Category Archives: தேவர்

ஒரு நாட்டுபுற பாடல் காட்டும்(விரையாச்சிலை வகைப்பாட்டு)

                                                                                … Continue reading →

Posted in தேவர், மறவர் | Leave a comment

ஆபரேசன் 100!

  2007ஆம் ஆண்டு தேவருக்கு நூற்றாண்டுவிழா நடக்கிறது வருடமுழுவதும் நடந்த கோலாகலத்தை கண்டு முகம் சுழிகிறது ஒரு தரப்பு. அதன்பின், நீங்கள் அறிந்தப்படியே தேவர் சிலை அவமதிப்பு அந்த ஆண்டு தென் மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது. முகம் சுழித்தவர் அவசரமாக ஒற்றை சிந்தனையிலுள்ள ஒரு தரப்பு ஆட்களை திரட்டுகிறார் “ஆப்ரேசன் 100” என்ற திட்டம் வகுக்கப்படுகிறது. … Continue reading →

Posted in தேவர் | Leave a comment

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி

பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading →

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

திருவாடானை பாண்டியர்கள்

                                      (அஞ்சுகொத்து மறவர்கள்) உ.மீனாட்ச்சி துனை “காரார் குழலி பவள செவ்வாய்ச்சி கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள் திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர் போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி “மறப்போர் … Continue reading →

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | 1 Comment

பாம்பன் விவேகானந்தர் இல்லம்

உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் … Continue reading →

Posted in தேவர் | Tagged | Leave a comment

சேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள்

தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற … Continue reading →

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது??..

இன்று தேவரின இளைஞர்கள் பெரும்பாலானோர் நம்முடைய அரசியல் தேவையை நன்குணர்ந்துள்ளனர் ஆனாலும் அவர்களுக்கு யாரை நம்புவது எந்த தலைமையை ஏற்பது எந்த கட்சிக்கு உழைப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். படித்த இளைஞர்கள் திராவிடத்தை வெறுக்கின்றனர் ஆனால் தலைமைகள் நம்மை நம்ப மறுத்து அதை விட மறுக்கின்றனர் அவர்கள் விட நினைத்தாலும் திராவிடம் அவர்களை சும்மா விடாது. … Continue reading →

Posted in தேவர் | Tagged | 2 Comments

படைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள்

புதுகை மாவட்டத்தின் தெற்கு,தென்மேற்கு பகுதியில் குறிப்பாக வெள்ளாற்றின் தெற்கே கோட்டூர்,லம்பக்குடி வரையிலும் மறவர்குடியிருப்புகள் செரிவாக காணப்பட்டன.சிலம்பு கூறும் கோவலன் கண்ணகி பயணத்தில்,கொடும்பாளூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் இம்மக்கள் வாழ்ந்த குறிப்புகள் காணப்படுகின்றன.புறப்பொருள் வெண்பாமாலையில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்பது மறவரை குறிக்கும் தொடராகும்.கொற்றவை வழிபாட்டினை பின்பற்றுபவராக இன்றளவும் புதுக்கோட்டை … Continue reading →

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Tagged | Leave a comment

“தேவர் தந்த தேவர்” -பி.கே.மூக்கையா தேவர்

தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர். மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் … Continue reading →

Posted in தேவர், தேவர்கள் | Tagged , | Leave a comment

முக்குலத்தோர் இந்திர மரபினரா?

(போட்டு உடைக்கபடவேண்டிய கட்டுக்கதை) முக்குலத்தோர் இனத்தில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர், அகமுடையார்.இவர்களை சில மட அறிவுஜீவிகள் இந்திர மரபினர் என இகழ்ந்து கூறி வருகின்றனர்.இவர்கள் இந்திர மரபினரா அல்லது இவர்களை அப்படி கூற காரனம் என்ன.இந்த பொய்மையை போட்டுடைக்கவே இந்தக்கட்டுரை. அகலிகை-இந்திரன் புரட்டுக்கதை: இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி … Continue reading →

Posted in தேவர், தேவர்கள் | Tagged , | Leave a comment