அச்சுதராய அப்யுக்தம் கூறும் மதுரை பாண்டியன்

அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல் மற்றும் பட்டயங்களின் செய்தி தொகுப்பு விஜயநகர வரலாறு.

SOURCES OF VIJAYANAGA HISTORY

JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J

Professor of Indian History and Archeology, University of Madras

Fellow of the University of Madras;

Member of the Royal Asiatic Society

of Great Britain and Ireland ;

Fellow of the Royal Historical Sociely ;

Professor and Fellow of the Mysore University ;

Reader, Calcutta University.

 

இந்த நூல் சாக்கோட்டை ஜே.பி.கிருஷ்னசாமி அய்யங்கார் இந்திய வரலாறு தொல்லியல்துரை ஆய்வாளராகவும் தலைசிறந்து விளங்கியவர். முன்னாள் மெட்ராஸ் பல்களைகழகத்தின் துனைவேந்தரும் ஆவர். இவரது புத்தகமான இது பிரிட்டன் ஐயர்லாந்து மற்றும் கல்கத்தா பல்கலைகழக்த்தில் உள்ளது. அமெரிக்க கொலம்பியா நூலகத்தின் பிரதியே இது. இது இந்தி அரசால் தொல்லியல் துரை ஆவனமாக பதியபட்டுள்ளது .இதன் ஆண்டு 1921.

விஜயநகர வரலாற்றினை தரும் நூல்களும் பட்டயங்களும் அவை ஹம்பி நதிக்கரையில் அமைந்த கர்நாடக பிரதேசத்தை சார்ந்த இந்து அரசாகும் கண்ண்டம்,தெலுங்கு இரண்டையும் ஆட்சி மொழியாய் கொண்டது. இவர்களது புத்தகம் மதுரா விஜயம்,ஆமுல்யமுக்தா,அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல்களாகும்.

 

இதில் அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூலில் மதுரை பாண்டியனை பற்றிய குறிப்பு வருகின்றது.

அச்சுதராய அப்யுக்தம் :இராஜநாத கவி

====================================

அச்சுதராயனின் மகனான நரசநாயக்கன் காவிரியை கடந்து மதுரையை அடைகின்றான். மதுரையை ஆண்டு கொண்டிருந்த மறவனை கொன்று அதனை கைப்பற்றுகின்றான். அந்த மறவனின் பெயர் கொனேட்டிராஜா இது கோனரின்மை கொண்டானின் திரிபு

அச்சுதராய அப்யுக்தம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் சம்ஸ்கிருத வார்த்தை என்னவெனில்

 

“மதப்பிரபுதன் மறவன் மாதித்வா மஹிமகோன்னதா மதுரா மகேஷத் மகேந்திரலோக மறவாய தத்வாம் தயேசமிஹம் மதுரான் ஷ கே”

 

“மதுரை மஹோன்னதமாக ஆட்சி செய்து வந்த மதுரை மகேசன்(அரசன்) மறவனை போரிட்டு வென்றான்”. இதே கருத்தை “ஐவர் ராசாக்கள் கதை” என்னும் நூலில் திரு.நா.வானாமாமலை ஐயா அவர்களும் மதுரை ஆண்டு கொண்டிருந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனையே இந்த நரச நாய்க்கன் வென்றான் எனவும். பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது அச்சுதராய அப்யுக்தம் நூலின் ஆதாரமாகும்.

இதையே பாண்டிய நாட்டில் வாணாதிராயர் என்னும் புத்தகத்தில் வேதாச்சலம். மாணபூசனன் என்னும் பராக்கிரம பாண்டியனையே நரசனாயக்கன் வென்றான் என்பது ஆணித்தரமான கருத்தாகும்.

 

எனவே மதுரை ஆண்ட பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது நிருபனமாகின்றது. இன்னும் பல கல்வெட்டுகள் இதற்க்கு ஆதாரமாக இருக்கிறது. 

இந்த நூலை வெளியிட்டது இந்திய தொல்லியல் துரை,டெல்லி,தமிழக தொல்லியல் துரை தலைவரான நாகசாமியிம் மதுரை மாவட்ட வரலாறு,இராமநாதபுர மாவட்ட வரலாறு முதலிய நூல்களில் வெளியிட்டனர் தமிழக அரசு சார்பாக.

நன்றி: விஜயநகர வரலாற்று ஆவணங்கள்

சாக்கோட்டை ஜேபி.கிருஷ்ன சாமி அய்யங்கார்

கலிபோர்னியா யுனிவர்சிட்டி வெளியிடு

This entry was posted in தேவர், பாண்டியன், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *