Monthly Archives: July 2013

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் -கி.பி. 1422-1463

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி.” பூமிசைவனிதை,நாவினில் பொலிய” எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். ஆற்றிய போர்கள் : திருக்குற்றாலத்தில் சேர … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276 முதல் 1293 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தான். சேலம், கடப்பை, தென்னார்க்காடு போன்ற பகுதிகளினையும் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் -கி.பி. 1268-1281

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இராக்கள் நாயகன் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றிருந்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது இளவலான இம்மன்னன் அவனின் ஆட்சிக்குத் துணையாட்சி புரிந்தான் என திருவெண்ணெய் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. ‘திருமகள் செயமகள்’,’திருமலர் மாது’ என இவனது மெய்க்கீர்த்திகள் தொடங்கும். … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான். மாறவர்மன் குலசேகரன் ‘எம் மண்டலமும் கொண்டருளிய’, ‘கோனேரின்மை கொண்டான்’, ‘கொல்லங்கொண்டான்’ என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

முதலாம் சடையவர்மன் குலசேகரன் -கி.பி. 1149-1158

முதலாம் சடையவர்மன் குலசேகரன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை ஆண்டான்

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

விக்கிரம பாண்டியன் -கி.பி. 1149-1158

விக்கிரம பாண்டியன் கி.பி. 1180 முதல் 1190 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான இவன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் ஆட்சிப் பொறுப்பினைப் பெற்றான்.மூன்றாம் குலோத்துங்கனுடன் மிகுந்த மரியாதையுடனும்,பண்பினையும் உடையவனாகத் திகழ்ந்த விக்கிரம பாண்டியன் கி.பி. 1190 ஆம் ஆண்டளவில் இவ்வுலக வாழ்வை நீத்தான் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சடையவர்மன் வீரபாண்டியன் -கி.பி. 1175-1180

சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பராக்கிரம பாண்டியனின் மகனான இவனது மெய்க்கீர்த்திகள் ‘பூமடந்தையும்,சயமடந்தையும்’ எனத் தொடங்கும்.   சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சி நிலை : இலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் மதுரையினை ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சடையவர்மன் குலசேகர பாண்டியன் -கி.பி. 1162-1175

சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.சீவல்லப பாண்டியனின் மகனான இம்மன்னன் கி.பி. 1162 ஆம் ஆண்டளவில் முடிசூடிக்கொண்டான்.இவனது மெய்க்கீர்த்திகள் ‘பூதலமடந்தை’ எனத் தொடங்கும்.நெல்லையிலிருந்து பாண்டிய நாட்டில் இவன் ஆட்சி புரிந்தவேளை பராக்கிரம பாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி செய்தான்.பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்ய வேண்டுமென்ற … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

மாறவர்மன் சீவல்லபன் பாண்டியன் -கி.பி. 1132-1162

மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.கி.பி. 1132 ஆம் ஆண்டு முடிசூடிய இவனது மெய்க்கீர்த்திகள் “பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப” எனத் தொடங்கும்.திருவாதாங்கூர் சேரன் வீரரவிவர்மன் இவனிடன் திறை பெற்றான்.மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சடையவர்மன் பராந்தக பாண்டியன் -கி.பி.1150-1162

சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த இவனது மெய்க்கீர்த்தி “திருவளர் செயம் வளரத் தென்னவர் தம்குலம் வளர” என இருக்கும்.சேர மன்னனொருவனை வென்று அவனிடம் திறை வசூலித்து,காந்தளூர்ச் சாலையில் களம் அறுத்து.விழிஞத்தைக் கைப்பற்றி தென் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment