Category Archives: கல்வெட்டு

படைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள்

புதுகை மாவட்டத்தின் தெற்கு,தென்மேற்கு பகுதியில் குறிப்பாக வெள்ளாற்றின் தெற்கே கோட்டூர்,லம்பக்குடி வரையிலும் மறவர்குடியிருப்புகள் செரிவாக காணப்பட்டன.சிலம்பு கூறும் கோவலன் கண்ணகி பயணத்தில்,கொடும்பாளூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் இம்மக்கள் வாழ்ந்த குறிப்புகள் காணப்படுகின்றன.புறப்பொருள் வெண்பாமாலையில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்பது மறவரை குறிக்கும் தொடராகும்.கொற்றவை வழிபாட்டினை பின்பற்றுபவராக இன்றளவும் புதுக்கோட்டை … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Tagged | Leave a comment

திருவாரூர் அருகே சோழர் காலத்து சிவன் கோவிலில் கி.பி., 912ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலம் கிராமத்தில், மிகப் பழமையான சோழர் காலத்து சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது. இக்கோவில் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததால், அப்பகுதியினர், கோவில் பக்கம் செல்ல அச்சப்பட்டு வந்தனர். கோவிலைப் புதுப்பிக்க, முன்னாள் ஊராட்சித் தலைவர் … Continue reading

Posted in கல்வெட்டு | Tagged , | Leave a comment

திருக்கோவில் கல்வெட்டுக்கள்

திருக்கோவில் கல்வெட்டுக்கள்: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலின் மூலவர் சுவாமி சன்னிதியின் மேற்கு, வடக்கு தெற்குபுற வெளி சுவர்களில் மொத்தம் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. 1914 ஆம் ஆண்டு தொல் பொருள் துறையினர் இக்கல்வெட்டுக்களை படியெடுத்து வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒன்பது கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தவைகளாகும். இது தவிர சூரிய … Continue reading

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment

கோட்டூர் (திருக்கோட்டூர்)

கல்வெட்டு: இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சோழர்களுடையன. இவைகளுள் விளக்குத்தானம், விளக்குப்பணதானம், கோயிலுக்கு நிலதானம், முதலியவைபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்ற ஒரு பெருமகனார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சேக்கிழார் தம்பியாரது பெயர் வருதல் காண்க. திருத்தருப்பூண்டி மடாதிபதி திருமாளிகைப் பிச்சர் … Continue reading

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment

சிவகங்கை மாவட்டம் வேலங்குடி மறவர் கோயிலுக்கு தந்த நிலங்கள்

தென் இந்திய கல்வெட்டு.எண்.50-1916 செய்தி: சிவகங்கை மாவட்டம் வேலங்குடி ஊரை சார்ந்த மறவர்கள் “ஒரு சொல் வாசக பேரையூரன் குடிகாடு” எண்ற பெயரில் விளங்கிய நிலத்தை வேலங்குடி மறவர்கள் இறையிலி திருநாமத்துக்கு காணியாகக் கோயிலுக்கு விற்றுதந்தனர். இந்நில உரிமையை பற்றிய கல்வெட்டு தரவுகள் பற்றிய செய்திகள் கீழே குறிப்பிடதக்கன. காலம்:15-ஆம் நூற்றாண்டு. சுபமஸ்து சகாத்தம் 1423ந் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Tagged | Leave a comment

உடுமலை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு!

  உடுமலை அமராவதி அணை அருகே கல்லாபுரம் பகுதியில் கிடைத்த சுமார் 800 ஆண்டு பழமையான கல்வெட்டு மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்லாபுரத்தில் உள்ள வீதியொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் கல்வெட்டு குறித்து இந்த ஊரைச் சேர்ந்த ஜான்சன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரத்துக்குத்  தகவல் கொடுத்தார். சுந்தரத்தின் மூலம் கிடைத்த கல்வெட்டு தகவல்கள்: … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அடஞ்சூர் அனந்தீஸ்வரர் கோவில், கர்ப்பக்கிரக கதவு அருகில், கருங்கல்லில், முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் செதுக்கிய அரிய கல்வெட்டை, தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தஞ்சையிலிருந்து, 35 கி.மீ. தூரத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள, அனந்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜேந்திர சோழனின், மூத்த மகனான ராசாதிராசனின் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , | Leave a comment

சோழமன்னர்கள் வரலாறு கூறும் கல்வெட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம் தெய்வ வழிபாட்டிலும், கோவில்கள் மீதும் சோழமன்னர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை பறைசாற்றுகிறது. தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இங்குள்ள குடவறை கோவில்கள், சமணர் படுக்கைகள், மூவர் கோவில்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு அவிநாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

அவிநாசி : “”தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு இருந்துள்ள செய்தி பற்றி, அவிநாசியில் புதிதாக கண்டுபிடிக்கபட்ட கல்வெட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன,” என கல்வெட்டு ஆராய்ச்சியா ளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.அவிநாசி, வ.உ.சி., குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியான இவர், கொங்கு மண்டல கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து … Continue reading

Posted in கல்வெட்டு | Tagged , , | Leave a comment

குடுமியான்மலை -1

குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் … Continue reading

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment