பாண்டிய மன்னர் நாணயம் கண்டுபிடிப்பு

coins

சங்க காலப் பாண்டிய மன்னன் “செழியன்’ நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவரும், “தினமலர்’ நாளிதழின் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். அந்த நாணயத்தைக் கண்டறிந்தது தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் கிருஷ்ணமூர்த்தி கூறியது:

திருநெல்வேலி கீழ ரத வீதியில் உள்ள பாத்திரக் கடையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பழைய நாணயங்கள் வாங்கினேன். அந்த நாணயங்களை ஆய்வு செய்ய கடினமாக இருந்தது. அதனால் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு வைத்திருந்தேன். பத்து தினங்களுக்கு முன்பு அந்தக் குவளையைச் சுத்தம் செய்ய எடுத்தபோது, வடிவமைப்பில் வித்தியாசமான நாணயம் ஒன்றைக் கண்டேன்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

இளையன்புதூர் செப்பேடுகள்

இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

மொழி மற்றும் வடிவமைப்பு :

கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. தொடக்கத்திலும், முடிவிலும் வடமொழில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. மொத்தம் 65 வரிகளை உடையது.24 அங்குல நீளமும், 11.5அங்குல அகலமும் கொண்ட இச்செப்பேட்டின் எடை 2.7 கிலோ ஆகும்.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.

திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.
ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், “ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.
Posted in சோழன் | Tagged | Leave a comment

3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம் உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுபோல, இறக்குமதியும் நடந்தது. காலப்போக்கில், கொற்கை துறைமுகம் அழிந்து போனது. இந்நிலையில், பெங்களூரில் மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அறவாழி, சில நாட்களுக்கு முன், சொந்த மாவட்டமான தூத்துக்குடி வந்தார். அவர், கொற்கையில், பொக்லைன் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அங்கு, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.
Posted in பாண்டியன் | Tagged | 1 Comment

கொடுமணல்-ஒரு தொல் நகரம்

கொடு மணல்:

திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களின் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள கொடுமணல் கிராமம் ஒரு தொல் பழங்கால தகவல் சுரங்க கொத்து.இந்த தொல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகள்,ஆராய்ச்சிகள்,அதன் அடிப்படையிலான கருது கோள்கள்,முடிவுகள் நமக்கு ஒரு உவப்பான மேலும் தகவல்பூர்வமான பழந்தமிழர் நாகரீகம் பற்றிய சித்திரத்தை அளிக்கின்றன.இந்த தொல் நகரம் நமக்கு சொல்லும் செய்திகளையும்,அது வரலாற்றின் பக்கங்களில் பதிந்துள்ள அதன் தடங்களையும் நமக்காக மீள் உருவாக்கம் செய்து அதன் வரலாற்று பக்கங்களை நாம் தரிசிக்க அனுமதிக்கிறது.இங்கு மேலும் விரிவான தொல்லியல் துறையின் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான புதிய வெளிச்சங்கள் நம் சங்க கால வரலாற்றில் கிடைக்கும்.

சங்க சித்திரங்களில் கொடுமணல் :

கொடுமணல் தொல்லியல் களம் இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் வட கரையில், ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில்காணப்படுகின்றன.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பாண்டிநாட்டுத் துறைமுகம்

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது.

இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது.

அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே

இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன்.வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755-ம் ஆண்டு பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த ஒரு இந்தியனின் முதல் போராகும்.

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம்: 

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம் பற்றிய பல ஆய்வாளர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரனாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த ஒன்று. 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு மன்னனால் ‘வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்’ என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்ட நாடே இந்த பூழிநாடு. ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையார் புரம். ஆனால் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ஸ்வெல்ஸ் ஆதாரப்பூர்வமான தனது கூற்றில்

தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378 – 1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424 – 1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513 -1548
4 சமசதி பூலித்தேவன் 1548 – 1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572 – 1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600 – 1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610 – 1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638 – 1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663 – 1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726 – 1767

“காத்தப்ப பூலிதுரை தேவர்”.இவரது முழு அபிஷேக பெயராக “வரகுனராம சிந்தாமனி ஆபத்துகாத்த பூலித்துரைப்பாண்டியன்”என்பது தான். இந்த 10-வது பூலித்தேவர் தான் நாம் கொண்டாடும் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.

Continue reading

Posted in பாண்டியன், பூலித்தேவன், மறவர் | Tagged | Leave a comment

மூவேந்தரும் ஒரே குடிவழியினர்

Untitled-1

பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்)

மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு
ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் – சொல்லர் –
சோலர் – சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது.

மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.

பாண்டியர் வரலாறு மீட்டமைப்பது

பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.

இந்நிலையில் 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர். பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா
இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.
Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , , | Leave a comment

திருவாரூர் அருகே சோழர் காலத்து சிவன் கோவிலில் கி.பி., 912ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

cholan

திருவாரூர்:

திருவாரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலம் கிராமத்தில், மிகப் பழமையான சோழர் காலத்து சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது.

இக்கோவில் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததால், அப்பகுதியினர், கோவில் பக்கம் செல்ல அச்சப்பட்டு வந்தனர். கோவிலைப் புதுப்பிக்க, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமலிங்கம், சிவராமன் உள்ளிட்ட குழுவினர் முயற்சித்தனர். முதற்கட்டமாக, நேற்று முன்தினம் முட்புதர்களை அகற்றி, பழைய கற்களை சரி செய்தனர். அப்போது, பள்ளம் தோண்டியதில், மூன்று கல் தூண்கள் கிடைத்தன.
Continue reading

Posted in கல்வெட்டு | Tagged , | Leave a comment

பந்தல்குடி வரலாறு

இவ்வூர் அருப்புக்கோட்டை வட்டத்துப் பந்தல்குடி உள்வட்டத்தில் அருப்புக்கோட்டை எட்டையபுரம் சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து 9கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. பந்தல் என்பது உயரமான தூண்களைக் கொண்ட கல் மண்டபத்தைக் குறிப்பதாக அமையும். இத்தகைய மண்டபம் பழங்காலத்தில் கோயில் திருவிழாக்களில்,இறைவன் எழுந்தருளுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.நாளடைவில் இங்கு குடியிருப்பு தோன்றியதால் இஃது பந்தல்குடி ஆயிற்று எனலாம்.

மேலும் பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பெறப்போராடிக் கொண்டிருந்த சமயம் பல குறுநில மன்னர்கள் சிற்றூர்கள் பலவற்றை அழித்தார்கள். அச்சிற்றூர்களில் இதுவும் ஒன்று. அவர்கள் அழிவு ஏற்படுத்திய பின்பு அமைதி ஏற்பட்டது. அவ்வமைதிக்குப் பின்னர் கோயில் மண்டபத்தைச் சுற்றி தற்போதைய கிராமம் ஏற்பட்ட காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் செவிவழிக் கதை ஒன்று கூறுகின்றது.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment