பூலாங்குறிச்சி ஊரவர்கள் 5 பேர் தங்கள் நிலத்தை செவலூரில் இருக்கும் 16 மறவர்களுக்கு 450 மதுரை சக்கரம்(பனம்)த்துக்கு விற்ற செய்தி இது நாயக்கர் ஆட்சி 1700க்கு பிந்தியது என கருதலாம்
ஆனால் இதில் மதுரை நாயக்கர்களை குறிக்காது விஜநகர ராயர்களை குறிக்கிறது.
ஸ்வஸ்தி ஸ்ரீ மகா மண்டலேஸ்வரன் அரியராய விபாடன் பாசைக்கு
தப்புவராய மூவராய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட கொடாதான் பூர்வ தெட்சன பட்சம ருத்திர சத்த சமுத்திராபதி ஈழமும் கொங்கும் யாழ்பானராயன் பட்டனமும் அழித்து கெச வேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராச பரமேஸ்வரன் ராச மார்த்தாண்டன் ராச வேதிய புஜங்கன் ராசகேசரி ராச நாராயனன் உபயகுலசுத்தன் உபயகுல வங்கிஷன் உத்தாண்ட மண்டலாதிபதி ஒட்டிய தளவிபாடன் ஒட்டியர் மோதம்
தவிள்தான் துலுக்கர் தளவிபாடன் துலுக்கர் மோகம்தவிழ்தான் அரியர் தளவிபாடன் ஆரியர் மோகம்தவிள்தான் மேதினி மீசுருகண்டன் கட்டாரி சாளுவன் வீரலட்சுமி,விஜயலெட்சுமி,தானியலட்சுமி சந்தானலட்சுமி சௌபாக்கியலட்சுமி மகாலட்சுமி அஷ்டலட்சுமி பொருந்திய மார்பன் நரலோக சூரியன் துஷ்டர்க்கு துஷ்டன் பரிபாலகன் துஸ்டமன்னியர் கண்டன் குருமன்றனக்டெட் கன்னியஸ்ருதான் அசுபதி கெசபதி……….
……..சோழமண்டல பிரதாபன் சோழமண்டலதாபனசிரியன் பாண்டியமண்டல பிரித்சாபனாசிரியன் தொண்டைமண்டலபிரிதிஸ்டாபனாசிரியன் மத்தகஜத்ரன் பரிக்கு நகுலன்
வன்னப்ரியேரியுவர் கண்டன் சொல்லுக்கு அரிசந்திரன் வாளுக்கு வீமன்
பெருமைக்கு பூமாதேவி அழகுக்கு அணங்கன் அறிவுக்கு அகஸ்தியன் வாக்கு அருனகிரி ஆனைக்கு சுக்கிர்வன் கொடைக்கு கர்னன் உலகமெல்லாம் ஆண்ட ஸ்ரீ விரபிராதாபராய வீர வசந்தராய விருப்பாச்சிராயர் வெங்கடபதிராயர் கிரிராயர் மல்லிகா அர்ஜூனராயர் திருமலைராயர் ஸ்ரீ ரெங்கராயர் பிரித்திவிராஜ்ஜியம் அருளாநின்ற சாலிய சகாத்தம் 1669 இதன் மேல் செல்லா நின்ற சார்வாரி வருஷம் வைகாசி மாதம் 25
பிரமலை நாட்டு பொன்னமராவதி கோனாட்டு இதன் தெலிம்பற்று பூலாங்குறிச்சியிலிருக்கும் ஊராயமைந்த ஊரவரில் வன்னியங்காத்தன் அம்பலகாரன் மகன் அடைக்கப்பன் அம்பலகாரன், கானிடைக்காயன்
உருமன் அம்பலகாரன் மகன் சிலம்பத்தேவன் அம்பலக்காரன் சோலை வீரனன் அம்பலகாரன் மகன் காடப்பன் பெரியகோனார் பிச்சப்பன் மகன் குப்பன் கோன் கோடாங்கி அடைக்கன்
மகன் மகன் சின்னடைக்கன் ஆகிய அஞ்சு வகைபேர் உள்ளிட்டோரும்
செவலூரிலிருக்கும் மறவரில் செம்பத் தேவன் மகன் வைரவன்,வள்ளாளத்தேவன் மகன் அழகாத்தேவன், அவையத்தேவன் நல்லதம்பி மகன் பிச்ச தேவன் கோனேரி மதுவத்தேவன் மகன் பூமத்தேவன்
திருவடி சோழத்தேவன் மகன் ஆவுடைக்குட்டி வலங்கை மதுவன் மகன் பழனியப்பன் மதுவத்தேவன் மகன் அழகாத்தேவன் சின்னாத்தேவன் மகன்
சடையத்தேவன். தெற்கு தெரு பூமத்தேவன் மகன் அழகுத்தேவன், ஆனைசோலை மகன் பிச்சத்தேவன் பெரிய மதுவன் மகன் குழந்தை சோலையப்பன் மகன் பெரிய அழகத்தேவன் தீத்தாரி மகன் மதுவத்தேவன் உடையான் கட்டையத்தேவன் மகன் சின்ன சோலையப்பன் சோழத்தேவன் மகன் சின்ன அழகத்தேவன் ஊர்குருவி திருவடித்தேவன்
மகன் அழகப்பன் ஆக பதினாறுவகை பேர் உள்ளிட்டார்க்கு பூலங்குறிச்சி
ஊராய் அமைந்த ஊரவரில் வன்னியங்காத்தான் அம்பலக்காரன் மகன் அடைக்கன் அம்பலகாரன் கண்டகாயன் உருமன் அம்பலகாரன் மகன் சிலம்பத்தேவன் அம்பலகாரன் சோலை வீரனம்பலகாரன் மகன் காடப்பன் பெரிய சோளூர் பிச்சன் மகன் குப்பன் கோன் கோடாங்கி அடைக்கன் மகன் சின்னடைக்கன் ஆக அஞ்சு வகைபேர் உள்ளிட்டோரோம் விற்பதற்க்கு இசைந்த விலையாவணம்.
இவ்வூர் செவலூர் பொதுமன்றத் தேற்றி நாடு நகரம் பல நடுவர் பல தொழிலாளர்கள் முன்பாக நிச்சயித்த விலையாவண அன்றாடம் விளங்கும் மதுரை சக்கரம் 450க்கு இந்த பனம் நானூற்றி ஐம்பதுக்கு அங்காடி பார்வையாய் ஒரு முதல் ஒரு முடிப்பாய் கலரியில் சாட்டி ஏற்றி கை செலவாக பொருள்படுத்தி கொண்டபடியினாலே இதுவும் விலையும் விலை பிரமாணமாகவும் இதுவேறு விலையுமாகிறது. சிலவோலை பெருமகிறது பொருள் சிலவோலை காட்டவும் கேக்கவும் கடவதன்றியே கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் சந்திராதித்தயர் பிரவேசம் வரைக்கும் பௌத்திர பரம்பரையாய் தானாதி வினியோகம் விக்கிரங்களுக்கும் உரிமைகளும் மகன் மகளுண்டு மகள் மகள் சீதனமும் கொடுத்து தான் வேண்டும் தான் கைக விலை செய்ய செப்பேர்ப்பட்ட பயன்படுவோருக்கும் உருத்தாய் ஐந்துகை பேருடனே பாதியும் இவர்கள் பதினாறு வகை பேருடனே பாத்தியுமாய் ஆண்டனுபவித்து கொள்ளக் கடவோராகவும் ஆளுமிடத்தில் இச்சாசனத்துக்கு ஏட்டுகுற்றம் எழுத்துக்குற்றம் சொல்குற்றம் பொருள்குற்றம் வாசகப்படும் வரி மாறாட்டம் வரிமுடைந்து எழுதல் செய்த இக்குற்றம் எக்குற்றமாய் முண்டாகியிருந்தாலும் ககுற்றமென்று சொல்லவல்லவராகவும் இப்படிக்கு நாங்கள் அனைவருள்ளிட்டாரும் சம்மதித்து இந்த காணியாச்சி விலை பிரமானம் சாதனம் பண்ணிக்க் கொடுத்தோம்
பூலாங்குறிச்சி ஊராய் அமைந்த ஊரவரில் வன்னியங்காத்தனம்பலகாரன் மகன் அடைக்கப்பனம்பலகாரன் கண்டக்காயன் உருமன் அம்பலகாரன் மகன் சிலம்பத்தேவனம்பலகாரன் சோலைவிரனம்பலகாரன் மகன் காடப்பன்பெரிய கோனார் பிச்சப்பன் மகன் குப்பன் கோன் கோடாங்கி அழகன் மகன் சின்னடைக்கன் ஆக அஞ்சுவகைப்பேர் உள்ளிட்டோரோம் செவலூரில் இருக்கும் செம்பத்ததேவன் மகன் வைரவன் வல்லாளத்தேவன் மகன் அழகத்தேவன் அவையத்தேவன் மகன் பிச்சத்தேவன் கோனேரி மதுவன் மகன் பூமத்தேவன் திருவடி சோழத்தேவன் மகன் ஆவுடையக்குட்டி வலங்கி மதுவன் மகன் பழனியப்பன் மதுவத்தேவன் மகன் அழகதேவன் சின்னாத்தேவன் மகன் காடத்தேவன் தெற்குதெரு பூமத்தேவன் மகன் அழகத்தேவன் ஆனசோலை மகன் பிச்சத்தேவன் பெரியு மதுவன் மகன் குழந்தை சோலையப்பன் மகன் பெரிய அழகத்தேவன் தீத்தாரி மகன் மதுவத்தேவன் உடையான் கட்டையத்தேவன் மகன் சின்ன சோலையப்பன் சோழத்தேவன் மகன் சின்ன அழகாத்தேவன் ஊர்க்குருவி திருவடித்தேவன் மகன் அழகப்பன்
ஆக பதினாறு வகைப்பேர் உள்ளிட்டாருக்கும் கானியாட்சி விலைப்பிரமானம் பண்ணிக்கொடுத்தோம். இந்தப்படிக்கு நாட்டுக்கணக்கு
சந்தனம்பிள்ளையும் தச்ச ஆசாரி கொல்ல ஆசாரிகளில் பிச்சகுட்டி மகன் வீரப்பனாசாரியும் உள்ளிட்டோரும் குசவர் வேளார்களில் மெய்ய வேளான்
மகன் சுப்பிரமணிய வேளான் உள்ளிட்டாரும் ஊராண்டி பெரிய தம்பி பண்டாரம் மகன் கணபதி பண்டாரம் உள்ளிட்டாரும் ஏகாலிகளில் என்னார நல்லான் மகன் அழகன்,ஏகாலி உள்ளிடாரும் நாவிதம் குப்பன் மகன் குருநாதன் பரியாரி உள்ளிட்டாரும் தோட்டிகளில் சங்கதி சின்னான் மகன் மலையன் தோட்டி உள்ளிடாரும் மேற்படி கருத்த உருமன் மகன் சோலைத்தோட்டி உள்ளிட்டாரும் மேற்படி சில்லாரி உருமன் மகன்
தவசித்தோட்டி உள்ளிடாரும் இவர்கள் அனைவரும் உள்ளிட்டாரும்
ஊரவர்கள் அனைவரும் உள்ளிட்டரும் சம்மதத்தின் சொல்ல இந்த சாசனம் எழுதினேன் மேற்படி ஊர் நாட்டுக்கணக்கு சந்தனம் பிள்ளை குமாரன் முத்துப்பிள்ளை மாப்பிள்ளை ஆவத்தாரனு பிள்ளை குமாரன்
ராமசாமி கையெழுத்து அம்பலம் அடைக்கப்பன் தற்குறி
காடப்பன் தற்குறி குப்பங்கோன் தற்குறி சின்னடைக்கன் தற்குறி செவலூர்
பனைபிடுங்கி அம்பலகாரன் பெரிய தம்பி அம்பலகாரன் தற்குறி கனபதி பண்டாரம் தற்குறி வீரப்பனாசாரி தற்குறி வன்னார அழகன் தற்குறி நாவித குருநாதன் தற்குறி மலையன் தோட்டி சோலைத்தோட்டி தற்குறி தவிசித்தோட்டி தற்குறி முட்டுக்கட்டி உருமன்:
செய்தி:
பூலாங்குறிச்சியை சார்ந்த வன்னியங்காத்தன் அம்பலகாரன் மகன் அடைக்கப்பன் அம்பலகாரன், கானிடைக்காயன்
உருமன் அம்பலகாரன் மகன் சிலம்பத்தேவன் அம்பலக்காரன் சோலை வீரனன் அம்பலகாரன் மகன் காடப்பன் பெரியகோனார் பிச்சப்பன் மகன் குப்பன் கோன் கோடாங்கி அடைக்கன்
மகன் மகன் சின்னடைக்கன் ஆகிய 5 பேரும் தங்கள் நிலத்தை 450பணம் ஆதாவது (450மதுரை சக்கரம்-நாயக்க நாணயம்) க்கு செவ்வலூரை சார்ந்த 16 மறவர்களுக்கு விற்றனர்.
அவர்களில் செம்பத்ததேவன் மகன் வைரவன் வல்லாளத்தேவன் மகன் அழகத்தேவன் அவையத்தேவன் மகன் பிச்சத்தேவன் கோனேரி மதுவன் மகன் பூமத்தேவன் திருவடி சோழத்தேவன் மகன் ஆவுடையக்குட்டி வலங்கி மதுவன் மகன் பழனியப்பன் மதுவத்தேவன் மகன் அழகதேவன் சின்னாத்தேவன் மகன் காடத்தேவன் தெற்குதெரு பூமத்தேவன் மகன் அழகத்தேவன் ஆனசோலை மகன் பிச்சத்தேவன் பெரியு மதுவன் மகன் குழந்தை சோலையப்பன் மகன் பெரிய அழகத்தேவன் தீத்தாரி மகன் மதுவத்தேவன் உடையான் கட்டையத்தேவன் மகன் சின்ன சோலையப்பன் சோழத்தேவன் மகன் சின்ன அழகாத்தேவன் ஊர்க்குருவி திருவடித்தேவன் மகன் அழகப்பன் ஆக 16 பேருக்கு விற்றனர்.
இதற்க்கு சாட்சியாக ஊர் தோட்டி,ஏகாலி,நாவிதர்,பண்டாரம்.பிள்ளை,குசவர்,ஆசாரி,கனக்கு பிள்ளை ஆகிய தொழிளாளர்கள் சாட்சி தற்குறி(கையொப்பம்) இட்டுள்ளனர்.
மேற்கண்ட பட்டயம் 1700 நூற்றாண்டு பிற்பகுதி என தெரிகிறது. இதில் மறவர்களின் பெயர்கள் வல்லாளத்தேவன் என்ற பெயர் கொய்சாள அரசன் பெயரும் கோனேரி மதுவன் என்றபெயர் பாண்டியர் சோழர்களுக்கும்
மற்றும் வலங்கை மதுவன் மற்றும் திருவடி சோழத்தேவன் என்ற சோழர்களின் பெயரும் வருவது சிறப்புக்குறியது
நன்றி:
சாமித்தேவர்
கோவனூர்(புதுகை)
மலேசியா