கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

மதுரைக் ARE.1962-63 கோயில்

 பாண்டியநாடு தமிழுடைத்து.தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக மட்டும் வெளியிட்டிருந்தது.தற்போது இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தமுள்ள 450 கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்து படியெடுத்து தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.தேவராயர் காலத்தில் சாதி வரி என்ற வரி நீக்கப்பட்டு உள்ளதற்கான குறிப்புகள் உள்ளன. பிராமணர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் ‘நாவித பிராமணர்’ என்றும் ஒரு குறிப்பு உள்ளது. மறவர்,பிராமணர்,கம்மாளர்,பறையர் தொடர்பான குறிப்புகள் உள்ளன. 
மறவர்கள் நிலவுடைமை சமுதாயமாக இருந்ததும் தெரிய வருகிறது.
மறவரை பற்றிய ARE 1962-63 கல்வெட்டு தென் இந்திய கல்வெட்டுகள் தொகுதி வருடம் 1962-63ல் வெளியாகிவுள்ளது அதில் வந்தசெய்தியை விவரிக்கிறோம்.

இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:
தமிழ் கல்வெட்டு என்:15 ARE.1962-63 No.466மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.செய்தி: திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை,முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில் வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்த பூம்பிழால் திருப்புவன்-திருச்சுழி சாலையில் உள்ளது.
கல்வெட்டு 4:ஸ்வஸ்தி ஸ்ரீ பூமலர் திருவும் பொரு செயமடந்தை தாமரைக்கு முலைசேர்புயதிருப்ப வேதநாவின் வெள்ளிதாமரை காதல் மாது கவின் பெறதிளைப்பவெண்டிரையுடுத்தி மண்டினி கிடக்கை…………….கொற்றது எண்டிசையானை எருத்த மேறிகண்ட நாடமதென கயல்கணி கூரகோசலம் துளுவம் குதிரங்குச்சுர மாளுவம் மகதம் பொப்புலம் புண்டரங்க கலிங்கம் தெலிங்கம் சோளகம் சீனம் முதலாம் விதிமுறை திகழ வெவ்வேறுவகுத்த நிலக்கிழமையின் முடிபுனை வேந்தர் கொரு தனிநாயகன் என்றுகேத்ட்ததிருமுடி சூடி செங்கோலேச்சி……….மதிக்குலம் விளங்க கோமுதல் கோற பன்மரான திருபுரசக்கரவர்திகள் சுந்தர பாண்டியதேவர்க்கு யாண்டு…………
…………….கீழ் வேம்பநாட்டு….திருக்கடம்ப ம..த்தரனான அதிகைமான் காங்கை(இருக்கை) பூம்பிலால் வேளன் கூத்தனான…..நல்லூர் மழுவாடி.…. முத்தரையன்கோட்டை மறவரிடம் விலை கொண்ட…ம கன்மியார் கோட்டை மறவரில்ஆழ்வான் பாண்டியான தென்னவன் தென்கங்கரையனான உடையார் ஆழ்வான்..தொண்டீஸ்வர உடையார் ஊரனிக்கு………இறையிலிக்காக இறுப்பாக வேண்டி………அதிகைமான் காங்கை……பூம்பிலால் வேலான் கூத்தனான…….. அழகனானஅழகிய அரையனும்……பாண்டியன் ஏம்பலும் கன்மியார் கோட்டை மறவரில் ஆழ்வான்பாண்டியனான தென்னன் கங்கரையன்………..உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு அனுபவித்து வரும்….பூம்பிலால்………எல்லைக்கு……..இறையிலி நீர்நிலம்…….உள்பட……….

விளக்கம்: இந்த கல்வெட்டு மீனாட்சி அம்மன் கோவில் முக்குருனி விநாயகர் அருகே உள்ள இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் கல்வெட்டாகும்.இதில் திருப்புவனம்-திருச்சுழி சாலையில் உள்ள பூம்பிலால்,முத்தரையன்கோட்டை,கன்மியார் கோட்டை ஊர் மறவர்களிடம் விலை கொண்ட நிலங்களை ஆளுடைய நாச்சியாருக்கு இறையிலி விட்டுள்ளனர். மேற்கண்ட கன்மியார் கோட்டை மறவரில் பாண்டியனான தென்னவன் தென்கங்கரையன்என்பவனிடம் அதேபோல் முத்தரையன் கோட்டை மறவரில் உடையான் தென்னவதரையனிடம் பெற்ற நிலங்களின் விபரம் இந்த கல்வெட்டுகளில் வந்துள்ளது. இதே போல் கன்மியார் கோட்டை மறவர் ஊரில் உள்ள அரையன் பெயர் அதிகமான், தென்னவதரையன்,விழுப்பரையன் போன்றோர் இடம்பெற்ற செய்தியும் வந்துள்ளது. கன்மியார் கோட்டை மறவரில் தென்னவன் ஆழ்வான பாண்டியனான தென்னகங்கரையனும்,முத்தரையன் கோட்டை மறவரில் உடையான்தென்னவதரையனும் இந்த நிலங்களை விற்குமுன் வேறு ஒருவருக்கு ஒற்றி வைத்துள்ளனர் இதன் பின்னே இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.

இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:21மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.செய்தி: இதற்கு முன் பார்த்த கல்வெட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம்.திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டைமுத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி .
கல்வெட்டு 5:சக்கரவர்த்தி கொனேரின்மை கொண்டான்…..மாடக்குளம் கீழ் மதுரை(திருவாலவாயுடைய)…………
…………….கலான் காங்கை(இருக்கை) கொங்கர……பக்கல் விலை கொண்ட தூசி ஏம்பல்….. கன்மியார் கோட்டை மறவரில்ஆழ்வான் பாண்டியான தென்னவன் தென்கங்கரையன் எல்லைக்கு கிழக்கே வடவெல்லை………….நான்கெல்லை…. புன்செய் நத்தமும்…..இறையிலி கார்யவராச்சி…….உள்பட……….

விளக்கம்: இந்த கல்வெட்டு  சென்ற கல்வெட்டின் தொடர்ச்சி மீனாட்சி அம்மன் கோவில் முக்குருனி விநாயகர் அருகே உள்ள இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் கல்வெட்டாகும்.இதில் திருப்புவனம்-திருச்சுழி சாலையில் உள்ள  கன்மியார் கோட்டை மறவரில் பாண்டியனான தென்னவன் தென்கங்கரையன் என்பவனிடம்  பெற்ற நிலங்களின் விபரம் இந்த கல்வெட்டுகளில் வந்துள்ளது.இதே போல் கன்மியார் கோட்டை மறவர் ஊரில் உள்ள அரையன் பெயர் அதிகமான், தென்னவதரையன்,விழுப்பரையன் போன்றோர் இடம்பெற்ற செய்தியும்வந்துள்ளது. கன்மியார் கோட்டை மறவரில் தென்னவன் ஆழ்வான பாண்டியனான தென்னகங்கரையனும்,முத்தரையன் கோட்டை மறவரில் உடையான்தென்னவதரையனும் இந்த நிலங்களை விற்குமுன் வேறு ஒருவருக்கு ஒற்றி வைத்துள்ளனர் இதன் பின்னே இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.

இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:22 ARE 1962-63 NO.466மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.செய்தி: இதற்கு முன் பார்த்த 2 கல்வெட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம்.திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டைமுத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி .
கல்வெட்டு 5:கோ………கலி கெட கடவுள் வேதியர்..தொழில் கழங்க தெலிங்க சோனகஞ் சீனம் முதலாய ……சுடரொளி …பள்ளியரை கூடத்து பள்ளிபீடம்………….
…………..கொற்றிலக்கை……பற்றாக வரிஞ்சியூர்கிழான் திருக்கோடிக்காவல்…முத்தரையன் கோட்டை பற்றில் விலைகொண்ட சங்கரநாரயனேன்….புன்செய்க்கும்……….புன்செய்(நத்தமும்)…… பொன்வரியும் மற்றும்……….
பூம்பிழால் முத்தரையன் கோட்டை மறவரில்………………டையார்……வடக்கும் மேலெல்லை……வினியோகமும் தருவதான அச்சும்காரியவராய்ச்சியும்……… உட்பட………காங்கையிருக்கை…..பூம்பிலால் ……..மறவர் பக்கல்……..
…………முதல் ஜீவித பற்றாக இறையிலி……………………கூற்று….பராந்தகநல்லூர் இரும்…..திருமுடி…………..
விளக்கம்:இதற்க்கு முன் பார்த்த பூம்பிழால்,முத்தரையன் கோட்டை,கன்மியார்கோட்டைமறவரின் பெயரும் மறவர் பக்கலும் வந்துள்ள  நிலங்களை இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.

இந்த கல்வெட்டுகளின் மூலம் நாம் தெரிவது யாதெனில் பாண்டிய நாட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் அதன்முன்பும் பாண்டிய நாட்டுக்குட்பட்ட பூம்பிழாலை,முத்தரயன்கோட்டை,கன்மியார் கோட்டை மறவர்களும் நில உடைமை பெற்ற ஒரே சமூதாயமாய் வாழ்ந்து வருவது நிருபிக்க பட்டுள்ளது. மேலும் அந்த நிலங்களின் நாட்டார்,அரையர்,ஆழ்வார் என வந்துள்ள பலரும்மறவர் என அறிய காண்கிறோம்.

பூம்பிழால்,முத்தரையன் கோட்டை,கன்மியார் கோட்டை என்ற இடம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு தெற்கே திருச்சுழி செல்லும் வழியில்தொடராக வந்துள்ள ஊர்களாகும். மேற்கண்ட ஊர்களில் இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த மறவர்கள் தொகையாக வாழ்ந்து மேற்பட்ட பாண்டியர் காலத்தில் வருகின்றனர்.
மேலும் இவை தமிழக தொல்லியல் துறையின் மூலமாக வெளிக்கொனரபட்டுள்ளது.ARE 1962-63 கல்வெட்டு தென் இந்திய கல்வெட்டுகள் தொகுதி வருடம் 1962-63ல் வெளியாகிவுள்ளது அதில் வந்த செய்தி வெளியாகிவுள்ளது.

நன்றி:தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள்வருடம் 1962-63

This entry was posted in கல்வெட்டு, தேவர், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *