Category Archives: பாண்டியன்

3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | 1 Comment

பாண்டிநாட்டுத் துறைமுகம்

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே

இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன்.வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755-ம் ஆண்டு பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த ஒரு இந்தியனின் முதல் போராகும். பூலித்தேவர் பற்றிய பூர்வீகம்:  பூலித்தேவர் பற்றிய பூர்வீகம் பற்றிய பல ஆய்வாளர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரனாக … Continue reading

Posted in பாண்டியன், பூலித்தேவன், மறவர் | Tagged | Leave a comment

கொல்லங்கொண்டான் பாண்டியன்

கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் ‘கொல்லங்கொண்ட பாண்டியன்’ என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வரகுணராம பாண்டியன் -கி.பி. 1613-1618

வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப்பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் குலசேகர சோமாசிரியார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். 1748 ஆம் ஆண்டளவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னனொருவனும் தனது பெயரை வரகுணராம பாண்டிய குலசேகர தேவ … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

வரதுங்கராம பாண்டியன் -கி.பி. 1588-1612

வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் ‘வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்” எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்-கி.பி. 1564-1604

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

நெல்வேலி மாறன் பாண்டியன் -கி.பி. 1552-1564

நெல்வேலி மாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகனான இவன் வீரபாண்டியன்,குலசேகர பாண்டியன்,பொன்னின் பாண்டியன்,தர்மப் பெருமாள்,அழகன் பெருமாள் போன்ற பெயர்களினையும் உடயவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் தென்காசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராக்கிரம குலசேகரன் -கி.பி. 1543-1552

பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543 முதல் 1552 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சடையவர்மன் சீவல்லப பாண்டியன் -கி.பி. 1534-1543

சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகனானான இம்மன்னன் பாண்டியராச்சிய தாபனாசாரியன், இறந்த காலமெடுத்தான் போன்ற பட்டங்களினை உடையவனும் ஆவான். திருவாங்கூர் நாட்டில் உதயமார்த்தாண்டவர்மன் என்ற சேர மன்னன் ஆட்சி செய்து வந்தான் அவன் தென்பாண்டிய நாட்டினை கைப்பற்றினான் இச்சேர மன்னனைப் பற்றிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment