Tag Archives: பாண்டியன்

உக்கிரப் பெருவழுதி

பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். வெற்றி : ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.[1] கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன். இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உரிஞ்சிக்கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக்கொண்டானாம். நட்பு … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் 6-7 வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தான். பொருளடக்கம்: 1 காலம் 2 நெடுஞ்செழியனைக் குறிக்கும் அடைமொழித் தொடர்கள் 3 நெடுஞ்செழியன் வெற்றிகள் 3.1 வெற்றிக் குறிப்புகள் 3.2 நெடுஞ்செழியனுக்கு … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வெற்றிவேற் செழியன்

வெற்றிவேற் செழியன் கி.பி.200 முதல் 205 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்துவந்த பாண்டிய மன்னனாவான். இவன் நன்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். கொற்கையில் இளவரசனாகவிருந்த இவன் நெடுஞ்செழியனின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆளும் உரிமையினைப் பெற்றான். சேர மன்னன் செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பில் இருந்த வேளை வெற்றிவேற் செழியன் மதுரையில் முடிசூடிக் கொண்டான் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன் கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , , | Leave a comment

பூதப் பாண்டியன்

பூதப்பாண்டியன் என்பவன் சங்க காலத்துப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவன் குறுநில மன்னர்களுடன் நட்பாக இருந்தவன் எனப்படுகிறது. இவன் ஒல்லையூர் என்னும் ஊரை வென்றதாலோ அல்லது வேறு தொடர்பாலோ ஒல்லையூர் தந்த என்னும் அடைமொழி கொண்டவன். இவனுடைய மனைவி கோப்பெருங்கோப்பெண்டு என்னும் நல்லாள், இவன் இறந்தவுடன் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங்கோப்பெண்டு அவர்களைப் பற்றி இரண்டு பாடல்கள் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

அறிவுடை நம்பி

அரசன் அறிவுடை நம்பி : அறிவுடை நம்பி கி.பி. 130 முதல் 145 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் கேள்விச் செல்வம், பொருட்செல்வம் உடையவனாகவும், கொடை வள்ளலாகவும், செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும், அறிஞர் பலர் போற்றுதற்கேற்ற புகழ் மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான். … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

இளம் பெருவழுதி

இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்திருக்க வேண்டும். இவனை கடலுள் மாய்ந்த என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென் வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிபிடப்படுகின்றது. இவன் திருமாலிடம் பேரன்புடைய்வனாக இருந்தான் எனவும் தெரிகின்றது. இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவனாகவும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். பொற்கை பெற்ற வரலாறு : மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பெரும்பெயர் வழுதி

பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார்.[1] ஈகைக்கடன் பூண்ட கவுரியர் வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இந்தப் பாண்டியனைப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி எனக் குறிப்பிடுகிறது. கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

மதிவாணன்

மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment