Daily Archives: 28/11/2010

மயிலப்பன் சேர்வைகாரர்

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி. வரலாறு : தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத் தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

தொண்டைமான்

கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர். பல்லவர் : இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | Leave a comment

பண்டுக் கலவரம்

உசிலம்பட்டி கவணம்பட்டி பண்டுக் கலவரம் : இந்தப்பகுதியில் வாழும் பிரமலைக் கள்ளர்களின் சமூக வரலாற்றைப் பார்க்கும் பொழுது எட்டுநாடு, இருபத்தியெட்டு உபகிராமம் என்ற கள்ள நாட்டுப் பகுதியில் கள்ளர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையில் ஒரு மேம்பட்ட சமூக உறவு இருந்துள்ளதற்கான அடையாளங்களை நம்மால் பார்க்க முடிகிறது. கள்ள நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கள்ளர்கள் மற்றும் தலித்துக்களுக்கு இடையிலான … Continue reading

Posted in கலவரம் | Tagged | 2 Comments

குற்றப்பரம்பரை சட்டம் – தோற்றம்

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து –(குறள்: 561) 19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாக பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாக குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட … Continue reading

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Tagged | 1 Comment

சேதிராயர் – சேதிநாட்டு அரசகுலத்தினர்

தமிழகத்தின் பெருமைவாய்ந்த இன குழுக்களில் முக்குலத்தின் கள்ளர் பெருங்குடி முக்கியமானது ஆகும். சேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி (Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது. [i]சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர். [ii]திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார் [iii]கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று. தொண்டை நாட்டிற்கும் … Continue reading

Posted in சோழன் | Tagged | 1 Comment

கள்ளர் சரித்திரம் – 1

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் . 12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் ஈங்குரைக்க விளைகிறேன். கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற … Continue reading

Posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged | Leave a comment

கள்ளர் சரித்திரம் – 2

இரண்டாம் அதிகாரம் : நாக பல்லவ சோழரும், கள்ளரும் : இனி, கள்ளர் குலத்தவர் முற்கூறிப் போந்த மக்களுள் எவ்வினத்தைச் சேர்ந்தவர் என்றும், இன்னவர் நிலைமை எத்தன்மைய தென்றும் பார்ப்போம், சங்கநாளிலே திருவேங்கடத்தை ஆண்ட புல்லி என்னும் அரசன் கள்வர் கோமான் என்று கூறப் படுகின்றான். அவன் வீரத்தினூம், வள்ளன்மையினும் மிக மேம் பட்டவனென்று தெரிகிறது. … Continue reading

Posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged | Comments Off on கள்ளர் சரித்திரம் – 2

கள்ளர் சரித்திரம் – 3

இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது. எனினும் சோழர்குடி முதலியவும் பிற்காலத்தில் இம்மரபிலே கலந்து விட்டன எனத் தெரிகிறது. இங்கே சோழரது கலப்பைக் குறித்துச் சிறிது காட்டுதும். சோழர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர்? அவரது ஆட்சி நிலை குலைந்து … Continue reading

Posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged | Leave a comment

கள்ளர் சரித்திரம் – 4

மூன்றாம் அதிகாரம் அரையர்களின் முற்கால நிலைமை : கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் … Continue reading

Posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged | Leave a comment

கள்ளர் சரித்திரம் – 5

நான்காம் அதிகாரம் புதுக்கோட்டை மன்னர்கள் : தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே … Continue reading

Posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged | Leave a comment