madura ruled by
telugu speaker. Tanjore ruled by Marathi speaker.
And Only Tamil speaking is Marava province King Sethupathi.
Before Europeans there is no Maps in India and the no Historical accounts marked by any historians.
Marava Country is the Only Tamil Province and Only Tamil country in the Maps.
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி அருங்காட்சியக படங்கள் 1.பூவாசி மழவராயன் சிறுவன் 2.அஞ்சாத கண்ட பேரரையன் 3.சிவனைமறவாத தேவன் பெருமாள் குட்டி பிச்சன்Continue reading →
Madura Country Manuel By J.H Nelson composed the Original Warrior and Kings of South India and Tamil nadu Especially Ramnad,Sivagangai,Madurai,TirunelVeli etc.
The Maravar or Vannian caste peculiar to Southern India. Maravars History of its own of considerable interest. To this class belonged most of the Poligars or feudal chieftains who disputed with the English tho possession of Tinnevelly during the latter half century feaudal leaders of the state. Continue reading →
கமுதி கோயில் நுழையாதே! கமுதி கோயில் நுழைவு வழக்கு தீர்ப்பு என்று
நாடார்கள் சார்பாக சிச்சிரி என்ற அறக்கட்டளை சார்பாக பிரவாகன் என்ற பிராமணரை பனித்து உருவாக்கபட்ட சகாப்தம் தான் இந்த மறைக்கபட்ட வரலாறு இதை தோண்டி தூர்வாரி குச்சியை உள்ள விட்டு அடப்பு எடுத்து கொண்டு வந்துள்ளார்களாம்.
இந்த புத்தக விலை 220 ரூபாய். இதில் என்ன நடந்தது. ஒரு சத்திரிய வர்க்கத்துக்கும் சூத்திர வர்க்கத்துக்கும் நடந்த சண்டை. தமிழில் நேராக எழுதினால் கோபப்படுவார்கள் என எழுத்தை சாய்ச்சு சாய்ச்சு எழுதி மறவர்கள் சூத்திரர்கள் எங்களுக்கு பல்லக்கு தூக்கிகள் கீழானவர் அப்புடி இப்புடி என மாய்ந்து மாய்ந்து எழுதி சுய இன்பத்தால் தங்களை மகிழ்வித்து கொண்டார்கள். Continue reading →
வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம். காலம் கடந்த கட்டுக்கதைகளின் வடிவமாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு மாற்றான தெளிவான ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவ்வரலாற்றைத் திருப்பி எழுதுவதே சரியான நடைமுறை.
வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்துகொண்டார் என்ற வரலாற்றுப் புனைவு நம்மிடையே உலா வருகிறது. மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல்களிலும், வேலு நாச்சியாரைப் பற்றிய வரலாற்று நூல்களிலும் இப்புனைவு தவறாமல் இடம் பெறுகிறது. வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்தார் என்பதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.
நல்லுறவில் விரிசல்
சிவகங்கை அரசர் முத்துவடுக நாதத் தேவர் போரில் கொல்லப்பட்ட பின்பு அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை மற்றும் மருது சகோதரர்களுடன் வேலு நாச்சியார் விருப்பாச்சிக் காடுகளுக்குச் சென்றார். வயிற்றுப் பிள்ளையுடன் சென்ற வேலு நாச்சியார், எட்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்பு சிவகங்கையைக் கைப்பற்றி அரசியாக முடிசூடிக்கொண்டார். மருது பாண்டியர்கள் வேலு நாச்சியாருக்கு மந்திரி பிரதானிகளாகவும் தளபதிகளாகவும் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சியை, வெங்கம் உடையனத் தேவருக்கு மணம் முடித்துக் கொடுத்து அவரை சிவகங்கை அரசனாக்கி இருந்தார் வேலு நாச்சியார்.
வெள்ளச்சி இளம் வயதிலேயே இறந்தவுடன், வெங்கம் உடையனத் தேவர், பெரிய மருதுவின் மகள் மருதாத்தாளை இரண்டாவதாக மணம் முடித்துக் கொண்டார். இந்த உறவில் ஏற்பட்ட கசப்பினால், வேலு நாச்சியார் தன்னுடைய இறுதிக் காலத்தில் சிவகங்கையில் இல்லாமல், விருப்பாச்சி கோபால் நாயக்கரின் விருந்தினராக இருந்து அங்கேயே இறந்தும் போனார். அந்தக் காலத்தில் அவர் மருது பாண்டியர்களைப் பற்றி, ஆங்கிலேய கவர்னரிடம் புகார் மனுவும் அனுப்பி வைத்திருக்கிறார்.
தொடக்க காலத்தில், அன்பும் ஆதரவுமாக இருந்த உறவு, பின்னாட்களில் கசப்புடன் முடிவடைந்திருக்கிறது. சிவகங்கை அரசாட்சியில் நெருக்கடியான காலத்தில் மருது சகோதரர்கள் துணையாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக, பாளையக்காரர்களின் எழுச்சியை ஒன்றிணைக்கும் பணியையும் செய்திருக்கிறார்கள் என்பதை ஆங்கிலேய அதிகாரிகளின் குறிப்புகளிலிருந்தும், கடிதங்களிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இக்குறிப்புகளில் எங்கும், பெரிய மருது வேலு நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி இல்லை.
வேலு நாச்சியார் இறந்த 1796-ம் ஆண்டு வரை அவரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எந்தக் குழப்பமும் அக்கால ஆவணங்களில் இருந்ததில்லை. சென்னை மாகாண ஆளுநர் எட்வர்ட் கிளைவ் 06.07.1801-ல் வெளியிட்ட பிரகடனத்தில்கூட, “ஒரு பெண் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதில் உள்ள பலவீனத்தைக் கொண்டு அரசியின் வழியினரான நாலுக் கோட்டை குடும்பத்தின்மீதும் அக்குடும்பத்தின் பங்காளிகள் மீதும், சிவகங்கை பகுதி மக்கள் மீதும் அவர்கள் கொடுங்கோன்மையும் யதேச்சதிகாரத்தையும் பிரயோகித்தார்கள்” என குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் என்பது மருது பாண்டியர்களைக் குறிக்கிறது.
இந்தப் பிரகடனத்திற்கு 24 நாட்களுக்கு முன்பு, கர்னல் அக்கினியூவால் விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பில், ”அரசனின் மரணத்திற்குப் பின்பு அரசியின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டதால் நாட்டில் முறைகேடான அதிகாரத்தைச் செலுத்திவருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். முறைகேடான அதிகாரத்தைச் செலுத்தி வருபவர்களாக இதிலும் மருது பாண்டியர்களே சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த இரு பிரகடனங்கள் தவிர்த்து மேஜர் வெல்ஷ், பாதர் பாச்சு, கோர்லே போன்ற மருது பாண்டியர்களின் சமகாலத்தவர்கள் எழுதிய புத்தகங்களில் இல்லாத ஒரு செய்தி, சிவகங்கை சரித்திரக் குறிப்பில் இல்லாத ஒரு செய்தி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் றெக்கைக் கட்டிப் பறந்தது. அது வேலு நாச்சியார் பெரிய மருதுவைத் திருமணம் செய்துகொண்டார் என்பது.
இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுவது, பெரிய மருதுவின் மரண சாசனம். அவருடைய மரண சாசனத்தில், தன்னுடைய மூத்த மனைவியாக பெரிய மருது வேலு நாச்சியாரைக் குறிப்பிடுகிறார் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால், மருது பாண்டியர்களைத் தூக்கிலிடும்போது உடனிருந்தவரும், மருது பாண்டியர்களின் நண்பரும் ஆங்கிலேய அதிகாரியுமான மேஜர் வெல்ஷ் மருது பாண்டியர்கள் மரண சாசனம் ஏதும் தரவில்லை என்று தெரிவிக்கிறார்.
கோர்லே, பெரிய மருது மட்டும் தனது பேரக் குழந்தைகளான பத்து, பன்னிரண்டு வயது பாலகர்களையும் தன்னோடு சேர்த்துத் தூக்கில் போடுவதற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்ததாகப் பதிவுசெய்துள்ளார். “இந்தச் சிறுவர்கள் செய்த குற்றம் என்ன? ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஏதும் ஆயுதம் ஏந்தினார்களா? நள்ளிரவு வரை எங்கள் மடிகளில் படுத்துக் கதைகேட்டு உறங்கிய குழந்தைகளைத் தூக்கிலிட வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்.
மருது பாண்டியர்கள் வெளியிடாத மரண சாசனத்தை ஜெகவீர பாண்டியன் தனது பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரத்தில் வெளியிட்டார். இதற்காக அவர் எடுத்துக்கொண்டது மருது பாண்டியர்களின் வாரிசு ஒருவர் 03.01.1917-ல் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் (ஓ.எஸ்.4/1918), அந்த மனுவோடு சேர்ந்த, பெரிய மருதுவினுடையது என்று சொல்லப்படும் மரண சாசனமும்தான். இந்த மரண சாசனம், “என்னுடைய ஜமீன் வேலு நாச்சியாருக்குப் பாத்தியமாயிருந்தது.
மேற்படியாளை நான் திருமணம் செய்துகொண்டு அவள் மூலமாக மேற்படி சிவகங்கை ஜமீனுக்கு உரிய உயில் சாசனம் பெற்றிருக்கிறேன். என் வாரிசுகளின் விவரம்: என் மனைவியின் பெயர் ராக்காத்தாள். அவள்தான் பட்ட ஸ்திரி. எனக்கு சிவகங்கை ஜமீன் உயில் சாசனம் செய்து கொடுத்த முதல் மனைவி இறந்து ஒரு வருசம் ஆகிறது” எனப் போகிறது. மருது பாண்டியர்கள் தூக்கில் போடப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து மருது பாண்டியர்களின் வாரிசுகளிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்று கர்னல் அக்கினியூ தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் (28.12.1804) குறிப்பிட்டதே இந்தப் போலியான மரண சாசனம் தாக்கல் செய்ததின் நோக்கமாகும்.
“தற்போதைய ஜமீன்தார் முத்து விஜய ரகுநாத பெரிய உடைய தேவருக்கு எனது கருத்தாக, நூறு ஆண்டுகள் கழித்து சிவகங்கை ஆட்சியை வெள்ளை மருதுவின் வாரிசுகளுக்குத் தரலாம்” என போகிறபோக்கில், அக்கினியூ சொன்னதைக்கொண்டு ஆட்சி அதிகாரத்தையும் பெற எடுத்த நடவடிக்கையாக இந்த மரண சாசனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பின்பு 109/1925 என்ற இந்த மரண சாசனத்தை முன்னிறுத்தி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
வரலாற்றுச் சோகம்
இந்த வழக்குகளின் மீது தீர்ப்பு எழுதிய நீதியரசர் குமாரசாமி சாஸ்திரியார், “இந்த மரண சாசனம் போலியானது. இந்த வழக்குத் தொடர்ந்தவருக்கு வேலு நாச்சியார் இறந்து ஐந்து வருடங்கள் கழித்துதான் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை. வேலு நாச்சியார் இறந்து ஓராண்டு என்கிறது மரண சாசனம். மருது பாண்டியர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்களை எந்த இடத்திலும் மன்னர்கள் என்று கூறிக்கொள்ளவில்லை. ஆதீன கர்த்தர்க்கள், ராஜமான்யர், மாற நாட்டு திசைக் காவலர், அமைச்சர் என்றே தங்களை அழைத்துக் கொண்டார்கள்” என்று கூறி வாரிசு தாக்கல் செய்த மரண சாசனம் போலியானது என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
தாயைப் போன்ற நிலையிலிருந்த அரசியை, மனைவி என்று சித்தரிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஒரு போலி மரண சாசன வாக்குமூலம் முன்வைத்த இந்த ஆதாரமற்ற தகவல் பல வரலாற்று ஆசிரியர்களால் வழிமொழியப்பட்டது பெரும் வரலாற்றுச் சோகம். ரஷ்ய அரசி காத்தரீன், இங்கிலாந்து பேரரசி எலிசபெத், டெல்லியின் முதல் அரசி ரஸியா சுல்தானா, மதுரை நாயக்க அரசி மீனாட்சி போன்ற புகழ்பெற்ற பெண் ஆட்சியாளர்களின் அந்தரங்க சாளரத்தையும்கூட சரித்திரம் சில புனைவுகளை வைத்துக் கட்டமைத்திருக்கிறது. இதில் வேலு நாச்சியாரும் தப்பவில்லை.
சரித்திரத்தின் மர்ம முடிச்சுகளை, அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும்போதெல்லாம் அவிழ்த்துக் கொண்டே செல்ல வேண்டியதுதான், உண்மையான வரலாற்றாசிரியர்களின் பணி. நீதிமன்றம் அவரை விடுவித்து, நூறாண்டுகளை நெருங்கப்போகும் நேரத்தில், வரலாறு அவரை விடுவிக்காமல் இருப்பது பெருத்த சோகம்!
-முனைவர் மு. ராஜேந்திரன் இஆப, ‘சோழர் காலச் செப்பேடுகள்’ என்ற நூலின் ஆசிரியர்.

மதுரை மண்ணுக்குள்… ரகசியங்களின் ஆதிநிலம்! – 1 சு.வெங்கடேசன்படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன்
ஒரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்… ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, காதுகளில் பளிங்கால் ஆன பாம்படம் அணிந்திருக்கிறாள், அது முத்துமணி மாலையின் ஒளியையும் விஞ்சுகிறது. அவளோடு எதிரில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருப்பவளோ, தனது கழுத்தில் ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் சூது பவளத்தால் ஆன (Carnelian) மணிமாலை அணிந்திருக்கிறாள். அதன் அழகு எல்லையற்றதாக இருக்கிறது. இருவரும் விளை யாடிக்கொண்டிருக்கும்போது தாகம் எடுக்கிறது. உள்ளே இருக்கும் சிறுமியிடம் நீர் கொண்டுவரச் சொல்கிறார்கள்.
வீட்டுக்குள் இருக்கும் சிறுமி, ஓடோடி வந்து ரோமானியக் குவளையில் தண்ணீர் கொடுக்கிறாள். கொடுப்பவளின் கையில் சித்திரம் வரையப்பட்ட சங்கு வளையல் சரசரக்கிறது. அவர்கள் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் தாயக்கட்டைகளை உருட்டுகிறார்கள். அவர்களின் உள்ளங்கையில் இருந்து உருளும் தாயக்கட்டைகள் தந்தத்தால் செய்யப்பட்டிருக்கின்றன.
சுமார் 2,500 வருடங்களுக்கு முன்னர் மதுரையில் அரங்கேறியது இது என்றால், நம்புவீர்களா? ஆனால், இந்தப் பொருட்கள் அத்தனையும் மதுரையில் இப்போது நடக்கும் அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. ஒரு சங்க காலக் குடியிருப்புக்குள் நம் கற்பனைக்கு எட்டாத ஒரு வாழ்வை 2,500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள் மதுரை மாந்தர்கள். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஏற்படுத்தும் ஆச்சர்யத்தைவிட, கூடுதல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று உண்டு. அதுதான் அகழாய்வு நடக்கும் இடம்.
தென்னந்தோப்புக்குள் நடக்கும் அகழாய்வாக இந்த இடம் இருந்தால், நமது வியப்பு ஒரு கட்டுக்குள் அடங்கும். ஆனால், நமது வியப்பு கட்டுக்குள் அடங்காதபடி மேலெழக் காரணம், பாண்டியர்களின் பழைய தலைநகர் எனச் சொல்லப்படும் மணலூரின் கண்மாய்க்கரை மேட்டில்தான் இந்தத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது என்பது.
காலத்தின் கரங்களால் இறுகப் பூட்டப்பட்ட மதுரை என்ற ஓர் ஆதி ரகசியத்தின் கதவை, தென்னந்தோப்பின் காற்று மெள்ள அசைத்துப் பார்க்கிறது.
நாமும் அந்தக் காற்றின் வழி பயணிப்போம்!
மதுரை என்றாலே சவால்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் இன்று… நேற்று அல்ல, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவன் உலகம் முழுவதும் இருக்கும் நகரங்களைப் பார்த்து ஒரு சவால்விட்டான்.
‘ஒரு துலாக்கோளைக் கொண்டுவாருங்கள். அதன் ஒரு தட்டில், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களையும் வையுங்கள். இன்னொரு தட்டில், மதுரையை மட்டும் வையுங்கள். பெருமையும் சிறப்பும் காரணமாக மதுரை இருக்கும் தட்டே கனம் தாங்காமல் கீழ் இறங்கும்’ என்றான்.
‘என்ன இது… உலக நகரங்களை எல்லாம் சேர்த்தாலும் மதுரையின் புகழுக்கு ஈடு ஆகாதா?!’ எனக் கோபம்கொள்ளத் தேவை இல்லை. மதுரை என்பது, ஈடு-இணையற்ற ஒரு நகரம் என்பதற்கான அறிவிப்பை, கம்பீரத்தோடு அவன் வெளியிட்டிருக்கிறான். இந்த நகரத்தை அவன் எவ்வளவு நேசித்திருந்தால், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பான் என யோசித்துப்பாருங்கள். இந்த அறிவிப்பைத் தாங்கிய கவிதையை, இத்தனை ஆயிரம் வருடங்களாக, தமிழ்ச் சமூகம் பாதுகாத்து வருகிறது என்றால், இந்தச் சமூகத்துக்கு மதுரையின் மீது இருக்கும் மதிப்பை எண்ணிப்பாருங்கள்.
பரிபாடலில் ஆறாவதாக இடம்பெற்றுள்ள இந்தப் பாடல், மதுரையைப் பற்றிய கவிதை அல்ல; கனவு. இவ்வளவு பெரிய கனவை உருவாக்கி, அதைக் காத்துவரும் திறன் மதுரைக்கு உண்டு. ஏனென்றால், மதுரை என்பது ஒரு நகரத்தின் பெயர் மட்டும் அல்ல; தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் இலக்கியத்தின் முகம். அது நிலத்தைக் குறிக்கும் சொல்லாக மட்டும் அல்லாமல், தமிழர்களின் நினைவைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்று பாண்டிய அரச குலம். தமிழ்நாட்டை சங்க காலம் தொட்டே சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆள, மூவரில் மூத்தோனாக, பழையோனாகப் பாண்டியனே இருந்தான். இதன் காரணமாகவே மற்ற இருவரும் பாண்டியர்கள் மீது பொறாமைகொள்ளவும் பகை வளர்க்கவும் செய்தனர். பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருக்க, பாண்டிய மன்னனுக்கு உரியது வேப்பம் பூ மாலை என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. இன்றளவும் மதுரையின் அரசி மீனாட்சிக்கு, திருநாளில் வேப்பம் பூ மாலைதான் சூடப்படுகிறது. காலத்தின் மிக நீண்ட ஓட்டத்தில், தனது அடையாளங்களையும் மரபுகளையும் உதிர்த்துவிடாமல் மதுரை காத்துவருகிறது.
ஆன்மிக மரபில், மீனாட்சிதான் மதுரையின் அரசி என்பது எல்லோருக்கும் தெரியும்; ஆனால், மீனாட்சியின் கணவன் சொக்கநாதன் மதுரையின் அரசன் அல்ல; மீனாட்சியின் கணவன் மட்டுமே என்பது பலருக்குத் தெரியாது. இந்த வியப்பூட்டும் செய்திக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்றால், உலகெங்கும் ஆதி சமூகத்தின் தலைமை பெண்களிடம்தான் இருந்தது. பின்னர்தான் ஆணிடம் வந்தது. அந்த ஆதி காலம்தொட்டு இந்த நகர் தனது ஞாபக எச்சங்களை இழக்காமல் இன்றுவரை காத்துவருகிறது.
இவ்வளவு நீண்ட காலபரப்பில் இந்த நகரைப் பற்றி எவ்வளவோ இலக்கியங்கள் தொடர்ந்து பேசிவருகின்றன. விந்தியமலைக்கு தெற்கே புகழ்பெற்ற நகராக மதுரை இருந்ததைப் பற்றி வால்மீகி வர்ணிக்கிறார். திரௌபதியின் சுயம்வரத்தில் பாண்டிய அரசன் கலந்துகொண்டதாக வியாசன் எழுதுகிறார். வாத்ஸாயனரும், கௌடில்யரும், காளிதாசனும் இந்த நகரை வியந்து பாடுகின்றனர். கடல் கடந்த தேசங்களில் இருந்து பயணிகள், காலம்தோறும் இந்த நகருக்குள் வந்தவண்ணமே இருந்துள்ளனர்.
சங்க இலக்கியங்களில் பாடல் எழுதிய பலரும், இந்த நகரைச் சார்ந்தவர்களே. இதை அதன் கோட்டைச்சுவர்களை, காவல் வீரர்களின் கைகளில் ஒளிரும் ஆயுதங்களை, நாள் அங்காடிகளில் நடக்கும் வணிகத்தை, நகரத்தின் மீது கவியும் இரவை, வைகையின் படித்துறையில் சலசலக்கும் நீர் ஓசையை… என ஒன்றுவிடாமல் நவீனக் கருவிகொண்டு செய்யப்படும் ஒளிப்பதிவுபோல பரிபாடலும் மதுரைக் காஞ்சியும் பதிவுசெய்துள்ளன. இதன் பிரமாண்டத்தை, சிலப்பதிகாரம் விரித்துக்காட்டியுள்ளது.
தேவாரம் பாடிய மூவரும், ஆழ்வார்கள் பலரும் இந்த நகரைப் பாடியுள்ளனர். ‘திருவிளையாடற்புராணம்’ இந்த நகரை உச்சியில் ஏற்றிக் கொண்டாடுகிறது. அது இந்த நகரத்தின் மண்ணை சிவன் சுமந்தான் எனக் கூறுகிறது. இந்த நாடு முழுவதும் சைவ மதம் இருந்தாலும், சைவ மதத்தின் மூலக்கடவுளான சிவன், மதுரையின் மண்ணைச் சுமந்தான் என, சைவ இலக்கியங்களே பெருமைகொள்கின்றன.
மதுரையின் பெருமைக்கும் பாரம்பர்யத்துக்கும் இலக்கிய ஆதாரங்களைப்போலவே எண்ணி
லடங்காத வரலாறுகளும் மற்றும் தொல்லியல் ஆதாரங்களும் உள்ளன. இந்தியாவில் இதுவரை கண்டறியபட்ட கல்வெட்டுகளில் காலத்தால் மிகப் பழமையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்திருப்பது மதுரை மற்றும் அதைச் சுற்றி உள்ள பிராந்தியங்களில் இருந்துதான். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புள்ளிமான் கோம்பை நடுகல் தமிழி எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கும் முன்பானது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
அதாவது இந்தியாவிலேயே எழுத்தும், எழுத்து சார்ந்த அடையாளங்களையும் மிக அதிக அளவில் கொண்டுள்ள நகரம் மதுரை. இங்குதான் சமணப் பள்ளியும் பௌத்தப் பள்ளியும் வேதப் பள்ளியும் இருந்தன என இலக்கியங்கள் சொல்கின்றன. பள்ளிகள் நிறைந்து இருந்த இந்த நகரில்தான் பல சங்கங்கள் நடத்தப்பட்டன. அந்த இலக்கியச் சங்கத்தினரால் தொகுக்கப்பட்டு, ஏற்றுக்
கொள்ளப்பட்ட பாடல் தொகுப்புகள்தான் இன்று உலகின் மிகப் பழமையான பாடல்கள் எனக் கருதப்படும் நமது சங்க இலக்கியங்கள்.
சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி வருகிறது. மதுரையின் தெருக்களை வியந்து பார்த்தபடி கோவலன் நடந்து சென்றுகொண்டிருப்பான். அப்போது எதிரில் வரும் பெண் ஒருத்தி, கையில் வடமொழியில் எழுதப்பட்ட ஓர் ஏடு வைத்திருப்பாள். அதில் உள்ள வாசகத்தைக் காட்டி கோவலனிடம் விளக்கம் கேட்க, வேடிக்கை பார்த்தபடி சென்றுகொண்டிருந்த கோவலன், சற்றே நின்று அவளுக்கு விளக்கம் சொல்லிவிட்டுச் செல்கிறான். இது வீதியில் நடந்துபோகிற ஒரு பெண்ணின் கல்வி அறிவுக்குச் சான்று மட்டும் அல்ல, ஒரு நகரத்தின் எழுத்தறிவுக்கும் சான்று.
மதுரையின் சிறப்புகளில் முக்கியமானது இந்த நகரின் தெருக்கள். இங்கு எந்தத் தெருவுக்குள் நீங்கள் போனாலும் அந்தத் தெரு சுமார் ஈராயிரம் ஆண்டுகள் நீளம்கொண்ட தெருவாகத்தான் இருக்கும். உங்களால் காலத்தைக் கடந்து பார்க்க முடியும் என்றால், அதே தெருவில் உங்களைக் கடந்து, பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருப்பவன்தான் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கும் பொற்கொல்லன் என்பதை உணர்வீர்கள். அந்தத் தெருமுக்கில், எந்தவிதப் பதற்றமும் இன்றி உட்கார்ந்து இட்லி அவித்துக்கொண்டிருப்பவள் தான், வைராக்கியம் ஏறிய வந்தியக்கிழவி என்பதையும் அறிவீர்கள்.
மதுரை என்பது, ஒரு வகையில் மாயநகரமும் கூட. ‘இன்று நாம் பார்க்கும் மதுரைதான் நேற்றைய இலக்கியங்களில் சொல்லப்பட்ட மதுரையா?’ எனக் கேட்டால், சட்டென ‘ஆம்’ எனப் பதில் சொல்லிவிட முடியாது. ‘மதுரை’ என்பது இன்றைய மாநகராட்சியால் குறிக்கப்பட்ட இடத்தின் பெயர் அல்ல. அது ஒரு ரகசிய நிலத்தின் பெயர் என வாதிடுவதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இறையனார் அகப்பொருள் உரை எனும் நூல், முதல் தமிழ்ச்சங்கம் இருந்த மதுரையும் கபாடபுரமும் கடல் கொண்டுபோக, மூன்றாவதாக இப்போது இருக்கும் மதுரை உருவானதாகக் கூறுகிறது. கண்ணகி எரித்த மதுரையைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. திருவிளையாடற்புராணமோ, வைகையின் ஓரத்தில் இருந்த கடம்பவனத்தில் இரவில் தங்கிய வணிகன், தான் கண்ட அதிசயக் காட்சியை பக்கத்தில் உள்ள மணலூரைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சிசெய்த குலசேகரப் பாண்டியனிடம் சொல்ல, அவன் வந்து பார்த்து, அந்தக் கடம்பவனத்தை அழித்து இப்போது உள்ள மதுரையை நிர்மாணித்தான் எனச் சொல்கிறது. பெரும்பற்ற புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற்புராணத்தைப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள், பாடலின் அடிக்குறிப்பில் பாண்டியர்களின் பழைய ராஜதானி (தலைநகர்) மணலூர் எனக் குறிப்பிடுகிறார்.
இந்த இலக்கிய ஆதாரங்களைத் தவிர, மக்கள் மத்தியில் மதுரையைச் சுற்றி உள்ள இடங்களான அவனியாபுரம், பாண்டி கோயில் பகுதிகளில் பழைய மதுரை இருந்ததாக வாய்மொழிக்
கதைகள் உள்ளன. கதைகளை எல்லாம் வரலாறுகளாக அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், எந்த ஒரு கதையும் சின்னஞ்சிறு அளவிலேனும் ஓர் உண்மையில் இருந்துதான் தொடங்குகிறது என்பதும் உண்மைதானே!
இந்த வரலாற்று, சரித்திரக் கதைகள் எல்லாம் இப்படி இருக்க, இப்போது மதுரையைப் பற்றி புதிய கதை ஒன்று தொடங்குகிறது. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, மதுரையில் இருந்து தென்கிழக்காக சுமார் 12 கிலோமீட்டர் தள்ளி பள்ளிச்சந்தைத் திடல் என்ற இடத்தில் இருக்கும் தென்னந்தோப்புக்குள், கடந்த ஐந்து மாதங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்திவருகிறது. மிக விரிவாக நடத்தப்படும் இந்த ஆய்வில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களும் அமைப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சுமார் 2,200-ம் ஆண்டில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குடியிருந்த குடியிருப்புப் பகுதியாக இது இருக்கிறது. வரிசை, வரிசையாக வீடுகள், மிக அகலமான செங்கற்கள், தரைத்தளமாக, கனமான தட்டோடுகள், மேற்கூரைக்கு ஆணி அறையப்பட்ட செம்மண் ஓடுகள், வீடுகளை ஒட்டி பெரும் அகலத்தில் நீண்ட சுவர்கள், தண்ணீர் வழிந்தோட வடிகால்கள், வட்டவடிவ உரையிடப்பட்ட கிணறு… என நிலத்துக்குள் ஒரு நகரமே துயில்கொண்டிருக்கிறது. அதைத் துயில் எழுப்பும் முயற்சியில் தொல்பொருள் ஆய்வுத் துறை ஈடுபட்டிருக்கிறது. நீருக்குள் மூழ்கும் நகரங்களை, ஹாலிவுட் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் பார்க்கலாம். ஆனால், மண்ணுக்குள் இருந்து மேலே எழும் நகரங்களை தமிழ்நாடு போன்ற மனித நாகரிகத்தின் பாரம்பர்யத் தொட்டில்களில்தான் பார்க்க முடியும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் கைக்கொள்ள முடியாத இப்படியான பெருமைகளை, நம் நாட்டு கிராம ஊராட்சிகள் தன்னகத்தே கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில் முழுமையான குடியிருப்புப் பகுதி கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள் தொல்லியலாளர்கள். இங்கு கிடைத்திருக்கும் பொருட்களின் பட்டியல் மிக நீளமானது. மற்றும் நம்ப முடியாத வியப்பை ஏற்படுத்தக்கூடியது.
இப்போது சொல்லுங்கள்… பரிபாடலில் புலவன் எழுதியது வெறும் வாய்ச்சவடால் அல்ல, வாழ்வின் செருக்கில் இருந்து மேலெழுந்த சவால் என்பது உண்மை அல்லவா?!