இடம் :வேலூர் காட்பாடி வட்டம் இராணிப்பேட்டை அருகில் பாலகுப்பம்
மன்னன் : முதலாம் இராஜஇராஜ சோழன்
செய்தி : காணி உரிமை கொடுத்தது
ஆண்டு :986கிபி
கல்வெட்டு :
ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து…..ஈழமும் இரட்டைபாடி கொண்ட……செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு…..ஸ்ரீ ராஜ ராஜ தேவர் காணி செய்து…. திருவாய்மொழி அருள….பாடுவூர் கோட்டது திரு பாணாப்பாடி பண்டரம் உடைய…. கன்னாடுஉடைய அத்தி விசயத்து தம்பிமாறும் கண்டன் மறவனும் இவர்கள்…..
சேது என்பது பாரத்தின் எல்லை "அசேது ஹிமாலயா". இமயமலையிலிருந்து
சேது கரை வரை உள்ள எல்லையை பாரத தேசம் என கூறுவர் குமரி முனை அல்ல
இராமேஸ்வரம் அருகே உள்ள சேது பாலத்தையே எல்லையாக கூறுவர் வடவர்.
இதன் காவலனுக்கு இராமரே பட்டாபிஷேகம் செய்து வைத்தார் என்ற கதைகளும் உண்டு
இவரை ஸ்ரீராமரின் அடியாரான குகன் வம்சத்தினர் என சிலர் கூறுவதுமுண்டு. இன்னும்
சிலர் தஞ்சை ஆண்ட ஸ்ரீ ராஜ ராஜன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவை காக்க
அமர்ந்த ஒரு தளபதி என கூறுவர். தொன்முது கரை காக்க அமர்ந்த கவுரியர் என்ற பாண்டியர் என்பவர் சிலர்.
இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் கலிங்க மாகன் என்ற சோழகங்க தேவனின் வம்சம் என இலங்கை வரலாற்றாளர் கருதுகின்றனர்.
நாயக்கர் காலத்தில் அமர்த்தபட்டவர் என்பர் சிலர். இல்லை காலம் காலமாக வாழ்ந்தவர் என்பர் சிலர். இப்படி
பல கதைகள் இருந்தாலும் நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்தவர் என கல்வெட்டு
1403 கல்வெட்டு கூறுகிறது.
சேதுபதி எந்த வம்சத்தவர்:
சேதுபதியின் செப்புபட்டயங்களில் செயதுங்கராயர் வங்கிஷம் என்ற வார்த்தை வருகிறது.
கல்வெடுகளிலும் செப்பேடுகளிலும் செம்பிவளநாடன்,பரராஜகேசரி,அகளங்கன்,ரவிகுலசேகரன்,வைகைவளநாடன்,மனுநீதி மன்னன்,
சேது காவலன் என பல என பல சோழனை சார்ந்த பட்டங்களும் பாண்டியரை சார்ந்த பட்டங்களும் வந்தாலும்.செம்பி வளநாடன் என்ற பட்டம் சோழனை சார்ந்தது என்ற
முடிவுக்கு வந்தாலும் இந்த செயதுங்கராயர் வங்கிஷம் என்பதி பொருள் முழுமையாக
புரியவில்லை.
பாண்டிய பேரரசு சிதரிய பின் தமிழகம் முகமதியர் பின் சிலகாலம் விஜயநகர பேரரசுவின் கீழ் சில காலம் இருந்தது. விஜயநகர பேரரசு காலத்தில் 72 பாளையபட்டுகளாக பிரிக்கபட்டு சில தமிழ் மன்னர்களுக்கும் அவர்கள் ஏற்கனவே ஆண்ட பகுதியை அங்கீகரித்திருந்தனர். அப்படி ஒண்று தான் முருக்க நாடு என்று அழைக்கபடும் இன்றைய வத்ராயிருப்பு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை உள்ள பகுதி இதன் பெயர் முருக்க நாடு என்று அழைக்கபட்டுள்ளது. இந்த பாளையம் 72 பாளையத்திலே ஒன்றாகும்.