தமிழ்ச் சமூக வரலாறு -2

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

தமிழ்ச் சமூக வரலாறு-1

ஆ. சிவசுப்பிரமணியன்
சங்க காலம்

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வௌ;வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின.
இதனடிப்படையில் வௌ;வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி )சங்ககாலத்தில் நிலவியது.
Posted in வரலாறு | Tagged | Leave a comment

குடுமியான்மலை – வரலாறு

சித்தன்னவாசலுக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த தொல்பொருள்துறை ஊழியர் சொல்லித்தான் குடுமியான்மலை பற்றித் தெரிந்துகொண்டோம். நானும் ஓட்டுநர் நண்பரும் குடுமியான்மலைக்குச் சென்று பார்த்த பின் பார்க்காமல் வந்திருந்தால் மிகச்சிறந்த கோயில் ஒன்றை பார்க்காமல் விட்டிருப்போம் என்றுதான் நினைத்தேன்.(சித்தன்னவாசல் பற்றி இன்னொரு தரம் எழுதுறேன்.)

Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கட்டபொம்முவும் உண்மையும்

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது வியப்பளிக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும் தவறுமாக, திரித்ததைப்போல். சினிமாக்காரர்களால் திரிக்கப்பட்ட கதைகளே அதிகம், பாரதி படம் பார்த்து வருத்தப்பட்ட உண்மையான் பாரதி விசுவாசிகளை பார்த்துள்ளேன். அது போல்தான் இதுவும்.

Continue reading →

Posted in தொண்டைமான் | Tagged | 1 Comment

ஒரு சோழ பரம்பரைக் கதை

திருமகள் போல பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனைக்கொள காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி… என்ற ராஜராஜ சோழனின் கட்டியம் எங்கே உரத்துக் கூறப்பட, அதன் பின் சோழம் சோழம் என்ரு வீரர்க்ள் டங்கள் கேடயத்தில் வேலை இடிக்கும் பெரும் சத்தமும் அதன் பின்பே தொடர்ந்தது, வந்தியத்தேவர் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு ஆசனத்தில் குந்தவை பிராட்டியும் அவரது மடியில் சோழ குல வாரிசு இராஜேந்திரன் உட்கார்ந்திருந்தான்.

“தேவி கேட்டாயா, சோழ ராஜ்ஜிய முழக்கத்தை. இங்கிருந்து கேட்கும் போழுதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.”

பிறகு ராஜேந்திரனிடம் திரும்பி, “ராஜேந்திரா நீயும் உன் தந்தை போலவே பெரும் பேரும் புகழும் அடையவேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பம்.”
Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

சிவகங்கையின் வரலாறு

1674 முதல் 1710ம் ஆண்டு வரை ரகுநாத சேதுபதி என்றழைக்கப்படும் கிழவன் சேதுபதி ராமநாதபுரத்தின் 7வது மன்னனாக இருந்தார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதலில் ராமநாதபுரமாக இருந்தது. சிவகங்கையிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோழபுரம் அருகே <உள்ள நாலுகோட்டையை சேர்ந்த பெரிய உடைய தேவர் வீரத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு சேதுபதி ஒரு பகுதி நிலத்தை வழங்கி 1000 வீரர்களையும் கொடுத்தான்.

Continue reading →

Posted in வரலாறு | Tagged | 3 Comments

கோச்செங்கண்

கோச்செங்கணான் யார் ?
இரா. கலைக்கோவன்

அத்தியாயம் 5
கோச்செங்கணான் சிவத்தொண்டரா வைணவ அடியாரா ?

‘செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட்கரு ணைபெரி தாயவனே
வெங்கண்விடை யாயெம் வெணாவலுளாய்
அங்கத்தயர் வாயினள் ஆயிழையே’ (64)

என்ற சம்பந்தரின் வரிகள் திருஆனைக்கா கோயிலை எடுப்பித்தவன் சோழன் கோச்செங்கணானே என்பதை எடுத்துரைக்கின்றன.

Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

தீண்டாமை சட்டத்தில் மாற்றம் தேவை-தேவரின் தம்பி பேரன் கோரிக்கை

தீண்டாமை வன் கொடுமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தம்பி பேரன் வெள்ளைச்சாமித் தேவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றாலத்தில் உள்ள கேரள அரண்மனையில் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் செயற்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் உறவினரும் அமைப்பின் தலைவருமான என்.வெள்ளைசாமி தேவர் கலந்து கொண்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

Posted in தேவர்கள் | Tagged | 1 Comment

தெய்வீகத்திற்கு உயிரையும் தேசியத்திற்கு உடலையும் அர்ப்பணித்த , தெய்வத்தின் மனித வடிவம் திரு உ . முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்கை குறிப்பு :


ஆன்மீக தலைவர்களாலும், மேதைகளாலும் போற்றி பாராட்டப்பட்ட பசும்பொன் தேவர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக சிறப்பு மிக்க, பெரும் செல்வாக்கு , அளப்பரிய நில உடமைகளை கொண்ட சிறந்த சீரிய குடும்பத்தில், 1980 – ம் வருடம் அக்டோபர் மதம் 30-ம் நாள் ( கீலக வருடம் ஐப்பசி மாதம் 15-ம் நாள் கந்த சஷ்டி திதியில் பூராட நட்சத்திரத்தில்) பசும்பொன் கிராமத்தில் பிறந்தார்.
Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 9 Comments

விவேகானந்தருக்கு உதவியது யார்?

1893 செப்டம்பர் திங்கள் அமேரிக்கா சிகாகோ நகரில்  உலக சமயப் பேரவை மாநாடு நடைபெற்றது.   உலகும் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்னர். இந்தியாவிலிருந்து சுவாமி விவேகானந்தர் அவர்களும் சமயப் பேரவையில் கலந்து கொண்டார்கள். இந்தியாவின் பெருமையை உலக அரங்கிலே ஒளிவீசச் செய்தார்கள்.

“சிகாகோவில் நடைபெறவிருக்கும் உலக மாநாட்டில் சுவாமிஜி கலந்து கொள்ளும்படி மைசூர் மகராஜா தான் ! முதலில் சுவாமிஜியை கேட்டுக் கொண்டார்” என்பதை திரு. சுந்தரராம ஐயர் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மை, என்று 1984 ஜூன் ஓம்சக்தி இதழில் பக்.23ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கூறப்பட்டுள்ளது,
“பல பத்திரிக்கைகள் அவரை பற்றிய தெளிவாக செய்திகள் வெளியிட்டுள்ளதை காண முடிகிறது. அதே சமயம் அவரைப் பற்றிய விரிவான செய்திகளைப் பத்திரிக்கைகளிலிருந்து பெற முடியவில்லை. திரு. சுந்தரராம ஐயர் மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் ஒரு உண்மை” என்று ஓம்சக்தி இதழ் அதே பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Continue reading →

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment