Category Archives: பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்-9

 பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 9 வழிநடைப் பேச்சு பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -8

                                            பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 8: பல்லக்கில் யார்? சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை. சம்புவரையர் உரத்த குரலில், ” பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-7

பொன்னியின் செல்வன் – பாகம் 1   அத்தியாயம் – 7: சிரிப்பும் கொதிப்பும் பொன்னியின் செல்வன் கதை நிகழுமிடங்கள்…. அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-6

பொன்னியின் செல்வன் – பாகம்: 1   அத்தியாயம்-6 நடுநிசிக் கூட்டம்   குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-5

பொன்னியின் செல்வன் – பாகம்: 1   அத்தியாயம் 5. குரவைக் கூத்து அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், “கந்தமாறா! கந்தமாறா!” என்று அழைத்தது. “அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 4

பொன்னியின் செல்வன் பாகம் -1   அத்தியாயம் 4: கடம்பூர் மாளிகை இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 3

 பொன்னியின் செல்வன்- பாகம் 1 அத்தியாயம் 3. விண்ணகரக் கோயில்   சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன. வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -1 அத்தியாயம் -2: ஆழ்வார்க்கடியான் நம்பி ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்… சோழர்களின் வீரம் சொல்லும் பெரும் கதை!

                                                               பாகம் -1 புதுவெள்ளம் அத்தியாயம் -1: ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக. தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment