மறவர் படை

ஆதிகாலம் முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள்
உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்புமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் பிறந்த மறக்குலத்தையே அவமதிக்கும் விதத்தில் வீனர்கள் சிலர் வீண்வதந்திகளைப்பரவவிட்டு அவர்களின் மானம் மரியாதைக்கு பங்கம்
விளையும் விதத்தில் சிலம்பு போன்றவர்கள் தவறாக பின்னோட்டம் எழுதுவதை கடுமையாக இதன்மூலம் சாடுகிறேன் , அந்த அன்பருக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும்.


அவருக்குமட்டுமல்ல அவரைப்போன்றவர்களும் ஒரு கேள்வியை என்முன் வைப்பார்கள். அந்த கேள்வி இதுதான். “முக்குலத்து மக்கள் மட்டும்தான் போர்க்களம் சென்று போரிட்டு உயிர்த்தியாகம் செய்தார்களா? மற்ற இனத்தவர்கள் போர்க்களம் செல்லவில்லையா?” உங்கள்
கேள்வி நியாயமானதுதான்.

மன்னர்களின் ஆட்சியிலும் முற்காலத்திலும், அரசனின் படைகள்
இரண்டு வகை. ஒன்று, மூலப்படை. மற்றொன்று தற்காலிகப்படை. போர்க்காலங்களில் மட்டும் திரட்டப்படும் படை தற்காலிகப்படை. போர்முடிந்தவுடன் அத்தற்காலிகப்படைகள்கலைக்கப்பட்டுவிடும்.

தற்காலிகப்படைகளுக்கும் போர்பயிற்சி அளித்து போர்க்களம்
புகும்படி செய்கின்ற படை மூலப்படை. மூலப்படை ஒன்றுதான் தலைமுறை தலைமுறையாக மறவர் என்னும் குடும்பத்திலிருந்து பாட்டன், பூட்டன், முப்பாட்டன், எள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்திலிருந்தும் அதற்கும் முற்பட்ட அவனுடைய மூதாதையர்கள்
காலத்திலிருந்தும், ஆண்களாய் பிறந்த மறவர்குல மக்கள் அனைவரும் உலகம் தோன்றிய காலம் முதல் போர்த்தொழிலை குலத்தொழிலாகக் கொண்டவர்கள்.

மற்ற இனத்தவர்கள் அவ்வாறில்லை.அவர்களின் குலத்தொழில் வேறு. தலைமுறை தலைமுறையாக போர்க்களத்தொழில் அவர்களுடையது
அல்ல. மற்ற இனத்திலிருந்து போருக்கு தந்தை சென்றிருந்தால், மகன்
சென்றிருக்கமாட்டான். செல்லவேண்டிய கட்டாயமும் இல்லை.

விருப்பப்பட்டால் மட்டுமே சென்றிருப்பான். அவர்கள் போருக்குச்சென்றால் அதற்கான ஊதியம் பெற்றிருப்பான். ஆனால்,முக்குலத்துமக்கள் ஊதியத்தை கருதாது அரசனின் வெற்றி, பிறந்தமண்ணின் மானம் ஒன்றையே
கருத்தில்கொண்டு உயிரைப்பற்றி கவலைப்படாமல் சென்றனர். இது அவர்களின் கட்டாய தொழில். மறக்குலப்பெண்களும் தன்குலஆண்களை கட்டாயமாக போர்க்களம் அனுப்பிவைத்ததை தொல்காப்பியரும்(புறத்.சூத்.4) இளம்பூரணாரும்,புறநானாறும்(279) சான்று
கூறுகின்றன.

இதைப்பற்றி மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் எழுதியுள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். ” மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும், எவ்வகை ஊற்றையும் பொருட்படுத்தாததும், இறப்பிற்கு அஞ்சாததும், போரையே
விரும்புவதும், அரசனைக் காக்க என்றும் உயிருவந்தீவதும், எக்காரணத்தையிட்டும் அறைபோகாததும், வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம்.”(ஊற்று-ஊதியம் அல்லது
பிரதிபயன். அறைபோகாதது-சோரம்போகாதது அல்லது விலைபோகாதது)(ஆதாரம்: பழந்தமிழாட்சி என்ற நூலில் பக்கம்.47) (இதனைப்பற்றிய விரிவான விவரங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில்
எழுதுவேன்.

இக்கட்டுரையில் இதுபோதும் என விரிவஞ்சி விடுக்கிறேன்.) இதுபோன்ற
நல்லசெய்திகளையெல்லாம், சிலம்பு போன்றவர்களும் பெரும் பதவி வகித்தவர்களும் திட்டமிட்டு மறைத்தே வந்தனர். இன்றும் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து முக்குலத்து இளைஞர்கள் தங்கள் குலப்பெருமை. காக்க மறைத்துவைக்கப்பட்டுள்ள அருமை பெருமைகளை மீட்டுவர முயற்சி செய்யவேண்டும். தமிழ் இலக்கியங்கள் கூறும் புறப்பொருள் நம் குலத்திற்குரியது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழம்பெருமை எதற்கு என்று நீங்கள் நினைக்க்க்கூடாது. பழம்பெருமையைமீட்டு நாம் முன்னோர்களைப்போல் புகழ்பட வாழவேண்டும். பிறந்த மண்ணின்மீதும், தாய்த்திருநாட்டின்மீதும், தன் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் நம்முன்னோர்கள். அதனால்தான்,
அவர்களைப்பற்றி கல்வெட்டுக்கள் பேசுகின்றன. செப்புப்பட்டயங்கள் சான்று கூறுகின்றன.
இலக்கியங்கள் புகழ்மாலை சூட்டுகின்றன. கம்பநாட்டாள்வார், சேக்கிழார் பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார், நம்பியாண்டார் நம்பி அடிகள்,ஒட்டக்கூத்தர் போன்ற புகழ்ப்பெற்ற புலவர் பெருமக்கள் வாயார நம் குலப்பெருமையை பாடியுள்ளனர்.. இதை அறியாத அறிவிலிகள் மட்டுமே நம்மை திருடர் என்று தவறாக பொருள்கூறுகின்றனர். நம்
முன்னோர்களின் மரபணுவும் குருதி ஓட்டமும் நம் உடலில் ஓடுகின்றன. நாம் மட்டும் அவர்களின் புகழுக்கும் பெருமைக்கும் மாறுபட்டவர்களா? அல்லது விதிவிலக்கா?. நாமும் அவர்களின் அடிச்சுவட்டை பிறழாது பின்பற்றவேண்டும். இது மறவர் பூமி என்றால், பகைவனும் இடியோசைகேட்ட நாகம்போல், நடுங்கி ஒடுங்கி ஓடிவிடுவான். நாட்டை
நாசப்படுத்தும் நாசகார சக்திகள் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிஓடிவிடும்,. வாழ்வதும், வீழ்வதும் தாய்மண்ணுக்காக என்பதே நம் முன்னோர்களின் தாரக மந்திரம். அதுவே நம்முடைய
வழி.! பிறந்த மண்ணையும் பெற்றதாயையும் காப்பது நம் கடமை!!

நன்றி : செம்பியன் மறவன்

 

This entry was posted in மறவர் and tagged , . Bookmark the permalink.

One Response to மறவர் படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *