குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் தேவரின் பங்கு

இந்தியாவில் ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தியபின், அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பெரும் பகுதிகளில் புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கங்கள் தோன்றின. இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்குவதில் ஆங்கில அரசு தீவிரம் காட்டியது. 1871 ஆம் ஆண்டு பஞ்சாப், மத்திய இந்தியா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த நிரந்தர குடியட்ட்ற மக்களை அடக்கும் பொருட்டு 1871 ஆம் ஆண்டு குற்றப்பரம்பரை சட்டம் என்ற ஒரு சட்டத்தை ஆங்கில அரசு பிரகடனம் செய்தது. ஆனால், அச்சட்டத்தின் விதிமுறைகள் சென்னை மாகாணத்தில் அமுல்படுத்தவில்லை.
.
குற்றபரம்பரைச் சட்டம் Act III of 1971 என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி அரசாங்கம் எந்த ஒரு ஜாதியையும், எந்த ஒரு கூட்டத்தையும், ஜாமீனில் வர முடியாத பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று கருதினால், அவர்கள் மீது இச்சட்டத்தை புகுத்தலாம். அப்படி எந்த ஒரு ஜாதியின் மீதும் இச்சட்டம் பயன்படுத்தும் போது, அந்த ஜாதியினர் தங்கள் உரிமையை நிலை நாட்ட நீதி மன்றங்களுக்கு செல்ல முடியாது.
.
1911 – ஆம் ஆண்டு, பிரிவு 11 மற்றும் 12 இன் படி, எந்த ஒரு உருபினரும் சுதந்திரமாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல முடியாது. அன்றாடம் இரவு நேரங்களில் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் தினமும் இருமுறை தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிகின்ற போது கல்வியறிவு இல்லாத காரணத்தால், கைரேகை வைப்பது வழக்கம். எனவே, இச்சட்டம் “ரேகைச் சட்டம்” என்று அழைக்கப்பட்டது.
.
இச்சட்டத்தின் கீழ் பிரமலைக் கள்ளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். இவ்வாறாக இக்குற்றபரம்பரை சட்டத்தால் பிரமலை கள்ளர்களின் தனி மனித உரிமை முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. W.J. Hatch என்பவர் இச்சட்டத்தை விமர்சிக்கும் போது, “ I was doubtful whether any other act on the statue book so far in givingthe police powers to take away a man’s freedom” என்று கூறுகிறார்.
.
இத்தகைய கொடுமையான சட்டம் நடைமுறையில் இருந்த போடு, அதை கண்டிக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட கேரளாவை சேர்ந்த வழக்குரைஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் இச்சட்டத்தின் கொடுமைகள் பற்றயும், இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட பிரமளைகள்ளர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இச்சட்டத்தை எதிர்த்து 1920 ல் புரட்சி செய்த பெருங்காமநல்லூர் மக்கள் சார்பாகவும், தன் வாதங்களை அவர் முன் வைத்தார்.
.
1933 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தை சார்ந்த “ஆப்ப நாடு மறவர்கள்” மீது இக்குற்றபரம்பரை சட்டம் பாய்ந்த பொது, இச்சட்டத்தின் கொடுமைகளை தேவர் உணர்ந்தார். அது முதற்கொண்டு இச்சட்டத்தை நீக்க முழு மூச்சாக செயல்பட்டார். 1934 ஆம் ஆண்டு அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு என்பவர் தலைமையில் குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது.
.
அக்கூட்டத்தில் வரதராஜுலு நாயுடு தலைமையில் ஒரு குழு அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் முகம்மது உஸ்மான் அவர்களை சந்தித்து ஆப்ப நாட்டு மறவர்கள் மீது போடப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டும்மென்று வேண்டிக்கொண்டது. ஆனால் சென்னை மாகாண ஆளுநர் முகம்மது உஸ்மான் இந்த சட்டத்தை நீக்கும் உரிமை தனக்கு இல்லையென்றும், இது குறித்து தலைமை ஆளுநரிடம் தான் சிபாரிசு செய்வதாகவும் தெரிவித்தார்.
.
அதன் விளைவாக 2000 ம பேர் விதிக்கப்பட்டிருந்த குற்றப்பரம்பரைச் சட்டம் 400 பேராக குறைக்கப்பட்டது. இதுபோல பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நீதிக்கட்சி ஆட்சியிலிருந்த போதும், 1911 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார்.

1936 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரையூர் மாநாட்டில் குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க வேண்டும் என்று தவர் மிகக் கடுமையாகப் பேசினார். இச்சட்டம் இந்தியாவில் வீரம் மிக்க சாதியினரான சீக்கியர்கள், மராத்தியர்கள் மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. அது போன்று தமிழ் நாட்டிலுள்ள கள்ளர்கள் மற்றும் மறவர்கள் மீது, பாய்ந்துள்ளது.

அவ்வேளையில் கைரேகை வைப்பதற்கு பதிலாக கட்டை விரலை வெட்டிக் கொள்ளுங்கள். என்று தேவர் முழங்கினார். தேவரின் பேச்சு வேகத்தை கன்னுட்ட்ற காவல் துறையினர் இவரை பேச அனுமதிக்க கூடாதென்று நீதி மன்றத்தில் முறையீடு செய்து 144 தடை உத்தரவு பெற்றனர்.இது சம்பந்தப்பட்ட வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தன் தேவர் மேடைகளில் பேசுவது தடை செய்யப்பட்டது. இது தான் “வாய்பூட்டுச் சட்டம்” என்று அழைக்கப் பட்டது.
.
இந்த வாய் பூட்டுச் சட்டம், தென்னிதியாவில் தேவருக்கும் மற்றும் வட இந்தியாவில் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு மட்டும் தான் போடப்பட்டது.
.
தேவர் பல ஊர்களில் பேசிய பேச்சின் காரணமாகவும், இச்சட்டத்தை நீக்க அவர் கொடுத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும், ராஜாஜி தலைமையிலான அரசு 1938 ஆம் சென்னை மாகாணத்தின் அணைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடமிருந்தும் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் செயல் பாடுகள் குறித்து அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
.
மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிக்கையை சமர்பித்தனர்.
.
அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட காரணத்தால், காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. அதன் பின்னரும் தேவர் இக்குற்றபரம்பரைச் சட்ட எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். பல கிராமங்களுக்கு சென்று குற்றபரம்பரை சட்டத்தை நீக்க போராடவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
.
1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உசிலம்பட்டியில் நடைபெற்ற “கள்ளர் இளைஞர் மாநாட்டில்” இக்குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தீவிரமாகப் பேசினார். அப்போது அச்சட்டத்தை நீக்க தவறிய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்தார். பிரிடிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்படவேண்டுமானால், குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
.
இந்த, குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்து தேசீயவாதிகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒடுக்குகிறது என்று கூறினார். சுத்தமான ரதம், மறவர்களின் நரம்புகளில் ஓடுவது உண்மையானால், “நீ கை ரேகை வைப்பதிற்க்கு பதிலாக, கை விலங்கை மாட்டிக்கொள்ள thayaaraagu” (இச்சட்டத்தை எதிர்த்து) என்று அறைகூவல் விடுத்தார்.

சென்னை மாகாண ஆளுநர், உசிலம்பட்டி பகுதியில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டை பார்க்கவருவதாக திட்டமிட்ட போது தேவர் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று கருது, ஜல்லிகட்டை புறக்கணிக்குமாறு பிரமளைக்கள்ளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன் காரணம், காளைகளை அடக்குவதில் பிரமளைகள்ளர்கள் காடும் வீர தீரத்தைக் கண்டு, இவர்கள் மீது குற்றப்பரம்பரைச்சட்டம் புகுத்தியது சரி என்று கருதி விடுவார் என்று அஞ்சினார். இவருடைய வேண்டுகோளின் படி பிரமளைகள்ளர்கள் ஜல்லிகட்டை புறக்கணித்தனர்.
1940 ஆம் ஆண்டு செப்டம்பெர் மாதம், இந்திய பாதுகாப்புக்கு சட்டைன்படி கைது செய்யப்பட்ட தேவர் 1945 ஆம் ஆண்டுவரி சிறையில் இருந்தார். 1942 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய “இந்திய பார்வர்டு பிளாக்” கட்சி தடை செய்யப்பட்டது.
.
இச்சட்டத்தை நீக்கவேண்டும் என்று 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய சென்னை மாகான உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர். பி.சுப்புராயன், மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினார். அம்மசோதா மெது ஆளுங்கட்சி, எதிர் கட்சி மற்றும் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர், பாதிக்கப்படாதவர் என்ற பாகுபாடின்றி இச்சட்டத்தை விளக்கிக் கொள்ள கருத்துக்களை வழங்கினார்கள். அப்போது, எதிர் கட்சியாக முஸ்லிம் லீக் செயல்பட்டது.
.
எதி கட்சி உறுப்பினரான பேகம் சுல்தான் மீர் அம்ருதீன் என்ற பெண்மணி கூறுகையில் “நாகரீகமான நாட்டில் உள்ள சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கரும் புள்ளி தான் இந்தச் சட்டம்” என்று கூறினார். மேலும் ஆர்.வி. சுவாமிநாதன், வி.ஐ. முனியசாமி பிள்ளை(ஆதி திராவிடர்), இராஜாராம் நாயுடு, ரெங்கா ரெட்டி மற்றும் பலர் இச்சட்டத்தை நீக்கக்கோரி சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவையில் பேசினர். அதனடிப்படையில் குற்றப்பரம்பரைச் சட்டம் ரத்துச் செய்யும் மசோதா சட்டமாக நிறைவேறியது.
.
இறுதியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 1947 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாள் தலைமை ஆளுநரின் ஒப்புதல் பெற்று, 1947 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் குற்றப்பரம்பரைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது.
.
தேவரின் குற்றப்ப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தேவரை சாதியவாதியாக காட்ட முற்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் 89 க்கும் மேற்பட்ட ஜாதிகள் இக்கொடூர சட்டத்தின் கோரப்பிடியில் சிக்கி இருந்தனர். தமிழகத்தில் தேவரினதைத் தவிர வேப்பூர் பறையர்களும், படையட்சிகளும், குரவர்களும் கூட இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே இப்போராட்டம் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, தான் ஜாதிக்காக போராடிய போராட்டமல்ல !.
.
.
….
This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *